Wednesday, 29 July 2015

அய்யா A .P .J .அப்துல் கலாம் அவர்களே !

அய்யா A .P .J .அப்துல் கலாம் அவர்களே !



இன்று அழுது கொண்டிருக்கும் எவருக்கும் நீர்  உறவில்லை!
ஆனால் எவராலும் அழுகையை நிறுத்த முடியவில்லை !
நீர் திருமணம் செய்திருந்து , பிள்ளை பெற்று இருந்தால் கூட
இத்தனை பிள்ளைகள் உனக்காக அழுதிருக்க மாட்டார்கள் !


சம்பாத்தியம் என்றால் என்ன வென்று இந்த உலதிற்கு காட்டியவர் நீர் !
இத்தனை பேர் விடும் கண்ணீரும் எந்த எதிர்பார்பிற்க்கும் உட்பட்டது இல்லை !
இத்தனை பேர் விடும் கண்ணீரிலும் எந்த பொய்யும் இல்லை !
இத்தனை பேர் விடும் கண்ணீரிலும் எந்த வஞ்சமும் இல்லை !
இது தான் சம்பாத்தியம் !


இதில் அரசியலும் இல்லை !
ஆன்மீகமும் இல்லை !
ஜாதியும் இல்லை !
இனமும் இல்லை !
மொழியும் இல்லை !
நாடுகள் என்ற வேறுபாடு  கூட இல்லை !

அத்தனை பேரையும் ஈன்றெடுத்த பெற்றோர்
வேறுவேறாக இருக்கலாம் !
ஆனால் அத்தனை பேருக்கும் அறிவு வழி
தகப்பன் ஆனீர் !

நீர் பிறந்த மண்ணில் இன்று
ஏதேதோ வேலைகள் நிகழ்கிறது  - உமக்காக !
பல்லாயிரம் மக்கள் காத்திருக்கிறார்கள் - உமக்காக!
அதையும் கடந்து படிக்க வேண்டிய நேரத்தில்
பல்லாயிரம் மாணவர்கள் நீர்
மீண்டு வருவீர் !
மீண்டும் வருவீர் !
என்று கண்ணீர் மல்க ஆவலுடன் நிற்கின்றனர் !

நீர் மீண்டும் இங்கு வரும்போது
உமது கனவை நினைவாக்கி
இந்தியாவை வல்லரசு ஆக்கி இருப்போம் !
என்று ஓர் இளைஞர் கூட்டம்
சூளுரைத்து காத்து இருக்கிறது !

நீர் கண் மூடி கனவிலே இதையெல்லாம்
கண்டு கொண்டு இருக்கிறீர் !
நீர் கண் திறந்து எங்கேனும் பிறந்திருப் பீர் !
என்ற நம்பிக்கையில்
இந்த சூளுரைகள் நாளை - நீர் காண
உன் கண் முன்னே நிறைவேறும் !

பயோ டீசெளில் புகைவண்டிகள் இயங்கும்
தடையில்லா மின்சாரம் எல்லா இடங்களிலும் கிடைக்கும்
தரமான ஆசிரியர்கள்
மாணவர்களின் கேள்விக்கெல்லாம் பதில் தருவர்
உழவும் வளரும்
அணு ஆய்வும் வளரும்
உண்மையும் , நேர்மையும்
தன்னம்பிக்கையும், தன்னடக்கமும்
வளரும் !

இது நீர் விதைத்த விதை !
மரமாகும் !
இதன் குளுமையை காண
இதன் பசுமையை காண
இதன் பழங்கள் ருசிக்க
மாணவர்கள் வேண்டுகோளை ஏற்று
மீண்டு வருவீர் !
மீண்டும் இந்த பூமிக்கு வருவீர் !




No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...