Friday, 3 February 2017

ஆமைகளும் தமிழர்களும் !

1. 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே , விலங்குகள் மட்டும்  இல்லாமல் மனிதன் வாழ்ந்த தடையங்கள் தமிழகத்தில் உள்ளன.


2.திருவான்மியூர் என்ற பெயர் ஆமையூர் என்றே வழங்கப்பட்டு பின் பெசன்ட் நகராக மாறியுள்ளது. இங்கு இப்போதும் ஆமைகள் வந்து செல்கின்றன .


3. ஆமைகள் சென்ற வழியை பின்பற்றி , நீரோட்டத்தில் சென்று தமிழர்கள் உலகம் முழுவதும் நிறைந்து வாழ்ந்துள்ளார்கள் .


4. நீர், நிலம் , காற்று , வான் , மண் என்ற ஐந்தையும் ஒரு பொருளாகவும் , அண்டவெளியை மற்றொரு பொருளாகவும் பார்த்தான் தமிழன்.


5. ஐந்து திணைகள் இல்லை. நீர், மலை , காடு இவை மட்டுமே தமிழர்களின் பூர்வீகம். மனிதனால் உருவாக்கப்பட்டது மருதம் எனும் வயல் வெளி . இயற்கை உருவாக்கியது பாலை நிலம்.



6. தமிழர்கள் உலகம் முழுவதும் பரவியதால் , உலகம் முழுவதும் இப்போதும் 18720 தமிழ் பெயர் கொண்ட ஊர்கள் உள்ளன .


7. ஒரு தொழிலாளரால் ஒரு மொழியை வளர்க்க முடியாது. முதலாளியாக இருந்தால் தான் அவனுக்காக , அவனது தொழிலாளர்கள் அம்மொழியை கற்கமுடியும் .

8. ஆமைகள் கடலின் பாதுகாவலன். மீன்களை பாதுகாக்கும் . குப்பைகளை களைந்து கடலை தூய்மை செய்யும்.


9. ஆமைகள் ஒரு இடத்தை தேடி பிடித்து அங்கு முட்டை இட்டால் அந்த இடத்தில சுனாமி பாதிப்பு இருக்காது.


10.ஆ மைகளுக்கும் ஆலா பறவைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு ..
கடலில் பயணிக்கும் ஆமைகளுக்கு இந்த பறவைகள் தான் உணவு தருகின்றன.


11. ஆமைகள் வந்து போகும் வரை , சுனாமி பாதிப்புகள் இருக்காது.


12. இந்த தமிழ் மண் எலெக்ட்ரோ magnattaal சூழ பட்டுள்ளது. இங்குள்ள விலங்குகள் முதல் அனைவரும் சிந்திக்கும் திறன் பெற்றவர்கள்.


13. பறவைகள் வானில் , ஆமைகள் கடலில், சுறாக்கள் கடலின் அடியில் ஒரே அமைப்பில் செல்லும் திறன் படைத்தவை .


14. இந்த உலகம் விலங்குகளுக்கானது .


15. ஆதி கால மனிதர்கள் விலங்குகளை மதித்தனர். இன்று வெறும் இறைச்சியாக மட்டுமே பார்க்கிறோம் .


விலங்குகள் காக்கப்படவேண்டியவை !




---------------- ஒரிசா பாலு

--------------------------------------------------------


உலகின் ஆச்சரியங்களில் ஒன்று ஆமைகள் !

நம் முன்னோருக்கும் முன்னோர் இந்த ஆமைகள் !

இந்த  பகவத் கீதையெல்லாம் எடுத்து பார்த்தல் , ஆமைகள் பற்றி என்ன கூறி இருக்கிறார்கள் தெரியுமா ? 

ஏன் ஆமைகள் சிலை எல்லா இடங்களிலும் இருக்கிறது என்று கேட்டாலும் ஒரு பதில் தருகிறான் ஆரியன்.  

