குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் இருக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று வயிற்றில் உள்ள பூச்சி .
இது குழந்தைகளுக்கு மட்டும்தான் வரும் என்று கூறுவது மிகத்தவறு .
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட எல்லோர் வீடுகளிலும் வாரத்திற்கு ஒரு முறை வயிற்று பூச்சிக்கு மருந்து சாப்பிட்டு வந்தனர் . இப்போது தான் நாகரிக மயக்கத்தில் அதை விட்டு விட்டோம்.
இது குறித்து கூறும்போது இவ்வாறு கூறுவார்கள்.
தினமும் ஒரு முறை
வாரத்திற்கு ஒரு முறை
மாதத்திற்கு இரு முறை
ஆண்டுக்கு ஒரு முறை என்று!
தினமும் ஒரு முறையாவது பற்களை சுத்தம் செய்
வாரம் ஒரு முறையாவது வயிற்றை சுத்தம் செய்
மாதம் இரு முறையாவது உடல் உறவு கொண்டு உடற்கழிவை சுத்தம் செய்
ஆண்டுக்கு ஒரு முறையாவது வீடுமுழுவதையும் சுத்தம் செய் !
இது சுத்தம் குறித்து வழக்கத்தில் இருக்கும் பேச்சு!
இதன் அடிப்படையில் , வாரத்திற்கு ஒரு முறை யாவது வயிற்றில் உள்ள பூச்சிகளை களைய வேண்டிய அவசியம் எல்லோருக்கும் உள்ளது.
ஆனால் அதை மருந்து வழிதான் செய்ய வேண்டும் என்ற அவசிய இல்லை .
சாப்பாடு மூலமாகவும் வயிற்றில் உள்ள பூச்சிகளை விரட்டலாம் ..
அது தாங்க சுண்டை வற்றல் குழம்பு .
சுண்டைக்காயை இரண்டாக வெட்டாமல் , கொஞ்சமாக பிளந்து அதனை சாம்பாரில் போட்டு சமைத்து சாப்பிட பூச்சிகள் அழியும்.
ஆனால் எல்லா இடங்களிலும் சுண்டைக்காய் கிடைப்பதில்லை . ஆனால் சுண்டைவற்றல் கிடைக்கும்.
கொஞ்சம் சுண்டை வற்றல் எடுத்து கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள் .
கொஞ்சம் புளி கரைத்து வடிகட்டி , அதில் தக்காளி கரைத்து , அதனுடன் 2: 1 என்ற விகிதத்தில் மல்லி தூளும் ,மிளகாய் தூளும் சேர்த்து சரியான அளவு உப்புடன் கலந்து ஒரு 5 நிமிடங்கள் ஊற விடுங்கள் .
அடுப்பில் பாத்திரம் வைத்து எண்ணெய் விட்டு , கொஞ்சம் வெந்தயம் , கொஞ்சம் உரித்த பூண்டு , வெங்காயம் இட்டு வதக்கி அதில் ஏற்கெனவே கரைத்து வைத்துள்ள கரைசலை ஊற்றி கொதிக்க விடுங்கள்.
வேறொரு பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் விட்டு சுண்டைக்காய்
வற்றலை மிதமான தீயில் வதக்கி , அதை கொதிக்கும் குழம்பில் விடுங்கள்.
கொஞ்சம் தேங்காயிம் , கொஞ்சம் சோம்பு ( பெருஞ்சீரகம் ) சேர்த்து அரைத்து இறக்கும் நேரத்தில் ஊற்றி ஒரு கொதி மட்டும் விட்டு இறக்கி விட வேண்டும்.
சுண்டை வற்றல் குழம்பு தயார்.
இதற்கு சுட்ட அப்பளம் , சரியாக இருக்கும்.
இது ஒரு சிறந்த மருந்து வயிற்று பூச்சிக்கு !
மற்றொரு மருந்து உண்டு .
தினமும் அல்லது வாரம் இரு முறையாவது பப்பாளி பழம்
உண்ணுங்கள் .
அது வயிற்றில் புழு பூச்சி தங்க விடாது .
No comments:
Post a Comment