வீரப்பன் (1952 - 2004)
இறந்த தினம் இன்று
'தந்தங்களுக்காக யானைகளைக் கொன்றவர்' , 'சந்தனக்கட்டை கடத்தல் செய்தவர்' என்று இந்திய அரசாலும், தமிழக மற்றும் அண்டை மாநில திராவிட அரசுகளாலும் அறிமுகமானார்.
சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் மறைந்து வாழ்ந்தார்.
...தந்தங்களாகவும் , சந்தன மரங்களாகவும் இவர் மூலம் சுமார் 150 கோடி வணிகம் நடந்துள்ளது என்பது இவர் மீதுள்ள குற்றசாட்டு ! ஆனால் இவரோடு யாருக்கு வணிகம் இருந்தது என்பது குறித்து அரசும் இதுவரை தெரிவிக்க வில்லை !
அதே நேரம் ,
சமீப காலமாக வீரப்பன் குறித்து பல்வேறு நல்ல கருத்துக்கள் பகிர படுகின்ற்ன.
வீரப்பனால்தான் காவிரி நீர் தமிழ்நாட்டிற்கு வந்தது என்றும் ,
கர்நாடகம் அமைதி காத்தது என்றும் ,
ஏகப்பட்ட கருத்துக்கள் !
தமிழர்களுக்கு பாதுகாப்பு தர சொல்லியும் , கர்நாடகத்தில் வள்ளுவர் சிலை திறக்க சொல்லியும் போராடினார் என்றும் கூறப்படுகிறது !
புரியல !
அவர் இன்று உயிரோடு இல்லை என்பதால் தான் தமிழ் இனமே தாழ்ந்து விட்டது போலும் கருத்துக்கள் பரப்பப்படுகின்றன !
இவர்கள் கருத்துப்படி பார்த்தால்
வீரப்பன் ஒன்றும் சாதாரண மனிதர் அல்லவே !
அவர் நக்கீரன் கோபால் துணையோடு நிறைய வீடியோக்கள் வெளியிட்டுள்ளார். ஆனால் ஒரு வீடியோவிலும் தான் யாருக்காக செய்கிறோம் என்றோ , யாரிடம் வணிக தொடர்பு வைத்திருக்கிறோம் என்றோ கூற வில்லை.
ஏன் ?
அவருக்கு நன்றாக தெரியும் , அவர் பின்னால் இருப்பவர்கள் யாரும் நல்லவர்கள் இல்லை என்று ! அவரை எப்படியும் கொன்று விடுவார்கள் என்றும் தெரிந்திருக்கும்.! அப்படி இருக்க , அவர் எந்த திருடனையும் காட்டி கொடுக்காமல் சென்றது ஏன் ?செய்திருக்கலாமே ! இந்த கேள்வி தான் அவரை தவறான மனிதராக சித்தரிக்கிறது .
அவர் தனது குடும்பத்திற்காக ஏதும் செய்யவில்லை என்பதற்க்கு அவர் மனைவி தற்போது வாழும் வாழ்வே சாட்சி ! எனில் இத்தனை கோடி கொள்ளைக்கு துணை நின்ற வீரப்பன் , நேரடியாக கூறியிருந்தால் இந்த திராவிட கட்சிகளாவது ஒழிந்திருக்குமே !
பிரபாகரன் தமிழ் இனத்திற்காக நேரடியாக போராடினார் . அதில் நியாயம் உள்ளது . அது தீவிரவாதம் அல்ல , அது ஒரு சுதந்திர போராட்டம் என்று , உலகமும் ஒப்பு கொண்டுவிட்டது .
ஆனால் ,
வீரப்பன் நிலை என்ன ? அவர்,
சந்தன கடத்தல் மூலம் போராட வேண்டிய அவசியம் என்ன ? அவரை தேடி வந்த காவல் துறை தான் , அங்கிருந்த பெண்களை துன்புறுத்தியது. அங்கு நடந்த தவறுகள் அனைத்திற்கும் அவரே மூல காரணம் . இதை தெரிந்தும் ஏன் அவர் சரண் அடைய வில்லை . அதற்க்கு பதிலாக , காவல் துறையினரை கொன்று நற்பெயர் தேடியது என்ன நியாயம் ?
வீரப்பன் போராட்டம் நிகழ்த்திய வீடியோ இருந்தால் பகிருங்கள் ! குறைந்த பட்சம் அவர் போராடிய நாட்களையாவது குறிப்பிடுங்கள் !
No comments:
Post a Comment