இன்று 16 - 9 - 2016 ( வெள்ளி கிழமை ) தமிழகம் முழுவதும் பந்த் !
கர்நாடகத்தில் தமிழ் பதிவெண் இட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டதற்கும் , தமிழர்கள் தாக்கப்பட்டதற்கும் எதிரிப்பு தெரிவித்து !
ஆனால் யாரை எதிர்த்து என்பதை குறித்து யாரும் விளக்கம் கொடுக்க வில்லை .
கர்நாடக அரசை எதிப்பதாயின் , கர்நாடாவில் போராட வேண்டும் .
மத்திய அரசை எதிர்ப்பதாயின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய் திறக்க வேண்டும் .
தமிழ் மக்கள் இலங்கையில் கொல்லப்பட்ட போது தி மு க அரசு சென்னையில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடத்தியது .
இதனால் தமிழ்மக்கள் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர்
காப்பாற்றப்பட்டார்களா ?
இப்போதும் அப்படிதான் நடக்கிறது !
அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.
காய்கறி கடைகள் மூடப்பட்டுள்ளன .
ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளன
தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன
தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன
யாருக்கு நஷ்டம் ?
கர்நாடக அரசுக்கா ?
மத்திய அரசுக்கா ?
பெரும் பணக்கார்களுக்கா ?
அரசியல் வாதிகளுக்கா ?
சாமான்ய தமிழன் இன்று ஒருநாள் ஊதியத்தை இழக்கிறான் !
இப்போராட்டத்தை நடத்தும் கட்சிகள் பெயர் வாங்குகின்றன.
பத்திரிகைகளும் , தொலைக்காட்சிகளும் காட்சி படுத்தி காசு பார்க்கின்றன .
அஹிம்சா வழி போராட்டம் என்ற பெயரில் காந்தி அடிகள் இது போன்ற போராட்டங்களை சுதந்திரத்திற்கு முன் நடத்தினார் . அப்படி நடத்தியதால் பிரிட்டிஷாரின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது .
இப்போது நடக்கும் போராட்டத்தால் எந்த பொருளாதாரம் பாதிக்க போகிறது .
இன்று மட்டும் குறைந்த பட்சம் 15000 கோடி நஷ்டம் ஏற்படும் என்று கூறுகிறார் வணிகர் சங்க தலைவர். இந்த நஷ்டத்தை யாருக்கு ஏற்படுத்தி இருக்க வேண்டும் ?
கர்நாடகாவுக்கு !
மத்திய அரசுக்கு !
செய்தோமா ? இல்லை . இப்போதும் அறிவிலி தனமாக , எவனோ பெயர் வாங்க நம்மை நாமே நஷ்டப்படுத்தி கொண்டிருக்கிறோம் .
போராட விரும்பினால் , பொருளாதார போராட்டம் நடத்து !
இது ஒன்றும் மன்னராட்சி அல்ல !
நம் வீரத்தை காட்ட !
இது மக்களாட்சி !
ஓங்கி அடி ! பொருளாதாரத்தில் இடி போலும் அடி !
கர்நாடகாவுக்கு மட்டும் அல்ல !
ஒட்டு மொத்த இந்தியாவுக்கே கூறு !
இந்தியா ஒரு கூட்டு குடும்ப நாடு . இங்கு ஒருவரை ஒருவர் அடித்தால் வேடிக்கை பார்க்கும் மற்ற மாநிலங்களுக்கும் சேர்த்து பாடம் நடத்து !
கர்நாடகத்தில் இருந்து வரும் பொருளை எல்லாம் நிறுத்து !
கர்நாடகத்திற்கு செல்லும் பொருளை எல்லாம் நிறுத்து !
மணல் லாரிகளே , நம் மண்ணை சுரண்டிதானே கர்நாடகத்தை வளமை படுத்தினாய் ! நிறுத்து ! மணல் கொடுப்பதை நிறுத்து !
மின்சாரம் வழங்குவதை நிறுத்து !
போக்குவரத்து சேவைகளை நிறுத்து !
துறைமுக சேவைகளை நிறுத்து !
தேனும் , மீனும் , காயும் , பழமும் வராது என்று கூறு !
கன்னட திரைப்படங்களை நிறுத்து !
கன்னட நடிகர்களை தமிழில் நடிக்க வைப்பதை நிறுத்து !
(அவன் யார் நமக்கு கருத்து சொல்ல ?)
இப்படி எல்லாம் செய்து விட்டால் , கர்நாடகம் ஒன்றும் இடிந்து விடாது .