அந்த பதில் இதோ :

ஆமைகள் எப்போதும் , அதன் உடலைசுருக்கி ஓடுகளுக்குள் வைத்து கொள்ளும். அது போல நாமும்  புலன்களை அடக்க வேண்டும். அதை நமக்கு நினைவூட்டவே கிருஷ்ணா பெருமான் பகத் கீதையில் ஆமையை பற்றி பேசுகிறார் . 

இது முற்றிலும் பொய்.!

ஒரிசா பாலு அவர்கள் , கடல்சார் ஆய்வாளர். 
அவரது பேச்சு தூண்டிய ஆவலால் , ஆமைகள் பற்றியம் , தமிழர்களின் வாழ்வியல் பற்றியும் தேடினேன். 

அவர்  கடலுக்குள் உள்ள விந்தைகள் பற்றி பெருமிதமாக பேசுவார். அதில் தமிழனின் பங்களிப்பு பற்றியும் , எல்லோரையும் தமிழன் என்ற உணர்விற்குள் கொண்டு வந்து விடுவார் . அத்தனை கருத்துக்கள் தமிழர்கள் குறித்து அவருக்கு தெரியும். அதன் அடிப்படையில் கோவில்களில் இதனை குறித்து என்ன கூறி இருக்கிறார்கள் என்று தேடியதை பதிவிட்டு இருக்கிறேன்.


நானும் சிறு வயது முதல் கேட்டு இருக்கிறேன்.

ஆமை புகுந்த வீடு விளங்காது என்று !

இதன் அறிவியல் என்ன என்று அறியாத , நமக்கு பாடம் சொல்லி தரும் இடத்தில இருந்த வேறு இன மக்கள் , பல்வேரு வகையான தவறான கருத்துக்களையும், கதைகளையும் கூறி நம் அறிவை மழுங்கடித்து விட்டனர்.

உண்மையில் , ஒருவர வீடு காட்டும் முன் முதலில் ஆமையைத்தான் உள்ளே விடுவார்களாம். கட்டிய பிறகு தான் மாடு . இன்று நாம் ஆமையை மறந்து விட்டோம்.

ஆமை நம் முன்னோருக்கெல்லாம் முன்னோர் .அறிவின் உச்சம். அது நீரோட்டம் நோக்கி மட்டுமே போகும். எதிர் திசையில் பயணிக்காது. அந்த வகையில் , ஒரு வீடு  கட்டுவதற்கு முன்னதாக ஆமையை விட்டால் அந்த பகுதியில் உள்ள நீரோட்ட பகுதியில் மட்டுமே பயணிக்கும். மக்கள் அந்த பகுதில் வீடு  வாசல் வைத்து கட்ட மாட்டார்கள். 

நீரோட்டத்தை தடுத்து வீடு காட்டினால் வெள்ளம் வரும் போது , வீட்டிற்குள் நுழையும். நம் வீடு அழிந்து விடும். 

இதனை தான் ஆமை புகுந்த வீடு விளங்காது என்று கூறி உள்ளார்கள் .

சென்னையின பெரு வெள்ளத்திற்கு இதுவே பிரதான காரணம். நம் அறிவை குழப்பம் அடைய செய்யும் சில வாஸ்து சாஸ்திரத்தை தவறாக படித்த வித்தகர்கள் , கிழக்கு மேற்காக வீடு கட்டு என்று பரப்புரை செய்து, உலகிற்கே அறிவியல் சொல்லி தந்த தமிழ் இனம் , அழிவில் அடிக்கடி சிக்கி கொள்கிறது .

மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி தான் நீர் பாயும். எனவே கிழக்கு மேற்காக வீடு கட்ட கூடாது. வடக்கு தெற்காகத்தான வீடு கட்ட வேண்டும்.

