மே மாதம் 31 - 2016
இன்றைக்கு சில வித்தியாசமான செய்திகள் :
* மந்தை வெளி காவல் துறை டெம்போ கார் திருடு போனது . அதே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது .
இது காவல் துறைக்கு வந்த சோதனையா ?
* திரைப்பட தயாரிப்பாளர் ஆபாவாணன் , வங்கியை ஏமாற்றி 3 கோடியே 46 லட்சம் பணம் பெற்று , அதனை திரும்ப கொடுக்காத வழக்கில் , அவருக்கு 2 கோடியே 10 லட்சம் அபராதம் மற்றும் , 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது .
3 கோடி கடனுக்கே 5 ஆண்டு தண்டனையின்னா , 3000 கோடி கடன் வாங்கின நம்ம கர்நாடக ராஜ்ய சபை உறுப்பினர் மல்லையாவிர்க்கு , எத்தன வருஷ தண்டனை கொடுக்கணும் ? கணக்கு கொஞ்சம் இடிக்குதில்ல ?
* காசோலை மோசடி வழக்கில் இயக்குனர் சேரன் கோர்டில் ஆஜரானார். மற்றும் வாயிதாவை நீடிக்க அவகாசம் பெற்றுள்ளார் . எத்தனை வாயிதா ?
எப்போதுமே ,
தன்னை நல்லவருன்னு காட்டிக்க சேரன் முயற்சி எடுப்பாரே ? அது என்ன ஆச்சி ?
* தான் இறந்து விட்டதாக வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் கொடுத்தார் நடிகர் செந்தில் .
அப்துல் காலம் உயிரோடு இருக்கும் போதே , ஒரு மாநிலத்தின் கல்வி துறை அமைச்சர் அவருடைய படத்துக்கு மாலை போட்டு , இறுதி அஞ்சலி செலுத்தினாங்க . ஆனால் அதையெல்லாம் அவரே பெருசா எடுத்துக்கல !
என்னமோ போங்கையா ?
கவுண்டமணி பற்றி வராத செய்தியா ?
அடுத்த தேர்தலில் , பாண்டே, அனிதா குப்புசாமி , செந்தில் , சிங்கமுத்து இவங்களுகேல்லாம் கண்டிப்பா சீட்டு உண்டு .
அதுவரைக்கும் இப்புடி தான் , தன்னை மக்களுக்கு ஞாபக படுத்திகிட்டே இருப்பாங்க !
* பழங்கால சிலைகள் ஏற்றுமதி செய்யபடும் போது , அது கடத்தல் சிலைகள் என கண்டறிய பட்டு , சிலை ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் கைது செய்ய பட்டார். அவரிடத்தில் , போதிய ஆவணங்கள் இல்லை என கூறபடுகிறது.
அப்போ ஆவணங்கள் சரியாய் இருந்தால் , நம் நாட்டின் பழங்கால சிலைகளை ஏற்றுமதி செய்யலாமா ? என்னப்ப இது நியாயம் ?
No comments:
Post a Comment