Sunday, 10 April 2016

கடுக்காய் எனும் தாம்பத்திய காவலன்



கடுக்காய் சாப்பிட்டால் மிடுக்காய் வாழலாம் என்று ஒரு பழமொழி உண்டு .

கடுக்காய் சிறந்த மருத்துவ குணம் கொண்டது . 

இதற்க்கு வேறு பெயர்களும் உண்டு . அவை விஜயன் மற்றும் பிருத்துவி  ஆகும் .

கடுக்காய் பல வகைகள் உண்டு . அவை :

கருங்கடுக்காய் 

செங்கடுக்காய் 


வரி கடுக்காய் 


பால் கடுக்காய் 


இவை அனைத்தும் வெவேறு வகைகளில் , நமக்கு பயன் தருவன .

நம் உடலின் பல்வேறு பிரச்சனைகளுக்கும் , நம் மன ரீதியான 

பிரச்சனைக்கும் மிக முக்கிய காரணம் என்ன தெரியுமா ?

மல சிக்கல் தான் . 

மல சிக்கல் ஏற்பட்டால் , மன உளைச்சல்  ஏற்படும் 

அதனால் ரத்த அழுத்தம் ஏற்படும் 

அதனால் கோபம் மற்றும் மன அழுத்தம் ஏற்படும் .

மலசிக்கலை விட மிகபெரிய பிரச்னை தம்பதிய குறைபாடு .

இந்த தாம்பத்திய குறைபாடு , விந்தணுக்கள் குறைவதால் ஏற்படுகிறது .

இதனால்  தாம்பத்தியத்தையும் பாதிக்க படுகிறது . 

மல சிக்கல் இன்றி இருந்தாலே , நம் முடிவுகள் பெரும்பாலும் சரியான முடிவுகளாக இருக்கும் . 

தாம்பத்திய குறைபாடு இன்றி இருந்தால் வாழ்வும் நன்முறையில் இருக்கும் .

கடுக்காய் இந்த பணியை சிறப்பாக செய்கிறது .

மல சிக்கல் தீர்க்கவும் , விந்தணுக்கள் பெருகவும் என. பல வகைகளில் இதன் பயன்கள் விரிந்து செல்கின்றன .

இந்த உலகின் இயற்கை கொடுத்த அனைத்தும் பயன்பாடு கொண்டதே !
ஆனால்எப்போது  பயன்படுத்துகிறார்கள் , எப்படி பயன் படுத்துகிறார்கள் என்பது மிக முக்கியம் . இதன் அடிப்படை யிலே தான் ஒரு பொருள் விஷம் ஆவதும் , மருந்தாவதும் உள்ளது .

இதற்க்கு கடுக்காயும் விதி விலக்கல்ல !

எனவே இதை பயன்படுத்தும் விதம் பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் .

சுக்குக்கு தோலில் விஷம்

கடுக்காய்க்கு கொட்டையில் விஷம் என்று  கூறுவது உண்டு .

எனவே இதன் கொட்டைகளை நீக்கி விட்டு தோல்  பகுதியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் .

எப்போது பயன்படுத்த வேண்டும் ?

காலையில் இஞ்சி தண்ணியும்

நன் பகலில் சுக்கு தண்ணியும்

மாலையில் கடுக்காய் தண்ணியும் குடிக்க , நம் வாழ்நாள் அதிகரிக்குமாம் .

( தேயிலை தீ நீருக்கு பதில் இதை அருந்துவதே சால சிறந்தது )

( கடுக்காய் பொடி எல்லா நாட்டு மருந்து கடைகள் மற்றும் இயற்கை பொருள் விற்பனை கடைகளில் கிடைகிறது )


No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...