HMS MINDEN கப்பல்
1735 ம் ஆண்டு டாக் யார்டு எனப்படும் கப்பல் கட்டும் தளத்தை ஆரம்பித்தது கிழக்கிந்திய கம்பெனி . 800 முதல் 1000 டன் எடைகளை சுமக்கும் திறன் வாய்ந்த கப்பல்கள் அங்கு தயாரிக்கப்பட்டன. அதன் கட்டுமான பணிகளுக்காக சூரத்தில் இருந்து பார்சி இனத்தை சேர்ந்த மர ஆசாரிகள் வரவழைக்கப்பட்டனர். அப்பணியின் தலைமை பொறுப்பை
லவ்ஜி நஸர்வான்ஜி வாடியா ( LOVJI NOSARWANJEE WADIA ) என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது . அந்நிறுவனத்தின் கீழ் சில கப்பல்களை உருவாக்கினார் வாடியா .
இதன் அடிப்படையில் 1736 ம் ஆண்டுமுதல் வாடியா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வாடியா 35 கப்பல்களை தனது மேற்பார்வையில் வைத்திருந்தார். அதில் 21 கப்பல்களை திறம்பட செய்து முடித்தார்.1750 ம் ஆண்டு வாடியாவும் அவரது சகோதரர் சோரபிஜி வாடியாவும் சேர்ந்து உருவாக்கிய பம்பாய் drydock ஆசியாவின் முதல் drydock ஆகும் . 1774 ம் ஆண்டு அவர் மறைந்தார்.
அவரது மறைவிற்கு பின் அவரது மகன்கள் மனக்ஜி வாடிய மற்றும் போமஞ்சி வாடியா இருவரும் அந்த பொறுப்பை ஏற்றனர்.
ஜாம்செட்ஜி போமான்ஜி வாடியா தான் HMS MINDEN கப்பலை வடிவமைத்தார் .
1801 ம் ஆண்டு HMS MINDEN கப்பல் செய்வதற்கான ஒப்பந்தத்தை பெற்றது டாக் யார்டு நிறுவனம். அதன் அமைப்பை உருவாக்கி முழுமையாக மாற்றிய பெருமை வாடிய குடும்பத்தையே சேரும். முழுவதுமாக மலபார் தேக்கில் கட்டப்பட்டது தான் HMS MINDEN கப்பல் .
1811 பிரிட்டிஷ் கப்பல் படை உருவாக்கப்பட்டது, வாடியா குரூப்பின் துணையுடன் . இதன் பிறகு தான் 1814 ல் ஸ்டார் ஸ்பிங்க்லெட் பேனர் ( The Star-Spangled Banner ) எனப்படும் U .S ன் தேசிய கீதம் எழுதப்பட்டது .
இதுவரையில் 355 கப்பல்கள் வாடிய குடும்பத்தால் உருவாக்கப்பட்டுள்ளது .
பம்பாய் டையின் கம்பெனி 1879 ல் நௌரோஸிஜி வாடியா என்பவரால் உருவாக்கப்பட்டது.
காஸ் லைட் , தையல் இயந்திரம் மற்றும் ஸ்டீம் என்ஜின் உற்பத்தி பம்பாயில் அறிமுகம் செய்தது வாடியா குடும்பம் . இந்த பெருமைக்கு உரியவர் கர்செட்ஜீ வாடியா ஆவார்.
பாம்பை ரியாலிட்டி ( ரியல் எஸ்டேட் )
பாம்பே ரியாலிட்டி எனும் நில மேலாண்மை நிறுவனத்தை நடத்துவதும் வாடியா குடும்பம் தான் . icc ( island city center ) என்ற பெயரில் பணக்கார மக்களுக்கான வீடுகள் கட்டப்படுகின்றன.
டைகர் பிஸ்கட் மற்றும் பிரிட்டானியா பிஸ்கட் இந்த நிறுவனத்தை சேர்ந்தது
.
கோ ஏர் எனப்படும் விமான சேவையும் செய்கிறது .
