- இராவணன் எனும் தமிழன் பிறன்மனை நோக்கிய பாவியா?
- ராவணனின் தந்தை குறித்த கருத்துக்கள் :
- பெயர் : விஷ்ரவா ( வேசமுனி ) பிராமண தந்தை
- மனைவிகள் : மூவர்
- முதல் மனைவி : பிராமண பெண்
- பிள்ளைகள் : குபேரன்
- இரண்டாவது மனைவி : தைத்யா ( ராக்ஷசி )
- பிள்ளைகள் : ராவணன். சூர்ப நகை , கும்ப கர்ணன், அதிரவன்
- மூன்றாம் மனைவி : பிராமண பெண்
- பிள்ளைகள் : விபீஷணா , காரா, துஷானா , கும்பினி
ராவணன் குறித்த கருத்துக்கள் :
- முதல் மனைவி : மண்டோதரி
- இரண்டாவது மனைவி : மாயா
- மூன்றாம் மனைவி : தன்ய மாலினி
- மகன்கள்
- மேஹநாத் , அதிகயா , அக்ஷய குமாரா , தேவந்தகா , நரந்தகா, திரிசிரா, பிரகஸ்தா
- வால்மீகி எந்த ஊரை வர்ணித்தாரோ அந்த ஊரின் பெயர் சாகேதம்
- இவை எல்லாம் வால்மீகி தன்னுடைய ராமாயணத்தில் கூறியவை.
- ஆனால் வேத காலத்தில் இது போன்ற பெயர்கள் புழக்கத்தில் இல்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன.
- வால்மீகி எந்த ஊரை வர்ணித்தாரோ அந்த ஊரின் பெயர் சாகேதம்
- ராமாயணம் எழுதப்படும் வரை அயோத்திய என்ற ஊர் பெயரே கிடையாது.
- அது மன்னன் புஷயமித்ரனின் தலை நகரம் . வால்மீகி அவனது அவைக்கள புலவர் . எனவே தலைநகரதிற்கு பெயர் மாற்றி வர்ணித்து இருக்கிறார்.
- தசரதன் என்ற மன்னன் வாழ்ந்தது உண்மை. ஆனால் அவன் ஜாதக வம்சத்தை சேர்த்தவன் என்றும் , அவன் ஆண்டது காசியை என்றும் வரலாறு கூறுகிறது.
- ராவணன் எனும் மன்னன் வாழ்ந்தது உண்மை . அதை இலங்கையின் மலை குகை கள் கூறுகின்றன.
- இராவணன் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கியன் . அவனிடத்தில் புஷ்பக விமானம் இருந்துள்ளது.
- இசையிலும், கல்வியிலும், சிறந்தவன்,
- அதற்கு காரணம் கூறுகிறார் வால்மீகி. ராவணனின் தந்தை பிராமணன் . அதனால் அவன் கல்வியிலும், இசையிலும் சிறந்து விளங்கினான்.
- ஆனால் அவன் தாய் ஒரு ராக்ஷசி . அதனால் அவனிடத்தில் கெட்ட குணங்கள் வந்தது என்று
சில கேள்விகள் :
- 16000 திருமணம் செய்து கொண்ட தசரதன் நல்லவனா? எப்படி அவ்வளவு பெண்களை திருமணம் செய்து கொள்ள முடியும்.
- இதற்க்கான விடையை இன்று வரை நம் திருமணங்களில் வேதம் ஓதும் புரோகிதர்கள் கூறி கொண்டு இருக்கிறார்கள். அதாவது நம் திருமணங்களில் ஓதப்படும் மந்திரத்தின் அர்த்தம் இதுதான். இந்த பெண்ணானவள் அக்னிக்கு மனைவி ஆகிறாள் . இரண்டாவதாக மன்னனுக்கு மனைவி ஆகிறாள். மூன்றாவதாக வேதம் ஓதும் பிராமணனுக்கு மனைவி ஆகிறாள். பிறகு எனக்கு மனைவி ஆகிறாள். இதைதான் திருமணத்தின் போது மணமகன் கூற வேண்டிய மந்திரமாக புரோகிதர் சொல்லி தருகிறார். இந்த மந்திரத்தின் படி மணமகள் மன்னனுக்கு மனைவி . அந்த அடிப்படையில் தான் தசரதனுக்கு ஏகப்பட்ட மனைவிகள். ராமனின் தந்தை ஊரில் உள்ள அடித்தட்டு மனிதனின் மனைவியையும் தன் மனைவியாக மாற்றுகிறான் எனில் தசரதன் செய்தது சரியாய் தெரிந்ததா ராமனுக்கு ?
