நேற்று ( 18.1.2018 ) சென்னை Don Bosco பள்ளியில் நரேந்திரன் என்ற 10 ம் வகுப்பு மாணவர் , இறந்து இருக்கிறார்.
காரணம் என்ன என்று பள்ளி தலைமை கூறுகையில் , திடீரென மயங்கி விழுந்து இறந்து விட்டான் என்று கூறி இருக்கிறார்கள் . பிறகு பள்ளியின் CCTV கொடுத்த தகவலின் படி , மாணவர் பள்ளிக்கு காலதாமதமாக வந்ததற்காக உடற்பயிற்சி ஆசிரியர் , dock walk எனும் தண்டனை வழங்கி உள்ளார் . அப்போது தான் மாணவர் மயங்கி விழுந்து இறந்து போய் இருக்கிறார். நான் இன்று பணியில் இல்லை என்றாலும் ஒரு ஆசிரியராக என் மனம் ஏற்க இயலாத சம்பவம் இது.!
இதில் காவல் துறை எடுத்த நடவடிக்கை ,
அந்த உடற்பயிற்சி ஆசிரியரை கைது செய்து இருக்கிறது.
முடிந்து விட்டது பிரச்னை !
எப்போதும் போல் அந்த பள்ளி இயங்கும். அதில் எப்போதும் போல் பிற மாணவர்கள் படிப்பார்கள் .
நாளை நம் மகனுக்கும் இப்படி தண்டனை வழங்க வாய்ப்புள்ளது என்ற எண்ணம் எந்த பெற்றோருக்கும் வர போவது இல்லை .
உண்மையிலேயே தவறு பெற்றோர் பக்கம் தான் !
தன குழந்தையை அடிமையாக்கும் அவலத்தை தன கையில் செய்பவர்கள் பெற்றோர்கள் தான் !
காலையில் 6 மணிக்கே , அவன் காலை கடன்களை கூட முடிக்க முடியாமல் அவனை வேனில் தள்ளி விட்டு , என்ன சாதிக்கிறார்கள் பெற்றோர்கள் !
பள்ளியின் வாசலிலே , குழந்தையின் டைரியில் கூட your Ward என்று பள்ளி துணிந்து கூறுகிறது . நம் குழந்தை , பள்ளிக்கு மாணவனாக இருக்கலாம் எப்படி வார்டு என்று அழைக்கலாம் என்று எந்த பெற்றோரும் பள்ளியிடம் சண்டை போடுவதே இல்லை .
( வார்டு என்றால் , சட்டத்தின் கீழ் , நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் வளர்க்கப்படும் குழந்தை என்று அர்த்தம் )
அவன் கழிவறை செல்ல அனுமதி வழங்கப்படுமா ? கழிவறை இருக்கிறதா ? விளையாட அனுமதிப்பீர்களா ? விளையாட்டு திடல் உண்டா ? என்று எத்தனை பெற்றோர்கள் , பள்ளியில் சேர்க்கும் போது கேள்வி எழுப்புகிறார்கள் ?
பெற்றோர்களே அடிமை போலும் , பூம் பூம் மாடு போலும் , கேட்ட பணத்தை கொடுத்து விட்டு ஒரு வார்த்தை பேசாமல் வரும் போது குழந்தை மட்டும் , எப்படி அறிவாளியாக , தைரியம் உள்ளவனாக , கேள்வி கேட்கும் திறன் உள்ளவனாக வளர்வான் !
தனக்கு பின்னால் தன பெற்றோர் வருவார்கள் என்ற தைரியம் உள்ள குழந்தை , ஆசிரியரின் அதட்டலுக்கு மயங்குமா ? சரிந்து விழுமா ?
நாம் கொடுக்காத தைரியத்தை எங்கிருந்து பெறுவான் ?
தன குழந்தையை அடிமையாக்கும் கேவலமான பெற்றோர் உள்ளவரை ,
அவன் உணர்விற்கு மதிப்பளிக்காமல் , ஆசிரியரை பார்த்து அஞ்சும் பெற்றோர் உள்ளவரை
பல நரேந்திரங்கள் சரிந்து விழத்தான் செய்வான் .
ஒரு பள்ளியில் , மாணவன் ஒருவன் விடுமுறை எடுத்ததற்காக , பெறப்பட்ட பைன் ரசீது இது !
கேள்வி கேளுங்கள் !
நீங்கள் அரசியல் வாதிகளை எந்த கேள்வியும் கேட்பதே இல்லை !
மருத்துவரிடத்தில் எந்த கேள்வியும் கேட்பதே இல்லை!
சட்டம் சார்ந்த விஷயத்தில் கேள்வி கேட்பதே இல்லை !
அரசு அதிகாரிகளை கேட்பதே இல்லை !
குறைந்த பட்சம் குழந்தைகளின் தைரியத்திற்காக
ஆசிரியரையும் ,
பள்ளிகளையுமாவது
கேள்வி கேளுங்கள் !
நீங்கள் கேள்வி எழுப்பினால் உங்கள் குழந்தை பாதிப்புக்கு ஆளாகும் எனில் ,
அந்த பள்ளியையே தூக்கி எறியுங்கள் !
அந்த பள்ளி சிறந்தது , இந்த பள்ளி சிறந்தது என்று மனதிற்குள் இருக்கும் கோட்டையை
உடைத்து எறியுங்கள் !
படிப்பறிவு இல்லாத கடந்த தலைமுறை பெற்றோரே நம்மை எல்லாம் நன்றாக படிக்க வைத்து இருக்கிறார்கள் என்றால் ,
நாம் இன்னும் அதிகப்படியாகவே படிக்க வைக்க முடியும்!
அதை பள்ளிகள் தான் செய்யும் எனில் ,
நாம் ஏன் படித்திருக்க வேண்டும் ?
ஓட்டையான பள்ளியில் படித்த நாமெல்லாம் , திறமையானவர்கள் தான் எனில் ,
அதே பள்ளி நம் பள்ளிக்கு மட்டும் நல்ல கல்வியை கொடுக்காதா ?
No comments:
Post a Comment