தஞ்சையின் எல்லா வீதிகளும் வடக்கு தெற்காக மட்டுமே கட்டப்பட்டுள்ளது. அங்கு வராத வெள்ளத்தையா சென்னை பார்த்து விட்டது? சென்னைக்கு வந்தது வெள்ளம் அல்ல. தேங்கிய நீர்.

சென்னையில் உள்ள வீடுகள் எல்லாம் , 

"ஆமை புகும் வீடுகள் தான் "

சரி ,

இதை தான் முன்னோர்கள் விளக்க வேண்டி எல்லா கோவில்களிலும் ஆமை சிலை வைத்து அதன் பின்னர் நந்தி சிலையை வைத்துள்ளார்கள். ஆனால் நாம் தமிழ்நாட்டில் இதை பார்க்க முடியாது. ஏனெனில் 1000 ஆண்டுகளுக்கு முன்பே எதோ காரணத்தால் , நம் முன்னோர்களே சில விஷயங்களை மறைத்து வைத்து விட்டனர்.

எல்லா கோவில்களிலும் நீங்கள் பார்க்கலாம், நந்திக்கு முன்பு ஒரு சிறு கல்  எந்த வித சிலையும் இன்றி இருக்கும். அது குறித்து யாரும் விளக்கம் தருவது இல்லை. அதையும் தாண்டி கேட்டால் , ஒரு சிறு நந்தி செய்து விட்டு தான் இந்த பெரிய நந்தி செய்வார்கள். அந்த சிறு நந்தி இருந்த இடம்தான் இது என்று கூறுவர் . அனால் அது உண்மை இல்லை. எனக்கு இது குறித்து தெரியாது என்று கூறுவதில் பிராமணர்களுக்கு எப்போதும் விருப்பம் இல்லை. எல்லாம் தெரியும் என்று காட்டி கொள்ளும் முயற்சியில் பல தவறான தகவல்களை கொடுத்துள்ளனர்.

இதோ தமிழ் நாடு தாண்டி , ஆமையும் , நந்தியும் உள்ள சிவாலயங்கள்



இது ஜெஜூரி கோவில் , பூனே, மஹாராஷ்டிரா மாநிலம்.இந்தியா


nandi statue with tortoise க்கான பட முடிவு

சோமநாத குடி , லட்சுமீஸ்வரர்.- கர்நாடகா .
சோமேஸ்வரர் குடி அல்லது சோமா லிங்கேஸ்வரர் குடி.



nandi statue with tortoise க்கான பட முடிவு
அகப்புரா  - அகப்பூர் கர்நாடகா


கேரளத்தில் எல்லா கோவில்களிலும் நாம் பார்க்க  முடியும் கோவில் கொடி கம்பம் முதல் விளக்கு கள் வரை எல்லாம் ஆமையின் மீது தான் அமைந்திருக்கும்.




செம்ம நாத  மகேஸ்வர கோவில் - கேரளம் .



காலபகவதி கோவில் - கொடுங்கோலுர்  - கேரளம்.





அது மட்டும் அல்லாமல் , நாம் கடல் கடந்து பயணித்தோம். அதற்க்கு அடிப்படையாக அமைந்தது மற்றும் வழிகாட்டியாக அமைந்தது இந்த ஆமைகள் தான். எங்கு சென்றாலும் , தனக்கு வழிகாட்டிய ஆமை சிலையை அங்கு அமைப்பதை வழக்கமாக கொண்ட தமிழர்கள், காரணம் கூறாமல் விட்டு விட்டார்கள் போலும்.

அதுதான் இன்று சீனாவில் ட்ராகனாக மாறி உள்ளது.







பார்பீடன் நகரம் . பீஜிங். சீனா .




சிங்கப்பூர் விலங்கியல் பூங்கா


nandi statue with tortoise க்கான பட முடிவு

நான்கு கைகளுடன் யமுனா தேவி நாகர்கள் அருகில் இருக்க ஆமையின் மீது பயணம் செய்கிறாள் .




