" தமிழன் குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவான் "
"தமிழன் தன்னை பற்றியே தற்பெருமை பேசுவான் "
" தமிழனுக்கு வேறு மொழிகள் தெரியாது "
"தமிழனுக்கு தலைமை பண்பு கிடையாது"
"தமிழ் என்று கூறி விட்டால் தமிழனை எளிதில் ஏமாற்றி விடலாம் "
"தமிழன் தமிழ் புராணம் பாடுவான் "
இப்படி எல்லாம் பேசுபவர்கள் ஒரு புறம் இருக்க மற்றொருபுறம்
தமிழர்கள் குறிப்பாக தமிழ் பெண்கள் கூறுவதாவது ,
" நான் தான் ஹிந்தி படிக்க வில்லை , என் பிள்ளையாவது படிக்கட்டும்"
"நான் தான் இங்கிலிஷ்ல சரியாய் பேச முடியல , என் பிள்ளையாவது நல்ல இங்கிலீஷ் ஸ்கூல் ல படிச்சு , 5 வசுலையே டாக்டர் ஆகட்டும் என்று சிலர் கூறுகின்றனர் .
இதையெல்லாம் தாண்டி , சிலர்
பிள்ளைகளை பிரெஞ்சு , ரஷ்ய மொழி , சீனா மொழி, சமஸ்கிருதம் என்றெல்லாம் படிக்க வைக்க முயற்சி எடுத்து சில பல லட்சங்களை செலவிடுகின்றனர்.
இன்னும் சிலர் வீட்டில் பிள்ளைகள் தமிழில் பேச கூடாது , தமிழ் புத்தகங்கள் படிக்க கூடாது , டிவி யில் தமிழ் நிகழ்ச்சிகள் பார்க்க கூடாது என்று கண்டிப்பதுடன் ,
"நீ தமிழ் படிச்சா உருபடவே மட்ட " என்று சாபத்தையும் சேர்த்து பரிசாக கொடுக்கிறார்கள் .
தமிழா ,
நம்மை போல் சாபம் பெற்றவன் இவ்வுலகில் இருக்கவே மாட்டான்
\
நம்மை போல் தாழ்வு மனப்பான்மையால் , பிறரின் கற்பிதங்களை உடனே ஏற்பவன் இவ்வுலகில் பிறந்திருக்க மாட்டான் .
ஒரு கதை உண்டு
ஒருவன் அதிகாலையில் எழுந்து , குளித்து முடித்து அலுவலகம் கிளம்பினானாம் . அவன் வீட்டிலிருந்து வெளியில் வரும் போது அவன் பாட்டி அவனிடம் கேட்கிறார் . " என்னப்பா உடம்புக்கு முடியலையா " முகம் சுணக்கமா இருக்குதே என்று " நான் நல்லதனே பாட்டி இருக்கேன் என்று கூறியவன் , பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருக்கிறான் , அங்கு வரும் அவன் நண்பன் கேட்கிறான் " என்னடா டல்லா இருக்கே ? உடம்புக்கு முடியலையா ?
இப்போது அவனுக்கு சிறிது சந்தேகம் வருகிறது. நம் முகம் வாடி இருக்கிறதோ என்று . இருந்தபோதிலும் , எனக்கென்னட நான் நல்லாத்தான் இருக்கேன் என்று பதில் கூறுகிறான்
பேருந்தில் ஏறியவன் அதே சிந்தனையில் இருக்கிறான் , அலுவலகம் சென்றதும் மேலும் இருவர் அப்படியே கேட்கிறார்கள் , மாலை வீடு திரும்புவதற்குள்ளாக 5 பேர் அவனிடம் கேட்டு விட்டனர். இரவு முழுவதும் அவன் தூங்க வில்லை . மறு நாள் காலையில் எழுந்த போது , அவனால் எழுந்திருக்க முடிய வில்லை , அவன் சோர்ந்து விட்டான் . அவன் உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது .
