Tuesday, 5 April 2016

நாதரிகளின் நட்சத்திர கிரிகெட்

தென்னிந்திய நடிகர் சங்கம் கிரிகெட்

2016 ஏப்ரல் 17 ம் தேதி சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் கிரிகெட் விளையாட்டு போட்டி நடத்த இருக்கிறது . ஒரு அணியில் 6 பேர் என 8 அணிகள் பிரிக்க பட்டுள்ளன .

இதனை நடத்துவதற்கு முக்கிய காரணம் , நடிகர் சங்க கட்டிடத்தை கட்ட வேண்டும் . என்பதே ! எனவே அனைவரும் இந்த கிரிகெட் போட்டிக்கு வந்து நிதி தருவீர் என்று அழைப்பு விடுக்கிறார்  நடிகர் விஷால் .


ஆனால் மக்களின் கேள்வி இதுதான்:

ஒரு சங்க கட்டிடத்தை கட்ட அந்த சங்கத்தின் உறுப்பினர்கள் தான் பணம் தருவர் . ஏன் இதை தமிழக மக்களிடம் வசூல் செய்ய வேண்டும்.

இரண்டாவது , நடிகர்கள்  யாரும் ஏழைகள் அல்ல.


மூன்றாவது , தென்னிந்தியா நடிகர் சங்கம் என்றால் , தென்னிதியாவில் உள்ள கன்னட , தெலுங்கு , மலையாள நதிகளும் இதில் உள்ளடக்கம். எனில் ஏன் இதை தமிழ் நாட்டில் நடத்தி , தமிழ் மக்களிடம் நிதி திரட்ட வேண்டும் .

நான்காவது , தமிழ் நாட்டில் , தேர்தல் நடைபெறும் கால கட்டத்தில் தான் இதை நடத்த வேண்டுமா ?

ஐந்தாவது , நடிகர் சங்கம் எப்போதும் , வெளிநாடுகளில் தான் நிதி திரட்டும் . இம்முறை ஏன் இங்கேயே பிச்சை எடுக்கிறது . சாரி நிதி வசூல் செய்கிறது .

ரஜினிகாந்த் மட்டுமே கூட சில கோடிகள் கொடுக்கலாம் எனில் , 13 கோடி ரூபாய் வசூல்  என்ற இலக்கோடு நடிகர் சங்கம் கிரிகெட் நடத்த வேண்டிய அவசியம் என்ன ?

இது தான் காரணம் :


இந்த போட்டியை ஹைதராபாத்தில் வைக்கலாம்

இத போட்டியை பெங்களூரில் வைக்கலாம்

ஆனால் அப்படி செய்ய கூடாது . அங்கு போட்டி வைத்தால் அதனால் யாருக்கு என்ன பயன் ?

கேவலம் 13 கோடி என்பது நடிகர் சங்கத்தின் இலக்கு அல்ல .

தமிழக மக்களை குழப்பி , அரசியல் கருத்துகளை பகிர விடாமல் தடுப்பதே !

சென்னை வெள்ள பெருக்கின் பொது நடிகர் சிம்பு கைகொடுத்தார் .

அவரது பீப் பாடலை பேசி பேசியே தமிழகம் , சென்னை வெள்ளத்தையும் , அதனால் ஏற்பட்ட இழப்பையும் , அதன் பிறகு மத்திய அரசால் கொடுக்க பட்ட நிவாரண நிதி கணக்கையும் மறந்து போனது .


அதே போல தான் இப்போதும் , ஏப்ரல் 20 ம் தேதிக்கு முன்னதாகவே தமிழ்நாட்டில் அரசியல் சார் முடிவுகளும்  , அது சார்ந்த விவாதங்களும் காரசாரமாக நடக்க , அதை தடுக்க ஒரே வழி நடிகர்கள் கையில் தான் உள்ளது .

எப்போதுமே நடிகர்கள் தான் நம் அரசை காப்பாற்றி வருகிறார்கள் .

மக்கள் சேப்பாக்கம் சென்று பார்க்கா விட்டாலும் , தொலைக்கட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் . நாம் எதோ , புத்திசாலி தனமாய் , நாம் தான் நேரில் சென்று பார்க்க வில்லையே என்று எண்ணி கொண்டு இருப்போம் .
ஆனால் தொலைக்கட்சிகள் , விளம்பர தாரர் மூலம் வசூல் செய்யும் . அதற்கான உரிமைக்காக நடிகர் சங்கத்திற்கு நிதி கொடுக்கும் .
தமிழனம் மறைமுகமாக ஏமாந்து போகும் .

இப்போதும் தமிழனம் எப்போதும் போல் நடிகர்கள் விளையாடியதை பற்றியும் , அவர்கள் வீர தீர செயல்கள் பற்றியும் அங்கு நடந்த பிரச்சனைகள் பற்றியும்  மட்டுமே பேசி கொண்டு , இப்போது எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகளை சரி வர எடுக்க மாட்டோம் .

இதில் ஒவ்வொரு பிரிவுக்கும் தஞ்சாவூர் டீம் , திருச்சி டீம் , கோயம்புத்தூர் டீம் , சென்னை டீம் என்றும் 8 பிரிவுகளாக தமிழகம் பிரிக்க பட இருக்கிறது .

எல்லோரும்க்கு ம் உள்ள ஊர் பாசம் , தமிழக முடிவு என்ற முடிவில் இருந்து பிரிக்க பட இருக்கிறது .  அனால் இதில் இருக்கும் எந்த நடிகனும்  அந்த ஊர் காரனாக இருக்க மாட்டான் . இவனுக்கு பின்னால் ரசிகர் மன்றங்களும் , அதன் உறுப்பினர்களும் என்று தமிழக இளைஞர்கள் பிரிக்க பட இருக்கிறார்கள் . இந்த இளைஞர் கூட்டம் , அரசியல் பேசுவதை விடுத்து என் தலைவன் அணிதான் வெற்றி பெரும் என்றும் , என் ஊர் தான் வெற்றி பெரும் என்றும் , அதை மட்டுமே பேசி பேசி , அழிய இருக்கிறது .

இதனால்

கடைசி நேர முடிவுகள் தவறுதலாக முடியும்


எப்படி பார்த்தாலும் தமிழனத்தை ஏமாற்ற தென்னிந்தியா முயற்சித்து கொண்டே இருக்கிறது !


ஒரு நடிப்பு துறை சார்ந்த முதல்வர் இருக்கும் வரைதான் நடிகளுக்கு மதிப்பு !

ஆகவே அவர்களை காப்பாற்ற நடிகர்கள் போராடுகிறார்கள் .
அப்போதுதான் நாளை அவர்களும் அந்த இடத்திற்கு வர முடியும் !

எனவே தமிழனை சிந்திக்க விடாமல் செய்வதே நடிகர்களின் நோக்கம்.

நடிகர்களிடமிருந்து தமிழனம் மீள வேண்டும் !



அட போங்கடா !


கேடு கேட்ட நடிகர் இனமே ,
நாடக தமிழை அழித்த நடிகர்களே
எம்மக்களை உனக்கு கீழே அடிமையாக்கி உள்ள நடிகர் கூட்டமே

உனக்கும் அழிவு வருகிறது
அதை தர போவது வேறு யாரும் அல்ல
உனது ரசிகர் கூட்டமே !

காத்திரு !
இந்த கூட்டம் உனக்கு அடிமை அல்ல
உன்னையும் , உன்னை ஆட்டி வைப்போரையும்
அடக்க போகும் கூட்டம் !
அழிக்க போகும் கூட்டம் !

No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...