2015 ம் ஆண்டு ஜூலை 27 ம் நாள் யாராலும் மறக்க முடியாத நாள். ஏனெனில் அன்றுதான் ஐயா அப்துல் கலாம் அவர்கள் மறைந்த நாள் . அவரது கனவு படி 2020 ல் இந்தியா வல்லரசு ஆக வேண்டுமெனில் , முதலில் கல்வி துறையே மாற்றம் பெற வேண்டும் . அவர் விரும்பியபடி மாணவர்களே அந்த மாற்றத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும் .
மாற்றம் வரவேண்டுமெனில் சில முடிவுகள் எடுக்க வேண்டும் :
1. டியூஷன் முறைகளை ஒழிப்பது . அதற்க்கு நாம் செய்ய வேண்டியது .
இனி தினந்தோறும் குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது யாரேனும் மற்றொரு மாணவருக்கு பாடம் சொல்லி தருவது.
P .G படிப்பவர் எனில் U .G படிப்பவருக்கும் ,
U .G படிப்பவர் எனில் பனிரெண்டாம் வகுப்பு படிப்பவருக்கும் ,
பனிரெண்டாம் வகுப்பு படிப்பவர் எனில் பத்தாம் வகுப்பு படிப்பவருக்கும் ,
பத்தாம் வகுப்பு படிப்பவர் எனில் எட்டாம் வகுப்பு படிப்பவருக்கும்,
எட்டாம் வகுப்பு படிப்பவர் எனில் ஐந்தாம் வகுப்பு படிப்பவருக்கும் , தனது படிப்பு நேரம் தவிர்த்து , குறைந்த பட்சம் ஒரு மணி நேரம்
இலவசமாக பாடம் சொல்லி தருவது.
இவ்வாறு செய்தால் டியூஷன் என்ற பெயரால் நடக்கபடும் தவறுகள் தடுக்க படும். ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தனக்கென தனி மாணவர்களை வைத்து பாடம் நடத்துவது தடுக்க படும் . தகுதியான ஆசிரியர்கள் அனைவருக்கும் கிடைப்பர் .
2. Macaulay ன் இந்த கல்வி முறையில் இருந்து வெளி வருவது. ஆம் இந்த கல்வி திட்டமானது நம்மையெல்லாம் அடிமைகளாக மாற்ற Macaulay எனும் ஆங்கிலேயன் 1835 -40 களில் தானே தயாரித்த கல்வி திட்டம் . அதற்க்கான காரணத்தை அவருடைய கடிதம் வாயிலாக நாம் அறிவோம். இதோ அக்கடிதம்,
இதிலிருந்து வெளி வர வேண்டும் எனில் தெரியாத விஷயங்களை , தெளிவு படுத்த ஆசிரியரை வலியுறுத்த வேண்டும் . ( a2 + b 2 ) இது எந்தெந்த இடங்களில் பயன்படுத்த படுகிறது என்பன போன்று எல்லா பாடங்களுக்கும் பயன்பாடுகள் அறிந்து கொள்ள வேண்டும்.
3. கணிதமும் , அறிவியலும் வெறும் மனப்பாடம் செய்யும் பாடங்களாக இருப்பதிலிருந்து வெளிவருவது . அதன் ஒவ்வொரு சூத்திரமும் எங்கு பயன்படுத்த படுகிறது என்பதை அறிவது . இது ஒன்றே A .P .J .அப்துல் கலாம் அவர்கள் கூறிய அறிவியல் தமிழ் வளர உதவும்.
4. எந்த பாடத்திற்கும் விளக்கம் அளிக்காத கல்வியை புறக்கணிக்க வேண்டும்..
5. நல்ல கல்வியாளனாக மாற வேண்டும் , தரமான ஆசிரியர்களை
உருவாக்க வேண்டும் .
6. ஏதேனும் ஒரு அறிவியலாளரின் கதையோ , கட்டுரையோ படிப்பதை வழக்கமாக மாற்றி கொள்ள வேண்டும் .
7. வெறும் மதிப்பெண்களுக்காக படித்து , மதிபெண்ணுக்காகவே வாழும் மடமையில் இருந்து வெளியேற வேண்டும்.
8. பாஸ் , பெயில் , grade , இது போன்ற மாயையில் இருந்து வெளி வந்து , எந்த ஒரு பாடத்தையும் கற்று கொள்ள முயற்சிக்க வேண்டும். .
9. அறிவியலோடு , அரசியலும் , ஆன்மிகம் என்ற பெயரில் நடப்பவைகளையும் அறிந்து கொள்ள வேண்டும்.
10. விஞ்ஞானத்தோடு , நம் வாழ்வுக்கு தேவையான விவசாயத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் .
அது அதற்கென்று தனிதனி துறைகள் உண்டு . அங்கு சென்றால் மட்டும்தான் அதை படிக்க முடியும் என்பதும், ஒருவர் ஒரு துறையை மட்டும்தான் படிக்க வேண்டும் என்பதும் நமக்காக ஏற்படுத்த பட்ட மாயைகள்.
நம்மையெல்லாம் மார்க் என்ற மோகத்திற்குள் தள்ளி நம்மை எதற்க்காக தயாரிக்கிறார்கள் என்பதை நமக்கே தெரியாமல் , செய்து நம்மை சுற்றிலும் மாய வலை பின்னியதன் விளைவுதான் இன்று நாம் உண்ணும் காய்கறிகள் கூட விஷமாக மாற காரணம் .
