Sunday, 10 April 2016

ஜாதி வெறியும் விவசாய நிலங்களும் !





 தமிழ்நாட்டில் 10 ம் வகுப்பு தாண்டி விட்டால் , பணம் உள்ளவர்கள் மட்டும்தான் படிக்க முடியும். இந்த படிப்பு என்ற காரணத்திற்காக மட்டும் பல விவசாய நிலங்கள் விற்க படுகின்றன .

அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளே இங்கு அதிகம் . அதன் கட்டணங்கள் பகல் கொள்ளை . இதுவே நிலங்களை விற்க மூல காரணம் ஆகிறது . ஒரு விவசாயி , தன மகனுக்கு விவசாயம் சொல்லி தருவது என்ன குற்றம் கண்டது இந்த சமூகம் . 

ஆனால் , கல்வி நிறுவனங்கள் , இப்படிதான் மார்கெட் செய்தது . நீ படிக்காமல் போனால் , உருப்பட மாட்டாய் , நீ வாழ்கையை வீணடித்து கொள்வாய் என்று !

அதனை தொடர்ந்து , எதோ சேவை செய்வது போல் , முதலில் ஆரம்பித்து , பிறகு பணம் பிடுங்கி பணக்காரனாக பார்க்கிறது கல்வி நிறுவனங்கள் .

ஒருவனை ஏமாற்ற வேண்டுமாயின் அதற்கு மூன்று வழிகள் உள்ளன ;

1. அவனை பயமுறுத்த வேண்டும் 

2. அவனுக்கு ஆசை காட்ட வேண்டும் 

3. அவனை , அவன் பார்க்கும் வேலையை நாமே இழிபடுத்தி , நாமே அதற்க்கு ஆறுதல் கொடுத்து ஏமாற்ற வேண்டும் .

இவற்றை தான் சந்தையிடுதல் என்ற பெயரில் , செய்து வருகின்றனர் . 

இதிலே மூன்றாவது பார்முலவைதான் கல்வி நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன .

அதன் விளைவு , விவசாயம் செய்வது , படகு செய்வது , செருப்பு செய்வது , பானை செய்வது , கூரை வேய்வது , கூடை முடைவது , குளம் வெட்டுவது , கிணறு அமைப்பது ,முடி வெட்டுவது  என எல்லா பூர்வீக தொழில்களும் இழிவு படுத்த பட்டு , 

இறைவா இதில் இருந்து , எங்களை காப்பாற்ற மாட்டாயா ?

என்று மனம் நொந்து அழும் பொது , வந்து கைகொடுத்து , தலை எழுத்தை மாற்றுவதாய் கூறி பள்ளி மற்றும் கல்லூரி கட்டணங்கள் என்ற பெயரில்  நம் நிலங்களை பறித்த அதி புத்திசாலி அமைப்புகள் தான் 

கல்வி நிறுவங்கள் !

மற்றொரு முக்கிய காரணம் வெளிநாடு செல்வோர் :

வெளி நாடு செல்வோர் எண்ணிக்கை பெருகி வருவதால் ,விவசாயம் செய்ய ஆள் பற்றாக்குறை ஏற்பட்டு , அதுவும் நிலங்களை விற்க காரணமாகிறது . 

ஏன் வெளி நாடு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது .

ஒரு புறம் அவர்களுக்கு விதைக்கப்பட்ட பணத்தாசை ! 

ஆனால் இதுவல்ல முக்கிய காரணம் . 




நம் மக்கள் அனைவரும் ஜாதி வெறி பிடித்தவர்கள் அல்ல . ஆனால் ஜாதிய வெறிக்கு ஆளானார்கள் . இந்த அரும் பணியை ஒரு கூட்டம் செய்து வருகிறது . அது இப்போது வேண்டாம் .

சாதிக்கும் , நிலங்களை விற்பதற்கும் என்ன சம்பந்தம்?

விவசாய நிலங்களில் வேலை பார்க்கும் கூலி தொழிலாளர்கள் யார் தெரியுமா ?
80% பேர் பறையர் இனத்தை சேர்ந்தவர்கள்.
வா என்றால் வருவார்கள் 
போ என்றால் போவார்கள் 
நில் என்றால் நிற்பதும் 
உட்கார் என்றால் உட்காருவதும்  அவர்களுக்கு வழக்கம் . இதை அடிமை தனம் என்று கூறினாலும் , மிகுந்த விசுவாசிகள் . 

