மனித வாழ்கையின் மனநிறைவு :
வீதிகள் வெறிசோடி கிடக்கின்றன . முன்பு போல் குழந்தைகள் வீதிகளில் விளையாடுவது இல்லை .
மிதிவண்டி ஒட்டி உரசி கொள்வது இல்லை .
குழந்தைகளை பார்வையிட சில தாய்மார்கள் வீதிகளில் அமர்ந்து பேசிக்கொள்வதும் இல்லை .
சிறு குழந்தைக்கு சோறு ஊட்ட நிலவை காட்ட எந்த அம்மாவும் வீதிக்கு வருவதே இல்லை .
இரவில் மீந்து போன உணவை உண்ண , எந்த நாய்கள் கூட்டமும் இல்லை . இரவில் பிட்சை கேட்பவர்கள் இல்லை .
வீதி எங்கும் ஒரே அமைதி .
மாலை ஆறு மணிக்கு விளக்கு ஏற்றி வைத்தால்தான் , மஹாலட்சுமி வருவாள் , செல்வம் பெருகும் என்று கூறி கொண்டு ,
மாலை வேளையில் , வாசல் தெளித்து சுத்தம் செய்வோர் இல்லை .
மாறாக வீட்டில் உள்ள எல்லோரும் வேலை பார்த்தால் தான் செல்வம் பெருகும் என்று உழைப்பிற்கு முக்கியத்தும் கொடுத்து ,
எல்லோருமே வேலைக்கு சென்று சம்பாதிப்பதால் ,
வீட்டில் விளக்கு ஏற்றவோ , வாசலில் லைட் போடவோ ஆளே இல்லை .
ஒரே உழைப்பு !
விளக்கு போடவே ஆள் இல்லாத வீட்டில் , வெளியில் விளையாட குழந்தைகள் எப்படி வரும் ? அம்மா எங்கே நின்று யாருடன் பேசுவாள் ?
இதையெல்லாம் எதிர்பார்த்தால் ,
அது முட்டாள்தனம் தானே !
இன்றைய சூழலில் ,
பணம் சம்பாதிப்பது கூட பேராசை இல்லை .
ஆனால்
இரவை ரசிப்போம் வாங்க ! என்று அழைப்பு விடுக்க நினைப்பது பேராசையின் உச்ச கட்டம் .!
பேராசை பெரு நஷ்டம் ஆகும் .
யாரிடமாவது இது குறித்து பேசினால் ,
நம்மை மிக கேவலமாக பேசுவார்கள் .
அதோடு நம்மிடம் எப்போதாவது ஒருமுறை பேசுவது கூட நின்று விடும் .
சத்தம் இல்லாமல் ,
தனியாக ரசித்து விட்டு கடந்து விட வேண்டும் .
ஆனால் ,
இந்த இயற்கைக்கோ ஒரு கெட்டபழக்கம் ,
தனியாக ரசிப்பதை விட , கூட்டமாக ரசிக்கும்போது தான் இன்பம் அதிகம் கிடைக்கும் .
தனிமரம் எப்படி சுகமான காற்றை தருவதற்கு கடினப்படுமோ ?
அப்படிதான் , தனியாக அந்த காற்றின் ஆனந்தத்தை அனுபவிப்பதும் மிகவும் கடினம் .
ஆனால் என்ன செய்வது ?
எல்லோரும் சமம் என்ற கோட்பாடு ,
இயற்கையின் முன்னால் ,
என்பது எல்லோருக்கும் மறந்தே விட்டது.
பகுத்தறிவின் உச்சத்தில் நிற்பதால் , பணரீதியாக சமம் என்று எல்லோருக்கும் கற்பித்தபடுத்தப்பட்டுள்ளது .
---------------------
No comments:
Post a Comment