இட்லி நம் நாட்டின் பூர்வீக உணவு. நாம் இப்படி கூற இது இந்தோனேசியா உணவு என்று கூறுவோரும் உண்டு. ஆனால் இந்தோனேசியா என்பது புராண காலங்களில் தமிழர்கள் வாழ்ந்த இடம் என்று கூறுபவர்களும் உள்ளனர்.
சரி விடுங்க !
இந்த உலகம் ஒப்பு கொண்ட உண்மை என்னவெனில் , குழந்தைகள் கூட உண்ண கூடிய உணவு எது எனில் அது இட்லி மட்டுமே !
எத்தனை வகையான இட்லி சாப்புடுவீங்க ?
அரிசி மாவு இட்லி
காஞ்சிபுரம் இட்லி
ரவா இட்லி
ஓட்ஸ் இட்லி
மசாலா இட்லி
பட்டன் இட்லி
ரவாவும் உளுந்தும் கலந்து செய்தா அது ரவா இட்லி
ஓட்ஸை ஊற வைத்து அதில கொஞ்சம் மசாலா கலந்து செய்தா ஓட்ஸ் இட்லி .
அதே அரிசி மாவுல குட்டி குட்டி ஊற்றி சாம்பார்ல ஊற வச்சி சாப்பிட்ட அது பட்டன் இட்லி .
பட்டன் மசாலா இட்லி
ஓட்ஸ் அல்லது அரிசி , உளுந்து மாவில் பாலக் கீரையை சுத்தம் செய்து நரம்பு எடுத்து விட்டு அரைத்து சாறு கலந்து ஊற்றி எடுத்தா அது பாலக் இட்லி .
பாலக் ஒட்ஸ் இட்லி
அரிசி மற்றும் உளுந்து மாவில் கடுகு ,மிளகாய் தாளித்து அல்லது கேரட் துருவல் சேர்த்து கலந்த மாவை அதை இட்லி பானை வைத்து ஊற்றி எடுக்காமல் ,இதற்கென்று உள்ள குழாய் போன்ற ஒரு பாத்திரத்தில் ஊற்றி எடுத்து அதன் பிறகு அதனை சிறு சிறு பகுதிகளாக பிரித்து எடுத்தால் அது தாங்க காஞ்சிபுரம் இட்லி .
காஞ்சிபுரம் இட்லி
இதுல மல்லிகைப்பூ மாதிரி இட்லி என்பது என்ன ?
மல்லிகை பூ மாதிரி வெள்ளையா இருக்கணுமா ?
மல்லிகைப்பூ எப்போ ரொம்ப வெள்ளையா இருந்திச்சி ?
யாராவது பார்த்த சொல்லுங்க . ஏன்னா மல்லிகை பூ வெளிர் மஞ்சள் நிறமாக தான் இருக்கும் .
அப்புறம் இட்லி வெள்ளையா இருக்க கூடாதுங்க !
ஏன்னா
மல்லிகை பூ இட்லி என்பது கூட , வெள்ளை கிடையாது . தூய மல்லி அரிசி என்ற ஒரு பாரம்பரிய அரிசி இருக்கு . அந்த அரிசியில் உளுந்து கலந்து செய்த இட்லிக்கு பெயர்தான் மல்லி இட்லி .
பெயர் மருவி போய் மல்லிகை பூ இட்லி என்றாகி நம் வெள்ளை மோகத்தில் வந்து விழுந்ததுதான் விதவிதமான இட்லி வகைகள் .
டாக்டர் சிவராமன் கூறுகிறார் .
இட்லின்னா கொஞ்சம் கருப்பா இருக்கும்.
இட்லின்னா கொஞ்சம் சிவப்பா இருக்கும்
இட்லின்னா கொஞ்சம் காபி நிறமா இருக்கும் .
அப்புடின்னு !
ஆக
இட்லி என்பது வெள்ளையாகவே இருக்காது என்று கூறுகிறார்.
அதெப்புடி கருப்பா இருக்கும் ?
ஆமாங்க ! கொஞ்சம் கறுப்பரிசி போட்டு செய்யுங்க ! இந்த கருப்பு அரிசி என்பது கருப்பு கவுனி அரிசிங்க !
1 பங்கு அரிசிக்கு 4 : 1 என்ற விகிதத்தில் உளுந்து , ஒரு ஸ்பூன் வெந்தயம் கலந்து ஊற வைச்சி அரைத்து இட்லி ஊற்றி எடுங்க . கருப்பு இட்லி தயார் .
அதே மாதிரி மூங்கில் அரிசி பயன்படுத்துங்க !
அதே அளவில் பூங்கார் அரிசி , மாப்பிளை சாம்பா , இலுப்ப பூ சம்பா சிகப்பு கவுனி இதெல்லாம் பயன்படுத்துங்க !
குழந்தைங்க இதெல்லாம் சாப்பிட மாட்டாங்க !
அப்புடின்னு தோணும் !
இதில உங்க விருப்ப படி கேரட் சாறு , பீட்ரூட் சாறு , பாலக் சாறு , கொத்தமல்லி சாறு இதெல்லாம் கலந்து வண்ண வண்ணமா எடுங்க ! கண்டிப்பா குழந்தைகளுக்கு பிடிக்கும்.
இது நிஜமாகவே ரொம்ப சுவையாக இருக்கும் !
செய்முறை :
மறந்துறாதீங்க ! இது போன்ற அரிசி வகைகள் ஊறுவதற்கு ரொம்ப நேரம் எடுக்கும். அதனால் முதல் நாள் மாலை ஊறவைத்து மறுநாள் காலையில் அரைங்க ! வெள்ளை உளுந்தாக இருந்தால் 1 கிலோஅரிசிக்கு கால் கிலோ உளுந்து போடுங்க ! அதையும் 40 முதல் 50 நிமிடங்கள் மட்டுமே ஊற வைக்கணும் !
கருப்பு உளுந்தாக இருந்தால் , கால் கிலோ தேவை இல்லை 150 கிராம் முதல் 200 கிராம் போதுமானது .
இது பூங்கார் அரிசி இட்லி
இது ஆரோக்கியமான இட்லி . உடலுக்கும் , மனசுக்கும் புத்துணர்ச்சி தரும் .
பூங்கார் அரிசியில் இட்லி கர்ப்பிணி பெண்களுக்கும் , குழந்தைகளுக்கும் அவசியம் .
மாப்பிள்ளை சம்பா இட்லி , புது மாப்பிள்ளைக்கு அவசியம் .
மல்லி அரிசி இட்லி எல்லோருக்கும் அவசியம் .
இட்லியின் நிறம் வெள்ளை இல்லங்க !
அது நம் தமிழர்களின் நிறம் !

No comments:
Post a Comment