கரிகாய் பொறித்தாள்
கன்னிக்காய் தீய்த்தாள்
பரிக்காய் பச்சடி செய்தாள்
உருக்கமுள்ள அப்பைக்காய் நெய் துவட்டல் ஆக்கினாள் !
-------------- காள மேக புலவர்
அத்திக்காயில் பொறி யல் செய்து
வாழைக்காயில் தீயல் செய்து
மாங்காயில் பச்சடி செய்து
கத்திரிக்காயில் நெய் துவட்டல் செய்து , என வகைவகையாய்
உண்டிருக்கிறார் காளமேக புலவர் .
இது போன்ற காய்கறிகள் தான் உள்ளூர் காய்கறிகள் !
கத்தரிக்காயில் மட்டும் 500 வட்டார வகைகள் இருந்துள்ளது .
பொய்யூர் கத்தரி
கண்ணாடி கத்தரி
வரி கத்தரி
பச்சை கத்தரி ,,,,, இப்படி இந்த கத்தரி வகைகளே மிக நீளம் !
இதே போல் வெண்டைக்காயும் வகைகளில் சளைத்தது இல்லை .
கண்ணாடி வெண்டை
பச்சை வெண்டை
சிகப்பு வெண்டை
கஸ்தூரி வெண்டை ........ இப்படி இதன் வகையும் மிக நீளம் .
நீர் காய்கறிகள் கூட்டு செய்ய ஏற்றது .
அதென்ன நீர் காய்கறிகள் :
அதாங்க பூசணிக்காய் , வெள்ளரிக்காய் , சுரைக்காய் , பீர்கங்காய் , கோவைக்காய், அத்திக்காய் ஆகியன .
இவை எல்லாம் ரொம்ப விலை குறைவு . ஆனா பெண்களின் உடல் சார்ந்த நோய்களுக்கும், சிறுநீர் பிரச்சனைக்கும் இந்த காய்கறிகள் கொடுக்கும் மருத்துவ சத்துக்கள் மிக அதி கம் .
இதுல வெண் பூசணி காய் வெள்ளை படுதலை நீக்கும் .
சுரைக்காய் உப்பு நீரை வெளியேற்றும் . சிறுநீர கல்லை கரைக்கும்.
பீர்கங்காய் உப்பு கனிம சத்தை கொடுக்கும்
கோவைக்காய் சர்க்கரையை கட்டுபடுத்தும்
அவரைக்காய் கொழுப்பை குறைக்கும்
இந்த உள்ளூர் காய்கறிகள் , கேரட் , முள்ளங்கி , காலிபிளவர்,முட்டைகோஸ் , நூல்கோல், ப்ரக்கொலி இவற்றையெல்லாம் விட பன்மடங்கு அதிக சத்து நிறைந்தது .
வண்ண காய்கறிகளில் மட்டும்தான் சத்துகள் உள்ளது என்று கூறியே ,மருத்துவ உலகம் நம் நாட்டின் இறக்குமதி காய்கறிகளை பெருக்கி அந்நிய செலாவணிக்கும் கேடு விளைவிக்கிறது .
இதை விட முக்கியமானது நம் நாட்டு கீரைகள் .
"தாளி முருங்கை தளை தூதுணம் பசலை வாளி வறூ கீரை
நெய்வார்த்துண்ணில் ஆளிஎனவிஞ்சுவார் போகத்தில் "
கீரைகள் விந்தணுவை அதிகரிக்க செய்யும் . இவை பக்க விளைவுகள் இல்லாத வயாகரா !
"பொன்னாங்கன்னிக்கு புளியிட்டு ஆக்கினால் உண்ணாப் பெண்ணும் உழக்கு "
என்று கூறிய வரிகளில் பெண்ணுக்கு , பொன்னாகன்னி கீரை எந்த அளவுக்கு முக்கியம் என்று கூறுகிறது தமிழ் மருத்துவம் .
"போன கண்ணும் திரும்புமாம் , பொன்னாங்கன்னியிலே " என்று கூறும்
போது
பொன்னாங்கன்னி கீரை கண்ணுக்கு மிகவும் நல்லது என்பது தெரிகிறது .
நாம் காய்கள் என்று எண்ணி உண்ணும் சில கனிகள் :
நெல்லிக்காய் கூட்டு : பாசிபருப்புடன் சேர்த்து , கொட்டைகளை நீக்கி நெல்லிக்காய் சமைத்தால் நெல்லி கூட்டு அருமையாக இருக்கும்.
அத்திக்காய் கூட்டு : அத்திக்காய் பொரியல் செய்தால் அதுவும் அருமை
தேங்காய் : இது சமைக்காமலே உண்பது சால சிறந்தது .
எப்புடி எல்லாம் சாப்பிட கூடாது தெரியுமா ?
புளியில் ஊறாத காய்
ஏலக்காய் இல்லாத இனிப்பு
பட்டை போடாத பிரியாணி
மல்லி தழை இல்லாத ரசம்
கறிவேப்பிலை இல்லாத சட்னி
இப்புடி சாப்பிட கூடாதாம் !
நம்மில் ஊடுருவி நிற்கும் உள்ளூர் காய்கறி போன்று வெளிநாட்டு காய்கறிகள்
ஐரோப்பாவில் இருந்து வந்த டீ , காபி , மற்றும் தக்காளி
சிலியில் இருந்து வந்த மிளகு போன்ற காய் , மிளகாய்
சீனாவில் இருந்து வந்த முள்ளங்கி
பெர்சியாவில் இருந்து வந்த பெரிய வெங்காயம்
ஜப்பானில் இருந்து வந்த சேனை கிழங்கு
.......................................................இன்னும் நீள்கிறது இந்த பட்டியல்
நம் நாட்டின் கொடியில் விளையும் காய்கறிகளுக்கும்
மரத்தில் விளையும் முருங்கை கீரைக்கும்
இணையான உணவு இந்த உலகில் இல்லை
இனி வரபோவதும் இல்லை !
( இது டாக்டர் . சிவராமன் அவர்களின் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது )

No comments:
Post a Comment