ஹைட்ரஜன் பேரொக்ஸிடே தயாரிப்பதும் இந்நிறுவனம் .
பேஷன் magazine க்ளாட்ராக்ஸ் எனும் பத்திரிகையும் நடத்துகிறது
bbtc எனப்படும் பாம்பே பர்மா டிரேடிங் கம்பெனி நடத்துவதும் வாடியா குடும்பமே ! 1863 ல் பர்மா தேயிலைக்கு இருந்த மதிப்பின் காரணமாக வாலஸ் சகோதரர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இப்போது வாடிய குடும்பத்திடம் உள்ளது .
DPI எனப்படும் டென்டல் products ஆப் இந்தியா என்ற நிறுவனத்தை , bbti நிறுவனத்தின் கீழ் நடத்துவதும் வாடியா குடும்பமே !
Medical Microtechnology Ltd என்ற பெயரில் மருத்துவ துறையின் அணைத்து பொருள்களும் உற்பத்தி செய்வது வாடிய குடும்பம் .
தீணாவும் ஜின்னாவும் !
தற்போது வாடிய குரூப்பை நடத்துவது , நுஸ்லி வாடியா ஆவார்.
இவர் பாகிஸ்தானை உருவாக்கிய ஜின்னா அவர்களுக்கும் பேரன் ஆவார்.
ஜின்னா விற்கு ஒரே ஒரு பெண் குழந்தை . அதுவும் இங்கிலாந்தில் பிறந்தது. அவர் பெயர் தினா . இவரது தாயார் ஒரு பார்சி பெண் .ரத்தன்பாய் பெட்டிட் .
இந்த தினா , வாடியா குடும்பத்தை சேர்ந்த நெவெள்ளி வாடியாவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.
இந்த நெவெள்ளியே வாடியார்விக்கும் தினா ஜின்னாவிற்கும் பிறந்தவர்தான் நுஸ்லி வாடியா . இவர்கள் மும்பையில் வாழ்ந்தாலும் பிரிட்டிஷ் பாஸ்போர்டையே பயன்படுத்துகின்றனர்.
இவருக்கு துணையாக இவரது மகன்கள் நெஸ் வாடியாவும் ஜகாங்கீர் வாடியாவும் உள்ளனர்.
வணிக ரீதியாக மட்டும் அல்ல . பற்பல விஷயங்களில் சுவாரஸ்யங்கள் நிறைந்தது தான் வாடியா குடும்பம் .
-------------தொடர்வோம் .....
-----------------------------------------
வாடிய குடும்பம் என்று தான் இதை வழங்க முடியும். ஏனெனில் குடும்பத்தின் அத்தனை உறுப்பினர்களும் ஆங்கிலேயர்களுக்கும் அதன் பிறகு சுதந்திர இந்தியாவின் வணிகத்திற்கும் முழுமையாக உழைத்துள்ளனர் . இதற்க்கு மற்றொரு காரணமும் உள்ளது . அர்தஷீர் கர்செட்ஜீ பற்றி படிக்கும் போதே நமக்கு புரியும்.
இவர் 1808 ம ஆண்டும் பிறந்தார் . இவரது தகப்பனார் கர்செட்ஜீ ரோஸ்டோம்ஜி வாடியா ஆவார்.
இவர்தான் முதன் முதலில் , மும்பையில் தையில் இயந்திரம், ஸ்டீம் என்ஜின் மற்றும் காஸ் லைட் ஆகியவற்றை அறிமுகம் செய்தவர்.
இவரது 14 ம் வயதிலேயே தந்தையுடன் சேர்ந்து கப்பல் கட்டும் துறையில் ஈடுபட்டார். அதன் விளைவு , பிரிட்டிஷாரிடம் இவருக்கு செல்வாக்கு அதிகரித்தது .
