பெண்ணுரிமை
பெண்ணின் திருமண வயது 18
1955 ம் ஆண்டு பெண்ணின் திருமண வயது 18, ஆணின் திருமண வயது 21 என்று சட்டம் இயற்றப்பட்டது .
ஏன் இந்த சட்டம்?
யாருக்காக இந்த சட்டம் ?
யாரால் முன்மொழியபட்ட சட்டம் ?
இதனால் பெண்கள் பலன் பெற்றார்களா ?
சமூகத்தின் தவறுகள் முடிவுக்கு வந்து விட்டதா ?
இது போன்று பல கேள்விகளை கொண்டுள்ளது இந்த திருமண வயது உச்ச வரம்பு சட்டம் .
ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் ,
பெண்களின் நலன் என்ற ஒற்றை வார்த்தையே இதற்கு பதில் தரும் .
பெண்களின் சுதந்திரம் ,
அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை என்ற கோட்பாடு தான் பெண்ணின் திருமண வயதை தீர்மானிக்க வேண்டிய காரணிகளாக அமைந்துள்ளன .
-------------------------------
கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட பெண்கள் கல்வி கூடம் செல்லவில்லை .
பெரிதாக ஞானம் பெறவில்லை .
ஒரே வேலை தான் அவளுக்கு !
பிள்ளை பெறும் இயந்திரம் போல் அவள் இருந்திருக்கிறாள் .
அதையும் கடந்து ,
ஆணுக்கு சேவகம் செய்ய பிறந்தவள் போலும் வாழ்ந்து இருக்கிறாள் .அதே சமயம் அவள் கணவன் இறந்து விட்டால் , சிறுவயது பெண்ணாக இருந்தால் கூட அவள் விதவை கோலம் கொள்ள வேண்டும் .
அத்தருணம் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி இருக்கிறாள் பெண் ,
வடஇந்தியாவில் தென்னிந்தியாவை விட அதிக கொடுமைகள் அரங்கேறி உள்ளன .
கணவன் இறந்தவுடன் , மனைவியும் உடன்கட்டை ஏறி இறந்து விட வேண்டும் என்ற வழக்கம் பெரும்பாலும் இருந்துள்ளது .
இவற்றை மாற்ற வேண்டும் என்று எண்ணம் பல நல்ல உள்ளங்களுக்கு வந்துள்ளது . அவற்றில் முதன்மையானவர் ராஜாராம் மோகன்ராய் .
இவர் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் . அந்த போராட்டத்தில் வெற்றியும் பெற்றார் .
-------------------------------
சதி எனும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழிக்க ராஜாராம் மோகன்ராய் போராடியதை போலவே , பெண் கல்வி வளர்ந்தால் பெண்களின் இழிநிலை மாறி விடும் என்று போராடியவர் ஜோதிபாய் பீலே .
இவர் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் .
இவர் 19 ம் நூற்றாண்டின் மாகாத்மா .
20 ம் நூற்றாண்டில் தான் காந்தியடிகள் மஹாத்மா என்று வழங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது . ஜோதி பாய் பீலே , தன மனைவியை ஐ படிக்க வைத்தார் .பெண்களுக்கென்று கல்வி கூடம் அமைத்து , பெண் கல்வி உயர போராடினார் .அவர் அமைத்த கல்வி கூட்டமே இந்தியாவில் பெண்களுக்கான முதல் கல்வி கூடம் ஆகும் .
மேலும் ஒருசில முக்கிய நபர்களை விடுத்து பெண்ணியம் , மற்றும் அதன் கண்ணியம் பற்றி பேசுவது சரியாகாது.
அப்படி ஒரு முக்கிய நபர் தான் அன்னிபெசன்ட் அம்மையார் , மற்றும் பாரதியார் .
முதல் காங்கிரஸ் கூட்டம் நடைபெற்ற போது ,
இந்தியாவின் போராளிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்க பட்டதாம் . அப்போது அந்த கூட்டத்திற்கு பாரதியாருக்கும் அழைப்பு விடுக்க பட்டதாம் .
அந்த கூட்டத்திற்கு வந்த அனைவரையும் அன்னிபெசன்ட் அம்மையார் தனித்தனியாக சந்தித்து வரவேற்பு கொடுத்தாராம் .
பாரதியை பார்த்து எங்கே உங்கள் மனைவி என்று கேள்வி கேட்க ,
அவளுக்கு என்ன தெரியும் ? அவள் எதற்கு இந்த கூட்டத்திற்கு ?என்று பதில் சொன்னாராம் .
உடனே அன்னிபெசன்ட் , உமக்கு மட்டும் என்ன தெரியும் ? என்று கேட்டாராம் .
அந்த ஒற்றை கேள்வி பாரதியை அதிர வைத்துவிட்டது . அந்த கேள்வியின் விளைவு தான் பாரதி
பேசிய பெண்ணுரிமை !
------------------------------------