கோல்கொண்டா கோட்டை
வாரங்கள் மன்னர்களால் உருவாக்கப்பட்டதே கோல்கொண்டா கோட்டை.
கொண்டப்பள்ளி கோட்டையின் தொடர்ச்சிதான் இந்த கோல்கொண்டா கோட்டை.
முற்றிலுமாக , க்ரானைட் மலை இது .
கோல்கொண்டா என்பது இம்மலையின் உண்மை பெயர் இல்லை.
இம்மலையின் பெயர் மங்கள்.இங்கு இருந்த கற்களின் நிற அடிப்படியில் இந்த மலை மங்கள் என்று வழங்கப்பட்டு இருக்கலாம்.
கோல்கொண்டா என்ற பெயர் வந்த கதை :
மங்கள் மலையானது , ஆடு மேய்க்க பயன்படுத்தப்பட்ட மலை ஆகும்.
அம்மலையின் மீது ஏற்கக்கூடிய ஆடுமேய்ப்பவர்கள் கையில் எப்போதும் கோல் என்று வழங்கப்படும் கைத்தடி கொண்டுதான் ஏறுவார்கள் .அவ்வாறு ஏறும் ஆடு மேய்ப்பவர்களில் ஒரு சிறுவன் ,கையில் ஒரு கிரானைட் கல்லை எடுத்து கொண்டும், அதை தூக்கி போட்டு விளையாண்டு கொண்டும் மலையில் இருந்து இறங்கி வருகிறான்.அப்போது அவ்வழியாக , வந்த காகதீய வம்சத்தை சேர்ந்த மன்னன் ஒருவன் மீது அந்த கல் விழுந்து விடுகிறது. ( தற்போது வாரங்கல் வம்சம் என்று வழங்கப்படுகிறது )
அந்த மன்னன் அந்த கல் குறித்தும் , அம்மலை குறித்தும் அந்த சிறுவன் வழியாக அறிந்து கொள்கிறான்.
பிறகு அம்மலையின் மீது கோட்டை ஒன்று கோட்டை ஒன்று காட்டப்படுகிறது.
அதனாலேயே இம்மலை கோல்கொண்டா என்று பெயர் மாறியது. கையில் கோல் வைத்திருக்கும் ஆடுமேய்ப்பவர்களின் மலை என்று பொருள்.
பின்னர் ராணி ருத்ரம்மா தேவி இந்த கோட்டையை மறுபடியும் எடுத்து காட்டுகிறாள்.
கி.பி.1400 களில் ,இஸலாமிய ஆட்சிக்கு கீழ் ஹைதராபாத் வருகிறது. அப்போது இருந்த மன்னன் குதுப் குலி உல் மாலிக் என்ற மன்னன் கோட்டைக்கு உள்ளேயே அரண்மனையை கட்டுகிறான் .
பாதுகாப்பு கருதி அனைத்து வசதிகளும் கோட்டைக்கு உள்ளேயே செய்யப்பட்டது.
நீரை சேமிக்கும் கிணறு. இங்கு இருந்தே பிற பகுதிகளுக்கு நீர் பகிரப்பட்டுள்ளது.
போருக்கு தேவையான அனைத்து கருவிகளும் இங்கு இருந்தே தயாரிக்கப்பட்டு , அவை பயன்பாட்டில் இருந்துள்ளன.
கோட்டையின் முகப்பு பகுதியில் நின்று கைதட்டினால் , அதன் ஒலி மீண்டும் மீண்டும் ஒலிக்கும் படி , வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஹைட்ரபாத் நகரில் இருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது கோல்கொண்டா !
இயற்கை அளித்த கொடை மீது, தலைநிமிர்ந்து நிற்கும் கட்டிட கலையானது ,
அதிசயிக்க வைக்கும் , இந்திய பெருமைகளுள் ஒன்று !