Wednesday, 6 April 2016

ரிலையன்ஸ்






இந்தியாவின் மிக பெரிய நிறுவனங்களில் ஒன்று தான் ரிலையன்ஸ் .
1940 களில் திருபாய் அம்பானி யால் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் , கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து , டெக்ஸ்டைல்ஸ் துறை,தொலைதொடர்பு துறை  , பெட்ரோலிய துறை ,  என்று பல துறைகளில் கால் பதித்து , இந்தியாவின் 20% ஏற்றுமதி இந்நிறுவனத்தால் தான் என்ற நிலையை அடைந்துள்ளது .


ஆனால் இந்நிறுவனதால் இந்திய அடைந்த பலன்களின் , மற்றொரு பக்கம் உண்டு . 


இந்தியாவின் பூர்விக தொழிலில் ஒன்னு தான் கப்பல் கட்டும் தொழில் ! அதை முடக்கிவிட்டு , ஒரு கப்பல் 700 கோடி ரூபாய்க்கு இந்தியாவிற்கே விற்கும் அதி புத்திசாலி நிறுவனம்தான் ரிலையன்ஸ் !

இவங்க பெட்ரோல் விற்பனைக்காக , கொஞ்ச கொஞ்சம் இருந்த நீர்வழி பாதைகளையும் அழித்து , சில பல தொழிலாளர்கள் வயிற்றில் அடித்ததும் ரிலையன்ஸ்தான் .

தேவை இல்லாதவன் கையில் கூட செல்போன்  என்பது , அனாவசியமாக எல்லோர் கையிலும் துப்பாக்கி இருப்பதற்கு சமம் . அந்த சாதனையை செய்து , அனாவசிய மன உளைச்சலால் மக்களை படுத்தி கொண்டு இருப்பதும் இந்த ரிலையன்ஸ்தான்.

கதர் ஆடையில் , இயங்கிய இந்தியாவில் மாற்று முறை புகுத்தி , தேவைக்கு மீறி ஆடைகள் எல்லோர் வீடுகளிலும் ஒரு துணி கடை இருப்பது போல் செய்தும் , இந்தியாவில் தற்கொலை செய்து கொண்ட  விவசாயிகளில் 75% பேர் பருத்தி விவசாயிகள் . அந்த சாதனையை புகுத்தியதும் ரிலையன்ஸ்தான் !

இன்றைய நெசவாளர்களின் வாழ்வாதாரம் பறி போனதற்கு முக்கிய காரணமும் ரிலையன்ஸ்தான் !

இந்தியாவிலேயே அதிக கடன் வைத்திருப்பதும் ரிலையன்ஸ் தான் !

ஒரு தொழில் சார்ந்த பிரச்சனைக்கு , ஒரு பாக பிரிவினைக்கு இந்திய பிரதமரே வந்தார் என்றால்  , எந்த அளவிற்கு அரசியல் வாதிகளுக்கு துணை நின்று இருக்கும் இந்த அம்பானி குரூப் !

1 லட்சம் கடன் இருந்தாலே , தன குடும்பத்தை பிரிந்து 
எதோ ஒரு நாட்டில் , 
டாயலேட் கழுவும் வேலை எல்லாம் பார்க்கும் இந்தியர்கள் வாழும் நாட்டில் தான் 106000 கோடி கடன் இருந்தும் , பல அடுக்கு மாடி கட்டி ஆனந்தமாய் வாழ்கிறது அம்பானி குரூப் !

இவங்களுக்கு பத்ம பூசன் , பத்ம விபூசன் இதெல்லாம் கொடுக்க வேண்டியது தான் இந்திய விற்கே கௌரவம் !

அப்போ சொற்ப கடனுக்காக தற்கொலை செய்து கொள்ளும் விவசாயி  , தொழிலாளி இவங்க நிலைமை எல்லாம் ,
எந்த கௌரவ கணக்கில் சேர்ப்பது !

சொல்ல இந்தியாவில் ஆளும் இல்லை

அதை காது கொடுத்து கேட்க எந்த ஆட்சியும் இல்லை !

வாங்க எல்லோரும் சொல்லுவோம் !
பாரத் மாத கி ஜெய் !


No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...