மகாபாரதம் ஒரு பாடம் நடத்துகிறது என்பது அனைவரும் அறிந்ததே ! அனால் என்ன பாடம் என்பதில் பல கருத்துகள் மறைக்கபடுகிறது .
# கதையின் தொடக்கத்திலேயே , சாந்தனு மன்னன் ஒரு மீனவ பெண்ணை மணந்து கொள்கிறான். அவள் வழியாக பிறக்கும் ஆண் குழந்தைகள் ஆண்மையற்றவர்களாய் இருக்கிறார்கள்.
எனவே வேறு குலத்து பெண்ணை மணக்காதே என்று கூற படுகிறது.
# குந்தி தேவி எனப்படும் பிரபாவும் மாதுரியும் அவர்கள் கணவன் வழியாக பிள்ளை பெறவில்லை. வேறு வழியில் பெறும் அப்பிள்ளைகள் பலசாலியாக இருக்கிறார்கள்.
ஆரியர்கள் மூலம் பிறக்கும் பிள்ளைகள் மிகுந்த திறமைசாலிகளாக இருப்பார்கள் என்பது வலியுறுத்த படுகிறது.
# ஹம்சனின் தாயும் வேறு ஆண் மூலம் ஹம்சனை பெறுகிறாள். ஆனால் அவன் ஆரியன் அல்ல. அதனால் அவன் கெட்டவன் ஆகிறான்.
ஆரியர் அல்லாத வேறு ஆண் மூலம் பிள்ளை பெற்றால் அவன் கெட்டவனாக பிறப்பான் என்று பயமுறுத்த படுகிறது.
# கர்ணனை பரசு ராமர் , நீ ஒரு க்ஷத்ரியன் . அதனால் நான் நடத்திய பாடம் உனக்கு பயன் படாமல் போகட்டும் என்று சபிக்கிறார்.
பிராமணர்களை தவிர வேறு பிறர் தனுர் வித்தை எனும் அறிவியலை கற்க கூடாது என்றும் , ஆரியர் அல்லாத ஒருவர் , அவன் க்ஷதிரியனே ஆனாலும் அறிவியல் கற்க தடை விதிக்க படுகிறது. கர்ணனின் நிலைதான் ஏகலைவனுக்கும். ஆனால் அதே கதையில் பீஷ்மருக்கும் , கற்று தருகிறார் பரசுராமர் . பீஷ்மர் ஒரு க்ஷத்ரியன் தானே. ஆனால் அவர் ஆரியன்.
# 5 ஆண்களை ஒரு பெண் மணந்து கொள்கிறாள். ஆனாலும் அவள் பத்தினி.
அந்த 5 பேரை தவிர வேறு ஆண்களை அவள நினைக்கவும் இல்லை என்று பொருள் .எனில் 5 பேர் வரை ஒரு பெண் மணக்கலாம் என்று வரையறை வழங்க படுகிறது.
# பாஞ்சாலியை துகில் உறிகிறான் துரியோதனன். அப்போதும் அழைத்தால் மட்டுமே வந்து காப்பேன் என்கிறான் கிருஷ்ணன் .
ஒரு பெண்ணே துன்பத்தில் இருந்தாலும் அழைக்காமல் உதவிக்கு எவரும் வரக்கூடாது என்பது வலியுறுத்தபடுகிறது .
ஆனால் தமிழில் வள்ளுவர் கூறுகிறார்
" உடுக்கை இழந்தவன் கைபோலே ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
# இந்த கதை எழுதப்பட்ட காலத்தில் பெண் கணவனின் சொத்தா அல்லவா என்ற கேள்விக்கு தான் சூதட்டகளம் பதில் கூறுகிறது.
# அபிமன்யுவும் கொள்ள படுகிறான் .விராட நாட்டு இளவரசிக்கும் , அபிமன்யுவுக்கும் பிறக்க வேண்டிய குழந்தை கருவில் கலைந்து பின் கிருஷ்ணனின் அருளாலேயே குழந்தை வளர்கிறது .