படித்தால் கேள்வி கேட்டுவிடுவான் என்று எந்தெந்த துறைகளில் தோன்றியதோ அத்துறை சார்ந்த எந்த ஒரு பாடமும் சராசரி மாணவனுக்கு போய் சேர விடாமல் தடுக்கவே , மருத்துவம்,வானியல் , வேளாண்மை, சட்டம், விலங்கியல் , பிரமிடு போன்ற நமது பழைய கட்டட கலை முறைகள், பண மதிப்பு எப்போதிருந்து பிற நாடுகளை விட குறைந்து போனது
இவை எதுவும் நம் பாட புத்தகங்களில் இணைக்க படவில்லை .
எனில் கடந்த 250 ஆண்டுகளாக இந்த துறைகளில் எல்லாம் எதோ தவறுக்கான அடித்தளம் விதைக்க பட்டிருக்கிறது .
பணக்கார்கள் மட்டும் இதை படிக்கும் போது , பணத்தை சம்பாதிக்க மட்டுமே அவர்களுக்கும் கற்றுத்தர படுகிறது
( இதோ இந்திய பண மதிப்பு அமெரிக்கவுடுன் ஒரு ஒப்பிடு பட்டியல் ) ,
இந்தியா சுதந்திரம் அடைந்த போது , நம் நாட்டின் சொத்துகளை வெள்ளையன் சுரண்டி சென்ற போது கூட இந்தியா எவரிடமும் கடன் பெறவில்லை.
இந்திய ரூபாய்ன் மதிப்பு , அமெரிக்க டாலருக்கு இணையாகவே இருந்தது.பிறகு என்ன நடந்தது?. இந்த வரலாறு அல்லவா நம் வரலாறு பாட புத்தகத்தில் இருக்க வேண்டும்.
என்றாவது ஒரு நாள் , தாவரவியல் ஆசிரியர்கள் மரங்களை நடும் முறை குறித்தோ , ஒவ்வொரு மரத்திற்கும் இடையில் இருக்கும் இடைவெளி குறித்தோ சொல்லி கொடுத்ததுண்டா ? இதை விட்டுவிட்டு இதன் ஆங்கில பெயர்கள் நமக்கு எதற்கு ? அதன் குடும்ப பெயர்கள் எதற்கு ? அதை நாம் தெரிந்து கொள்வதால் என்ன பயன் ?
ஆனால் நம் தமிழ் கூறுகிறது ,
நெல்லுக்கு நெல் நண்டு ஓட ,
வாழைக்கு வாழை வண்டி ஓட ,
தென்னைக்கு தென்னை தேர் ஓட
இடைவெளி விட வேண்டும் என்று. இதையெல்லாம் நம் தமிழ் புத்தகமும் தரவில்லை , தாவரவியல் புத்தகமும் தரவில்லை. ஏன் ?
வானியல் குறித்து நமக்கு துளியும் சொல்லி தர வில்லை . ஏன் , நாம் வானியல் ஆய்வு குறித்த தகவலுக்காகவும் வேற்று நாட்டவரை நம்பி இருக்க வேண்டுமா ?
மழை எப்போது வரும் என்பதை ரமணன் கூறினால் தான் அறிந்து கொள்ள முடியுமா ? 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை , எல்லோருக்கும் தெரிந்த மழை சார்ந்த அறிவியலும் , வானியல் குறித்த அறிவும் , இன்று எங்கோ ஒன்றிரண்டு வயதானவர்களுக்கு மட்டுமே தெரிவதன் காரணம் என்ன ?
ஆனால் நம்மாழ்வார் நமக்கு கூறுகிறார் இவையெல்லாம் நம் நாட்டின் பழமொழிகளில் உள்ளது என்று,
அவை :
" தவளை கத்தினால் , தானே மழை வரும் "
" அந்தி ஈசல் பூத்தால் அடை மழைக்கு அறிகுறி "
" தும்பி பறந்தால் தூரத்தில் மழை "
" எறும்பு ஏறில் பெரும் புயல் வரும் "
" மார்கழி மழை மண்ணுக்கு உதவாது "
" தை மழை நெய் மழை "
ஏன் நம் தமிழ் புத்தகங்கள் கூட நம்மை ஏமாற்றின ?
நமக்கு நன்மை செய்ய கூடிய நம்முடைய கட்டிட கலை முறைகள் நமக்கு சொல்லி தர மறுக்க பட்டது ஏனோ ?
விலங்குகளுக்காக விழா எடுக்கும் நம்மிடமே விலங்குகள் குறித்தும், அதன் மீது அன்பு காட்டுவது குறித்தும் ப்ளூ கிராஸ் கூறுகிறதா ? இதன் பின்னணி வரலாறு என்ன ? சொல்லி தர ஆளும் இல்லை. எந்த நூலும் இல்லை .
நாமெல்லாம் குதிரைகள் அல்ல . கடிவாளம் கட்டி கொண்டு ,
ஒரே பாதை யை மட்டும் பார்பதற்கு . இதை எல்லாம் ஒரு நாளும் அரசாங்கம் மாற்றாது. ஏனெனில் Macaulay ன் கல்வி கொள்கையை பயன்படுத்தி கொண்டு
இருக்கிறார்கள் நமது அரசியல் வாதிகள் .
அப்துல் கலாம் கண்ட வல்லரசு கனவு நனவாக வேண்டுமாயின் அது மாணவர்கள் கையில் மட்டுமே உள்ளது .
கல்வியில் மாற்றம் மட்டுமே அக்கனவை நனவாக்கும்.
அம்மாற்றம் மட்டுமே வல்லரசு நாடு எனும் விதையை விதைக்கும்.
மாற்றம் கொணர்வோம் ! வல்லரசாக மாறுவோம் !
அப்துல் கலாம் அவர்களின் வழி நடப்போம் !