கழுதைகளை குதிரைகளாய் காட்டும்
குதிரைகளை கோட்டன்களாக்கும்
கோட்டான்களை குருவிகாளாய் காட்டும்
குருவிகளை குரங்குகளாக்கும்
குரங்குகளை கோபுரமாக்கும்
கோபுரத்தை குப்பை மேடாய் காட்டும்
குப்பை மேட்டை குளம் போல் காட்டும்
குளங்களை எல்லாம் கானல் நீராய் காட்டும்
கானல் நீரை கடல் போல் காட்டும்
கடலை கூட கட்டாந்தரை யாக்கும்
கட்டாந்தரை எல்லாம் செழிப்பாய் தெரியும்
செழிப்பான இடமெல்லாம் சுவர்களாக மாற்றும்
சுவர்களையும் நாளை சுவடு இல்லாமல் மாற்றும்
அனைத்தும் கண்முன்னே நடக்கிறது - நம்
கண்களும் நம்மை ஏமாற்றுகிறது
அறிவை மங்க செய்யும் ஆசான் அவன்
அழகு உணர்விற்கு அடிமையாக்கும் ஆசிரியன் அவன்
ஒழுக்கமெல்லாம் தவறென்று போதிப்பவன் அவன்
தாய்மொழியில் பேசினால்கூட தவறென கூறும் குரு அவன்
ஏன் என்று கேட்க நாவிற்கு திறனில்லை
ஏனெனில் போதிக்கும் இடத்தில் அவன்
கேட்கும் இடத்தில் நாம்
மாற்றவே முடியாது
மாறவும் முடியாது
மாற்றம் ஒன்றே மாறாதது என்று கூறியே
நம்மையெல்லாம் மாற்றியவன் அவன்
அவன்தான்
மார்க்கெட்டிங் எனும் பேய் !
No comments:
Post a Comment