இந்த அர்தஷீர் இந்திய வணிக வரலாற்றின் முக்கிய புள்ளி ஆவார். பிரிட்டிஷாரிடம் இருந்த நல்லுறவு காரணமாக அடிக்கடி லண்டன் செல்ல நேரிட்டது. அதனால் இவர் லண்டன் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டி இட்டார். இவரை பல பிரிட்டிஷார் ஆதரித்தனர்.
ஒரு இந்தியர் என்ற முறையில் ,
முதன் முதலில் 1831 ல் இங்கிலாந்தின் பாராளுமன்றமான ராயல் சொசைட்டியில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
1837 ல் ராயல் asiatic சொசைட்டியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதில் உள்ள உறுப்பினர்கள் ஆசியாவில் உள்ள அந்தந்த நாட்டு கலாசார , மொழி உரிமை மற்றும் கருத்துக்களை கூறலாம். இவர் இந்திய பிரதிநிதியாக 1837 ல் தேர்ந்தெடுக்க பட்டார்.
1841 ல் இங்கிலாந்து முழுவதும் சுற்றி வந்தார்.
1849 ல் அர்தஷீர் கர்செட்ஜீ (Ardaseer Cursetjee ) வாடிய இவர்தான் முதன்முதலில் அமெரிக்கா சென்றவர்.
1855 ல் ஜஸ்டிஸ் ஆப் பீஸ் ( justice of peace ) சின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் . இங்கு அமைதிக்கான வழிகள் குறித்து பேசியுள்ளார்.
இவ்வாறு பல்வேறு தருணங்களில் முதல் இடத்தை பிடித்த அர்தஷீரின் வாரிசுகள் , உறவு கலப்பு என்ற முறையில் முதலிடத்தை பிடித்தனர். இதனாலும் உறவு வழி கூற இயலாமல் வாடிய குடும்பம் என்று மொத்தமாக கூற வேண்டிய நிலை வந்தது .
இவருக்கு இந்தியாவில் திருமணம் நடந்தது . அந்த மனைவியின் பெயர் ஆவாபாய் .
இவர் இங்கிலாந்தில் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரு பெண்ணுடன் வாழ்ந்தார். அவர் மெரினா பார்பர். இவருக்கு இரண்டு குழந்தைகள் .லௌஜீ அன்னி , மற்றும் குஸ்தாபி அர்த்தசீர் . இவர்கள் மும்பையில் பிறந்திருந்தாலும் இங்கிலாந்தில் வாழ்ந்தார்கள் .
ஆவா பாய் குழந்தைகளும் , மெரினா பார்பர் குழந்தைகளும் உறவாகவே இருந்தனர். அவர்களுக்குள் திருமணமும் செய்து கொண்டனர்.
ஆவாபாய் அர்தஷீர் இருவரின் பேரன் கர்செட்ஜீ ரோஸ்டோம்ஜி வாடியா ,
இந்தியன் சிவில் சேவை தேர்வு எழுதுவதற்காக இங்கிலாந்து சென்றான். ஆனால் அங்கு , அவனுக்கு அம்மா முறை கொண்ட மெரினா பார்பரின் மகள் லவ்ஜி அன்னியியை சந்தித்தான் . லவ்ஜி அன்னயே இவருக்கு அத்தை முறை . ஆனால் காதல் ஏற்பட்டது.
பின்னர் 1877 ல் அர்தஷீர் கார்செட்ஜீ காலமானார்.
அதன் பிறகு 1880 ல் கார்செட்ஜீ ரோசடோம்ஜி வாடியாவும் அவனது அத்தையும் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் குழந்தைகள் இந்தியாவில் பிறந்தனர்.
அவர்கள் வம்சாவழியினரும் , இந்த உறவு கலப்பை தொடர நேரிட்டது.
அந்த வம்சம் தான் இன்று மும்பை பங்கு சந்தையை ஆட்டுவிக்கிறது .
இந்திய பொருளாதார ஏற்ற தாழ்வுகளுக்கு காரணம் கொடுக்கிறது.
தொடர்வோம் இக்குடும்ப சுவாரஸ்யங்களோடு !-------------
---------------------------------------------------