Monday, 6 November 2017

குளியல் பொடி தயாரிப்பது எப்படி?

குளியல் பொடி தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள் :

1. ஆவாரம்பூ 

2. ரோஜா இதழ்கள் ( நாட்டு ரோஜா இதழ் )

3. செம்பருத்தி பூ  ( சிகப்பு செம்பருத்தி சிறப்பு )

4. பூவந்திக்காய்  ( பூந்திக்காய் )

5. வெந்தயம் 

6. வெட்டிவேர் 

7. நெல்லிக்கனி  ( கொட்டைகளை நீக்கி விட வேண்டும் )

சம அளவில் எடுத்து நன்கு உலர்த்த வேண்டும்.

பின் அதை மிக்சியில் அரைத்து ஈரம் புகாத டப்பாவில் அடைத்து வைத்து கொள்ள வேண்டும் .

பயன்படுத்தும் முறை :

குளிக்க போவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் தேவையான அளவு எடுத்து , தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அதிக நீர் விட கூடாது.
சாந்து போல குழைத்து வைத்து கொள்ள வேண்டும்.

குளிக்கும் நேரத்தில் , உடலில் பூசி பின் குளிக்கவும்.

சோப்புகள் பயன்படுத்துவதால் , உடலில் பல நோய்கள் ஏற்படும்.
ஆனால்
குளியல் பொடி ,
உடலுக்கு குளிர்ச்சியும்,
மனதிற்கு உற்சாகமும்,
நாள் முழுக்க உடல் மணமாகவும் இருக்க உதவும் .



No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...