இந்த கதை போலதான் ஆகிவிட்டது தமிழனின் நிலையும் .
தமிழனுக்கு வேறு மொழிகள் தெரியாது, இது தெரியாது , அது தெரியாது என்று ஏகப்பட்ட கருத்து மழையில் நனைந்து , நனைந்து இன்று தமிழனின் அறிவில் எதுவும் நிரூபிக்க வழி தெரியாமல் போன நிலை வுருவாகி விட்டது .
அதிலும் பெண்கள் சொல்லவே வேண்டாம் . எதோ எல்லோரும் லண்டனில் இருப்பது போலவும் , சொந்த தாய் மொழியே வராமல் அவதி படுவது போலவும் , அந்த ஸ்கூல் நல்ல இங்கிலீஷ் சொல்லி தர்றாங்களா இந்த ஸ்கூல் நல்ல இங்கிலீஷ் சொல்லி தர்றாங்களா என்று ஆய்வு செய்து , விடியற் காலை , கோழிகூவும் முன்பு ஸ்கூல் வாசலில் நின்று , ஸ்கூல் தனி பட்ட முறையில் விளம்பரம் எதும் செய்ய வேண்டியதே இல்லை . இங்கு வரிசையில் நின்று சேர்க்கை form வாங்கி இது தாங்க இந்த உலகத்திலேயே சிறந்த ஸ்கூல் என்று வுரெல்லாம் சொல்லி , அப்பப்ப இவர்கள் செய்யும் சேட்டைக்கு அளவில்லாமல் போய்விட்டது . தட்டி கேட்க ஆளே இல்லை தமிழ் நாட்டில் . இத்தனைக்கும் இன்றைய பெற்றோர் எல்லாம் படித்தவர்கள்.
முழுமையாக படிப்பறிவு இல்லாத இவர்கள் பெற்றோர், இவர்களையெல்லாம்
முன்னேற்றி விட்டது எதற்காக என்றால் , இலவசமாக சில பல பள்ளிகளுக்கு விளம்பரம் கொடுக்கத்தான் . இதேலே பெருமை வேறு .
எதோ வாஸ்கோட காம , இந்தியாவிற்கு வழிதேடிய போது , இந்தியாவின் எல்லா மொழிகளையும் கற்றுக்கொண்டு ,வந்தது போல ஒரு நினைப்பு . அப்படி அவன் கற்று கொண்டுதான் இந்தியாவிற்கு வழி தேடுவேன் என்று நினைத்திருந்தால் , இந்தியவிற்கு வழியே கண்டு பிடித்துருக்க மாட்டான்.
முதலில் இவர்களெல்லாம் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் . தாய் மொழி அறியாதவன் , எம்மொழியிலும் முழுமை பெற முடியாது . எந்த கருத்தையும் ஆய்வு செய்ய இயலாது.
இதை விட முக்கிய செய்தி என்னவென்றால் , வருங்காலத்தில் அவர்கள் தலையாட்டி பொம்மைகளாய் மாறி போவார்கள் . ஏனெனில் அவனுக்கு தான் நல்லது கேட்டது எதுவும் தெரியாதே . பிற மொழி பேசுவான் . அவ்வளவு தான் . ஆனால் அது அறிவு அல்ல .
இன்றைய பள்ளிகள் மொழியை கொடுக்கின்றன , அறிவை கொடுக்க வில்லை .
