Friday, 21 October 2016

சிவகாசி பட்டாசு

தீபாவளி நெருங்கி கொண்டிருக்கும் வேளையில் , நம் அனைவருக்கும் நினைவில் வருவது பட்டாசு மற்றும் புதிய ஆடைகள் மற்றும் இனிப்புகள்.

புதிய ஆடைகள், இனிப்புகள்  என்பவை கூட இப்போதெல்லாம் ஆடி மாதமும் , பிற பண்டிகைகளும் பங்கிட்டு கொள்கின்றன . அனால் பட்டாசுகள் அப்படி எந்த பண்டிகையாலும் பங்கிட முடியாத நிலையில் , தீபாவளியையே சார்ந்து உள்ளது. அதிலும் நம்ம சிவகாசி பட்டாசு இந்தியா முழுவதும் பிரபலம்.


sivakasi crackers க்கான பட முடிவு


கி.மு.200 களில் சீன மக்களால் கண்டறியப்பட்ட பட்டாசு , முதலில் பனை ஓலைகளில் தயாரிக்கப்பட்டு , பின்னர் காகிதத்திற்கு மாறியது . அதன் பின்னர் தான் உலகம் முழுவதும் பட்டாசுகள் பரவின .

19ம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் கல்கத்தாவில் தொடங்கப்பட்ட , பட்டாசு தொழிற்சாலையானது , 1940 களில் சிவகாசிக்கு மாற்றம் செய்யப்பட்டது.  இதற்க்கு குறிப்பிடப்படும் சில காரணங்கள் :

1. சிவகாசியின் காலநிலை . முற்றிலும் வறண்ட பூமி. அக்டோபர் , நவம்பர் , டிசம்பர் தவிர்த்து மற்ற மாதங்கள் முழுவதும் வெயில் காலந்தான்.

2. விவசாயம் பொய்த்து போனது. பருத்தி உற்பத்தியும் , சிறுதானிய உற்பத்தியும் மக்களுக்கு போதிய வருவாய் தரவில்லை.

3. போதிய வேலைவாய்ப்பின்மை காரணமாகவும் , பொருளாதார ஏற்ற தாழ்வு காரணமாகவும் , பூர்வீகத்தை அடிப்படியாக கொண்டு இங்கு அடிக்கடி நடந்த கலவரங்கள் . நாடார்களுக்கு , மறவர்களுக்கும் நடந்த சண்டையில் சிலர் மரணம் அடைந்துள்ளனர் .

4. இந்தியா வெடிபொருள் சட்டம் சிவகாசிக்கு உரிமம் வழங்கியது .

இது போன்ற காரணங்களால் தொடங்கப்பட்ட பட்டாசு தொழிசாலைகள் இன்று பல்கி பெருகி நிற்கின்றன. இந்தியா முழுவதும் பட்டாசுகள் இங்கிருந்து தான் செல்கின்றன.

உலகிலேயே சீனாவிற்கு அடுத்தபடியாக இங்கு தான் அதிக பட்டாசுகள் உற்பத்தி செய்ய படுகின்றன .

தற்போது 8000 உற்பத்தி மையங்கள் இங்கு உள்ளன. 500 நிறுவன உரிமையாளர்கள்  இங்கு உள்ளன.


இது மட்டும் அல்லாது , காகித உற்பத்தி இங்குதான் செய்யப்படுகிறது . இந்தியாவின் 30 % காகித தேவைகள் இங்கிருந்து சரி செய்ய படுகிறது .

டைரி உற்பத்தியும் , காலண்டர்கள் உற்பத்தியும் இங்கிருந்து தான் இந்திய முழுவதும் செல்கிறது .

தீப்பெட்டி தொழிற்சாலைகளும் , இந்தியாவிற்கு போதிய தேவைகளை தீர்கின்றன .


sivakasi crackers க்கான பட முடிவு


இவ்வாறாக , சிவகாசி மூலம் இந்தியாவிற்கு ஆண்டு வருமானம் , ரூபாய் 2000 கோடி ஆக உள்ளது .


குட்டி ஜப்பான் என்று வழங்கப்படும் , சிவகாசி , நமக்கு பட்டாசுகளையும் , இந்தியாவிற்கு வருமானத்தையும் தேடி தருகிறது.

அனால் தனக்குள் பல விபத்துக்களையும் சுமந்து நிற்கிறது .  1981 ம் ஆண்டு குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தின் படி இங்கு பணியாற்றிய குழந்தைகள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டனர்.

இருப்பினும் , 1991 , மற்றும் 2004 ம் ஆண்டுகளில் குறைந்த பட்சம் 40 பேரை பலி கொடுத்திருக்கிறார்கள் இம்மக்கள் . ஏன் , ஆண்டு தோறும் இது போன்று விபத்துகள் தொடர்ந்து  இருக்கின்றன.

2 நாட்களுக்கு முன்பு கூட 19 - 10 - 2016 அன்றும் 9 பேர் உடல் கருகி இறந்துள்ளனர் .

இத்தனை கஷ்டங்களுக்கு இடையிலும் நம் அனைவர் மகிழ்ச்சியிலும் பங்கெடுக்கும் சிவகாசி பட்டாசுகளை மாற்றாக சீனா பட்டாசுகளை வலம் வருகின்றன .

 தமிழ்நாடு பட்டாசு தொழிசாலை சங்கத்தின்  மூத்த உறுப்பினர்
 K . மாரியப்பன் கூறுகையில் ,(Tamil Nadu Fireworks and Amorces Manufacturers Association (TNFAMA), Sivakasi, ) இதுவரையிலும் இந்தியா அரசாங்கம் , எந்த ஒரு நிறுவனத்திற்கும் இந்தியாவில் பட்டாசு இறக்குமதி செய்ய உரிமை வழங்கவில்லை என்று கூறி உள்ளார். 

எனில் நம் கைகளுக்கு கிடைக்கும் பட்டாசுகள் திருட்டு பட்டாசுகள் . இதை நாம் பயன்படுத்துவது , நம் நாட்டின் பொருளாதாரத்திற்கு நாம் செய்யும் தீங்கு .

நம் தமிழர்களுக்கு , நாமே செய்யும் கேடு !

சிவகாசி இருக்க
சீனா பட்டாசுகள் நமக்கெதற்கு ?


Ref : இந்தியா டுடே ( oct 14.2014 )

No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...