அந்த அளவிற்கு இறங்கி போகும் மக்களை பார்த்து , அவர்களை பேர் சொல்லி அழைக்காமல் , அவர்கள் ஜாதியின் பெயர் சொல்லி இழிவு படுத்துவது . அவர்களை அடிப்பது . என்று ஏகப்பட்ட தொந்தரவுகள் கொடுத்த நம் சமூகம் , இதை எல்லாம் கடந்து 

அவர்களை கொலையும் செய்தது . 

உயிர் பயம் ,எல்லோருக்கும் வருவது தானே இயல்பு !

இதன் விளைவு , இந்த சமயங்களை பயன்படுத்தி கொண்ட வெளிநாட்டு நிறுவனங்கள் , அவர்களுக்கு வேலை வாய்ப்பு நல்கியது . வெளிநாடுகளிலும் , அத்தனை பெரும் நல்ல நிலையில் இல்லை . இருந்த போதிலும் , இங்கு படும் இன்னல்களுக்கு வெளிநாட்டு துன்பம் பரவா இல்லை என்ற நிலைக்கு வந்து விட்டார்கள் .

இதை பார்த்த , தன்னை உயர்ந்த ஜாதி என்று அலட்டி கொள்ளும் மன்குனிகளும் வெளிநாடு செல்ல , விவசாயம் படு தோல்வியில் நிற்கிறது .

உடனே கை கொடுத்தது , விஞ்ஞானம் 

விதைக்கவும் இயந்திரம் 
நாற்று நட இயந்திரம் 
கலை எடுக்க இயந்திரம் 
கதிர அறுக்க இயந்திரம் 

எல்லாவற்றிற்கும் இயந்திரம் . இதில் என்ன வேடிக்கை என்றால் , 50 தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய கூலியை ஒரு இயந்திரமே தின்று தீர்கின்றது . அறுவடை செய்தே ஆக வேண்டும் . 
அதற்கு வாடகை கொடுத்து இயந்திரம் வாங்கி , அந்த வாடகை கொடுக்க கடன் வாங்கி , அந்த கடனை அடைக்க நிலத்தையும் விற்கிறார்கள் .

இதே சமயத்தில் மற்றொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் .

jewellery shops க்கான பட முடிவு


அதே போல் பெருகி வரும் நகை கடைகளின் எண்ணிக்கை . நிலங்களில்தான் நம்மால் பலன் காண முடியவில்லை என்று என்னும் மக்களின் கவலை தீர்க்க , நகைகளாக மாற்றி வைத்து கொள்ளுங்கள், அப்போதுதான் உங்கள் மகளை நல்ல படித்த மாப்பிளைக்கு கட்டி வைக்கலாம்  என்று ஆசையும் காட்டி , அதற்காக ஏகப்பட்ட நகைக்கடைகள் , விவசாய நிலங்களை விற்க தூண்டுகின்றன .

இவற்றையெல்லாம் தடுக்க அரசு எந்த முயற்சியும் எடுக்காது .

நாமாக முன்னிறங்கி , 
விவசாயத்தை நம் பிள்ளைகளுக்கும் கற்று கொடுப்பது,
ஜாதி வெறியை விட்டோழிப்பது
ஒரு விவசாயிக்கே பெண் கொடுப்பது  
சீதனங்களை தவிர்ப்பது
என்று முடிவெடுத்தால் மட்டுமே விவசாய நிலங்களை காக்க முடியும் .

இயந்திரங்களை நம்புவதற்கு , மனிதனையும் , மாடுகளையும் மதிக்கலாமே !
நம் உணர்வுகளை இயந்திரங்களா உணர போகிறது !
அனால் சக மனிதன் உணருவான் . 
அடுத்தவரை மதித்தால் நாமும் வாழலாம் , 
நம்மால் பிறரும் வாழலாம் .
இந்த நாடும் வாழும் . 
இந்த நாடும் நம்மை வாழ்த்தும் !


No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...