# பகவத்கீதையை எழுதியவர் வியாசர் தான். கிருஷ்ணன் என்ற மன்னனின் பெயரை கதை முழுவதும் பயன்படுத்தியது வியாசர் தான். பகவத் கீதை யின் கருத்துக்கள் அனைத்தும் ப்ரவாஹன் என்பவர் எழுதிய பிரம்ம ஞான தத்துவத்தை ஒத்து இருக்கிறது. அதன் கருத்துப்படி மக்களை அடிமை ஆக்கி துன்புறுத்தும் போது , ஏன் எங்களை கொடுமை படுத்துகிறீர்கள் என எவரேனும் கேள்வி எழுப்பினால் , இது நீ செய்த பூர்வஜென்ம பலன். போன பிறவியிலே நீ எதோ தவறு செய்துறுகிறாய்
அதனால் தான் இந்த பிறவியில் நீ அடிமை ஆனாய் . என்று கூறி விடலாம்.
# சுங்க வம்சத்து மன்னர்கள் பிராமணர்கள் . அவர்களை தொடர்ந்து வந்த குப்தர்களும் பிராமண புகழ்ச்சியில் திளைத்தவர்கள் . அதன் விளைவே குப்தர் கால கட்டிட கலை வளர்ச்சி. கட்டப்பட்ட கோவில்கள் அனைத்தும் அடிமைகள் வேண்டும் என்று அரை கூவின. அக்கோவில்கள் பிராமணர்களுக்கு செல்வத்தை வாரி வழங்கின. அதனால் தான் குப்தர் காலம் பொற்காலம் ஆனது. அத்தருணத்தில் பிராமண விதி முறைகள் குறித்து விளக்கம் கொடுக்க வேண்டி அவர்கள் வியாசருக்கு கொடுத்த வேலையை அவர் செய்திருக்கிறார்.
# ஒரே கருத்துதான் பிராமண ஆண்கள் வேறு குல பெண்ணை மணக்க கூடாது.
# ஆரிய பெண்கள் அவர்கள் கணவனுக்கு சொத்து போன்றவர்கள்.
# ஆரிய பெண்கள் அதிகபடியாக 5 கணவன் வரை மணந்து கொள்ளலாம். இவ்வழக்கம் திபெத்திய மலை அடிவாரத்தில் இருக்கிறதாம்.
#இவை எல்லாம் ஆரிய சமுதாய எச்சரிக்கை.
இவை எல்லாம் 2500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவை . பிராமண சமுதாயம் தன் வாழ்க்கை முறையையும் , உணவு முறையையும் மாற்றி விட்டது எனவே இக்கதை தற்காலத்திற்கு பொருந்தாத கதை.
ஆம் பிராமணகள் தான் அசைவம் உண்டவர்கள் . அதிலும் பசு மாட்டு கரி தான் . பீமனக்கு மிகவும் பிடித்த உணவு இளங்கன்றின் இறைச்சிதான் . இதை லட்டு என்று மாற்றியதேல்லாம் தற்போது எழுதப்பட்ட கதைதான் .
அதே காலகட்டத்தில் சைவ உணவு உண்டவர்கள் தமிழர்கள் . இன்றும் எங்கெல்லாம் பசுவதை மேடம் இருக்கிறது என்று யோசித்து பாருங்கள் .
கேரளாவில் உண்டு . தமிழ் நாட்டில் இல்லை .
ஆதாரம் : [ பிரம்ம ஞான கருத்து : குப்தர்கள் காலம் :]வோல்காவில் இருந்து கங்கை வரை. எழுதியவர் : ராகுல்ஜி தமிழில்: கண முத்தையா
திபெத்திய பெண்கள் கருத்து : விவேகனந்தர் உரை :ஜூலை 15 1895
இக்கதை தமிழனுக்கு எதற்கு ?