ஜெர்மனி . பெர்லின் .டௌன்ஸ்கேப்



ஆமை வடிவ செயற்கை நீர்வீழ்ச்சி . ரோமாபுரி .



காளிபகவதி கோவில் - கொடுங்கல்லூர் - கேரளம்


இலக்கிய கோவில், வான் மிஐ - ஹனோய் - வியட்நாம்




பெலிஸி - சென்ட்ரல் அமெரிக்கா


இது அமை வடிவில் உள்ள மலை அல்லது ஆமைகள் வாழ்ந்த மலை-
தாய்லாந்து.

உலகம் முழுக்க ஆமைகள்  குறித்து எதுவும் சொல்லாமலேயே அதன் புகழ் பரப்பிய தமிழன்,

அதன் நுடபங்களை எல்லோரிடமும் மறைத்திருக்கிறான் எனில் ,  அமைகளுக்கு எதோ அழிவு நேர இருந்திருக்கிறது.  அவற்றை காப்பாற்ற அவன் எடுத்த முயற்சிகளை நாம் வீணாக்காமல் ,

நம் பெருமைகள் அறிந்து ஆமைகளை அழிவில் இருந்து காப்போமாக !

காளைகள் மட்டுமே நம் குலம் காத்தவை அல்ல.

ஆமைகளும்தான் !



4-2-2017 அன்று காலை 4 மணிக்கு சென்னை காமராஜர் துறைமுகத்தில் , இரண்டு கப்பல்கள் மோதி கொண்டன .

எந்த உயிர் சேதமும் இல்லை .என்று கூறுகிறார் காமராஜர் துறைமுக தலைவர்.

எனில் அங்கு செத்து கிடைக்கும் ஆமைகள் உயிர்கள் இல்லையா ?

கடந்த ஜனவரி மாதம் 15 ம் தேதி 2017 அன்று முதல் தமிழகம் முழுவதும் நடந்த போராட்டத்தின் அடிப்படையில் , ஜல்லிக்கட்டு சட்டமாக்க பட்டது .

இதில் குடியரசு தலைவர் 27.1.2017 அன்று கையொப்பம் இட்டார் .

ஆனால் அதன் விளைவுகளை தமிழகம் மறுநாள் காலை எண்ணூர் துறைமுகத்தில் சந்தித்தது .

ஆம் ,


காளைகளை காப்பாற்றி விட்டு , ஆமைகளை இழந்து விட்டது தமிழகம்!


இடித்த கப்பல் பிரிட்டிஷ் ராணிக்கு சொந்தமானது. MT B .W .MAPLE . இதன் கொடி இங்கிலாந்து நாட்டு கொடி 
மற்றொரு கப்பலின்  பெயர் MT .dawn காஞ்சிபுரம் . இதன் கொடி இந்தியா கொடி .ஆனால் இது LPG கொள்கையின் கீழ் வேறொரு நாட்டுடன் பதிய பட்டுள்ளது 
நடந்தது விபத்து இல்லை . விபத்து நடந்ததாக ஈரானில் பதியப்படவில்லை என ஒரு தகவல் கூறுகிறது . எனில் என்ன நடந்தது காமராஜர் துறைமுகம் மட்டுமே அறியும் ! கப்பல்களுக்கு எந்த சேதமும் இல்லை . ஆனால் கழிவால் நிறைந்தது வங்காள விரிகுடா ! 







செத்து மிதந்தன ஆமைகள் !
காளைகள் பற்றி மட்டும்தான் காப்பாற்றினோம் 
ஆனால் ஆமைகளை இழந்து விட்டோம் !

இந்த இரண்டும் தமிழரின் இவ்விரு கண்கள் !
எவனுக்கோ தெரிகிறது !
எதற்கு பதில் எதை அழிக்க வேண்டும் என்று !

ஆனால் நமக்கு ? 


ஆமைகள் நம்மை பார்த்து கேட்ப்பது போல் உள்ளது !

தமிழா எனை காக்க மாட்டாயா ?




No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...