புதிதாக ஒரு ஊருக்குள் நுழையும் பொது அந்த நீர் நம் வுடலில் சேர என்ன செய்ய வேண்டும்
நீரிலே முழுகும் நிலையில் உள்ள ஒருவனை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும்
திடீரென தீ பிடித்தால் என்ன செய்ய வேண்டும்
விலங்குகளிடமிருந்து காப்பாற்றி கொள்ள என்ன செய்ய வேண்டும்
மற்றவர்களிடம் எப்படி உரையாட வேண்டும்
இரவு நேரங்களில் நம்மை எப்படி பாதுகாத்து கொள்ள வேண்டும்
குளிர் தருணங்களில் என்னென்ன வுட்கொள்ள வேண்டும்
வெயில் நேரத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும்
சிறு சிறு சட்ட பிரச்சனைகளை எப்படி அணுகுவது
தோட்டம் அமைப்பது எப்படி
நீர் தேங்காமல் காப்பது எப்படி
எந்தெந்த கனிகள் நம் வுடல் நலனுக்கு ஏற்றது
படித்து முடித்ததும் என்னென்ன வேலைகள் செய்யலாம்
எப்படி விற்பனை செய்யலாம்
அரசியல் என்றால் என்ன
வரதட்சினை என்றால் என்ன
சீதனம் என்றால் என்ன
இதையல்லாம் கடந்து ஒரு ஆண் பெண்ணிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்
ஒரு பெண் , ஒரு ஆணிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்
இருவரும் அறிவு ரீதியாக சமம் ஆயினும், ( என்னதான் நாமெல்லாம் இங்கிலீஷ் இங்கிலீஷ் என்று கூவினாலும் , லண்டன் பெண்களை போல் நம் வீட்டு பெண்ணை ஒப்பு கொள்ள மாட்டோம். நம் வீட்டு ஆணை விட்டுவிட மாட்டோம் . இங்கு மட்டும் நாம் தமிழ் நாட்டில் வாழ்கிறோம் என்று நினைவுக்கு வந்து விடுவோம் . வரதட்சினை பிரச்னை வரும்போது நாம் தமிழர்கள் ஆகி விடுவோம் . என்னே தமிழன்)
இவை போன்று இன்னும் எத்தனையோ வாழ்வியல் விசயங்கள் சொல்லிதர நம் பள்ளிகள் தயார் இல்லை. அதை ஒப்பு கொள்ள பெற்றோர் தயாரில்லை . குறிப்பாக தாய்மார்கள் . இன்று இவர்கள் தாய் மொழியை விட்டுகொடுக்க கூறுகிறார்கள் , நாளை அவன் தாயையும் சேர்த்து தான் விடுவான் . மறந்து விடாதீர் . அவன் ஒன்றும் பொம்மை அல்ல . ஆட்டுவிக்க .
பாவம் குழந்தைகள் , அவர்களை விட்டு விடுங்கள். நீங்கள் வேலைக்கு சென்று காசு சம்பாதிக்க , குழந்தைகளையும் , அவர்கள் கல்வியையும் ஒரு காரணம் ஆக்காதீர்கள் .
உங்களின் இது போன்ற , ஆசைகள் தான் , இன்று பல தவறுகளுக்கு காரணம் . வீட்டிற்குள் நுழையும் குழந்தைக்கு பேச கூட ஆள் இல்லை. அநாதை போல் அலைகிறான் . பெரிய பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்று கூறி தாயும் வேலைக்கு சென்று , அவனை அநாதை ஆக்குவதை விட , சிறிய பள்ளியில் படிக்க வைத்து , குறைந்த பட்சம் தாயின் அன்பையவது கொடுங்களேன் .
பள்ளியிலும் பெண்ணிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லி தரப்போவது இல்லை
வீட்டில் தாயும் இல்லை . நாளை அவனுக்கு பெண்ணிடம் பேசும் முறைகள் கூட தெரியால் போகலாம்
உங்கள் இங்கிலீஷ் மோகம் , ஒரு குழந்தையை கயவனாக மாற்றும் ஒரு குழந்தையை முட்டாளாக மாற்றும்
உங்களை லஞ்சம் வாங்கவும் தூண்டும் .
வேண்டாம் , நாளைய தவறுகளை இன்றே சரி செய்வோம் .
அவன் நம் குழந்தை
இது நம் மொழி
இது நம் நாடு

tamilna ellarukum kavalama poochu
ReplyDeleteintha ennatha muthalla maathanum

ஆமா ,இது விரைவில் மாறும்
Delete