வேறு ஒரு மாநிலத்தில் இருந்து இவற்றை எல்லாம் பெரும் . என்று எண்ணலாம் .!
ஆனால் அப்படி செய்ய இயலாது
தமிழகம் தான் மிக அருகில் உள்ளது . மற்றும் விலை குறைவாக பொருள் வழங்கும் மாநிலம் .
மற்ற மாநிலங்களில் வாங்கினால் விலை வாசி உயரும் !
அன்று ஏற்படும் பொருளாதார தடை ! அந்த நாளை உருவாக்கு !
ஏற்கனவே கர்நாடகம் , 75 % வறட்சி பூமிதான் !
சமீப காலமாக கணினி தொழில் நிறுவனங்கள் வந்து தான் கர்நாடகம் பெயர் பெற்றது .
அதையும் மாற்றி காட்டு !
ஒவ்வொரு 4 ஆண்டுக்கு ஒரு முறையும் ,ஆட்சி மாற வேண்டும் என்ற நோக்கில் கர்னாடக அரசியல் வாதிகள் , காவிரி பிரச்சனையை கையில் எடுப்பதும், இதற்காக தமிழர்களை வதைப்பதும் சரியாகாது !
இதை சொன்னால் கன்னட மக்கள் காதிலும் விழாது !
ஏன் ?
இன்றைய நிலைக்கு இங்கு வாழும் பூர்வ குடி தமிழர்கள் கூட ஏற்பதில்லை .
அவர்களும் சேர்ந்து அடிக்க தயாராக உள்ளனர் .
நாம் புரிந்து கொள்ள வேண்டும் !
யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழன் போராடுகிறான் , இந்திய தூதரகத்தின் முன்!
பிரிட்டன் தமிழன் போராடுகிறான் இந்திய தூதரகத்தின் முன் !
மலேசியாவில் பேசுகிறான் தமிழன் , எப்படி போராட்டம் இருக்க வேண்டுமென்று !
இவர்களுக்கெல்லாம் தெரிகிறது , எங்கு பேச வேண்டும் , எங்கு போராட வேண்டும் என்று !
தமிழகத்தில் மட்டும் ஏன் இன்னும் பயனில்லா போராட்டங்கள் நடக்கின்றன ?
இதுதான் இன்னும் புரியவில்லை .
நமக்கு தேவை பாதிப்பில்லா போராட்டங்கள் !
அவை பயனில்லாமல் தான் முடியும் !
குறிப்பு :
இப்பிரச்சனை குறித்து தமிழக அரசியல் வாதிகளின் கருத்துக்கள் :
தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு இழப்பீடு, கர்நாடக அரசே வழங்க வேண்டும்: மத்திய இணையமைச்சர்
பொன்.ராதாகிருஷ்ணன்
முழு அடைப்பு போராட்டத்தால் காவிரி பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே நிரந்தர தீர்வு தரும் :
அன்புமணி
காவேரி விவகாரத்தில் ரஜினி தலையிட வேண்டும் -
தமிழிசை சௌந்தர்ராஜன்
அணைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய மறுக்கிறார் தமிழக முதல்வர் . ஏன் என்பதுதான் புரியவில்லை ?
மு.க.ஸ்டாலின்
1983 ல் எதிர் கட்சி தலைவராக இருந்த போது , இது போன்ற பிரச்சனையில் நானே நேரடியாக தலையிட்டு , தண்ணீர் வழங்க கர்நாடகாவிடம் கேட்டேன் .
கலைஞர் கருணாநிதி
நடிகையாக இருந்த காலத்தில் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்தேன் . அதில் என்னை தமிழச்சி என்று குறிப்பிட்டதால் , கன்னட காரர்கள் வந்து மிரட்டினார்கள் . அப்போதும் நான் என்னை தமிழச்சி என்றே கூறி கொண்டேன்.
ஜெயலலிதா சார்பாக விகடன்
எல்லாம் பழைய கதை .
பயனில்லா கதை .
போராடு
என்ன விதைத்தாயோ அது தான் முளைக்கும் !
விதை சொத்தையாக இருக்க கூடாது
வீரிய விதைகளை விதை !
அது
முளைக்கட்டும் !
தமிழன் பெயர் சொல்லி
மரமாகி தழைக்கட்டும் !
தகப்பன் இல்லா பிள்ளை அல்ல தமிழ்நாடு !
தரணிக்கே
தகப்பன் போல்
வழி காட்டு ம் வெள்ளை உள்ளம் கொண்ட
உயர்வோடு
போராடு !
No comments:
Post a Comment