- ராவணன் ஆட்சி செய்த இடம் , அந்த எல்லையானது வடஇந்தியா வரை பரவி இருந்ததாக வால்மீகியே எழுதுகிறார். அப்படி இருக்க சீதையை, தவறான எண்ணத்தோடு கடத்துவதற்கு கானகம் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
- ராவணன் என்றால் அழுமூஞ்சி என்று சமஸ்கிருதம் பொருள் கூறுகிறது . ஒரு பிராமண தந்தை அழுமூஞ்சி என்றா பெயர் வைக்கிறார்.
ராவணன் என்றால் இறால் வண்ணன் என்றும் வீரம் பொருந்தியவன் என்றும் தமிழ் அல்லவா பொருள் கூறுகிறது. எனில் ராவணின் தந்தை பிராமணன் அல்ல. நாட்டில் எவர் திறமைசாலியாக இருந்தாலும் சரி அவனுக்கு தந்தை பிராமணன் தான் என்று கூறும் வழக்கம் ஆரியர்களுக்கு ஒன்றும் புதிது அல்ல.
ஹனுமான் என்னும் திறமைசாலி .இவன் பிறந்தது தென்னிந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் உள்ள அனுமன் மலை.
அவன் தந்தையும் வாயு என்னும் பிராமணன் தான் என்கிறார் வால்மீகி.
பிராமணர்களால் பிறக்கும் குழந்தைதான் அறிவாளி , திறமைசாலி, பலசாலி
உலகின் எந்த மூலையில் ஒரு திறமையானவன் பிறந்தாலும் அவன் தாய் களங்கம் கற்பிக்க படுகிறாள் . என்ன நியாயம் இது.? { தொல்காப்பியரின் தந்தைகூட பிராமணன் தானாம் .} { பல்லவ சாம்ராச்சியத்தின் தலைசிறந்த மன்னன் மகேந்திரவர்ம பல்லவன் கூட பிராமணன் தானாம் . குறிப்பாக மகாபாரதத்தில் இறந்து போகாமல் தப்பிய அஸ்வத்தாமன் வழிவந்தவனாம் . இந்த கதையலேயே காஞ்சிபுரத்தை ஆண்ட பல்லவர்களை தமிழ்தான் என்று சொல்ல சிறு தயக்கம் ஏற்படுகிறதாம். }
புஷ்யமித்திரன் ஆட்சி வந்த காலத்தில் மக்கள் எல்லோரும் ராவணன் என்பவன் மீது கொண்டிருந்த அதித நம்பிக்கையை அழிக்க வேண்டி அவன் அவைக்கள புலவரால் இக்கதை எழுத பட்டிருக்கலாம்,
அவன் மிகவும் நல்லவனயிற்றே என்று கேள்வி எழும்பியதால் அவன் தந்தை கதையும் எழுதுகிறார் வால்மீகி. { அவன் கெட்டவனாயின் இன்று வரை மகாராஷ்டிர மாநிலத்தில் கன்யா குப்ஜா பிராமணர்கள் ராவணனுக்கு தினமும் பூஜை செய்ய மாட்டார்கள். கன்யா குப்ஜா பிராமணர்கள் எனப்படுபவர்கள் தசரத மன்னன் காசியை ஆண்ட காலத்தில் காசியில் வாழ்ந்த மக்கள் . தங்கள் பெருமை எங்கு போனாலும் தெரிய வேண்டும் என்பதற்க்காகவே தங்கள் பெயருக்கு பின்னால் கன்யா குப்ஜா என்று இணைத்து கொண்டவர்கள். }
ராமாயண இடங்கள் எல்லாம் கி.பி.12 ம் நூற்றாண்டிற்கு முன்பு வுருவான இடங்கள் அல்ல .
- எந்த கருத்தையும் காலத்தை வைத்து குறிப்பிடுங்கள்.
- ராமேஸ்வரம் பாலம் கட்டியது ராவணன் என்னும் தமிழ் மன்னன் என்றால் ஒப்புகொள்ள கூடாதா?
- சோழர் காலத்திற்கு முன்பு ராம வரலாறு தமிழ்நாட்டிற்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை
- பல்லவர்களால் மகாபாரதம் மட்டுமே பரவி இருந்தது
- கம்பரின் ராமாயணம் வந்த பிறகுதான் ராம வரலாறு , சோழர்கள் எங்கெல்லாம் சென்றார்களோ அங்கெல்லாம் பரவி இருக்க வேண்டும் .
No comments:
Post a Comment