Monday, 28 November 2016

ரொக்கமில்லாத வர்த்தகம் சாத்தியமா ?

நேற்று 2016 நவம்பர் 27 அன்று ,இந்தியா மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வானொலி மூலம் ரொக்கமில்லாத வர்த்தகம் பற்றியும் , அதற்கான இளைஞர்களின் ஒத்துழைப்பு எப்படி இருக்க வேண்டும் என்றும் கூறினார் .
அதன் சுருக்கம் :

 அவர் கூறியிருப்பதாவது

 இந்த ஆண்டு , இந்தியா ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினேன் என்று கூறியுள்ளார் .
காஷ்மீர் பஞ்சாயத்து தலைவர்கள் பலர் ஒன்று கூடி ,அவரை சந்தித்து பெருமை படுத்தி உள்ளதாகவும் கூறியுள்ளார்.
500 , 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாத நோட்டாக அறிவித்துள்ளதால் , 4 பெண்கள் ஒன்று கூடி 2000 ரூபாய்க்கு பொருள்களை வாங்கி கொண்டு , அதன் செலவுகளை வீட்டில் வந்து பங்கிட்டு கொண்டதாகவும் ,
பீகார் கிராம மக்கள் தங்கள் ஊருக்கு A T M இயந்திரம் வேண்டும் என்றதால் அதற்கான ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும் ,

இவ்வாறு மக்கள் கேட்பதால் , நாட்டில் உள்ள மக்கள் டிஜிட்டல் முறைக்கு மாற தயார் நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் upi ,e -purse , rupay பற்றியும் மக்களுக்கு போதுமான விழிப்புணர்வு வேண்டும் என்றும் , அதற்காக ஒவ்வொரு இளைஞரும் , ஒரு நாளைக்கு 10 குடும்பகளுக்கு , ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை பற்றி சொல்லி தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார் .

பிரதமரின் உரைக்குள் பல விஷயங்கள்  உள்ளன .:

( ஒரு சராசரி இந்தியனின் சிந்தனை இது )

1. ரொக்கமில்லாத வர்த்தகம் நடைபெற எல்லோர் கைகளிலும் ஸ்மார்ட் போன் இருக்க வேண்டும். ( தற்போது இந்தியாவில் 22 கோடி மக்கள் மட்டுமே ஸ்மார்ட் போன் பயன்படுகின்றன. இது இந்திய மக்கள் தொகையில் 17% மட்டுமே ஆகும் .மீதம் உள்ள தேவைகளை நீக்க முதியவர்கள் , குழந்தைகள் இவர்கள் எண்ணிக்கை போக , குறைந்த பட்சமாக ஒரு போன் 5490 ரூபாய் என்று கொண்டாலும் 27450 கோடி ரூபாய் ஸ்மார்ட் போன் நிறுவனங்களுக்கு லாபமாக போய் சேரும் . நம் மக்கள் அத்தனை செலவு செய்வார்களா ?)

2.  இந்த வர்த்தகம் குறித்து வணிகர்களுக்கு முதலில் பயிற்சி அளிக்க வேண்டும் . இது அரசின் கடமை.

3.  கையெழுத்து கூட போட தெரியாமல் , வணிகம் செய்பவர்கள் தான் , இந்தியாவில் அதிகம் . இவர்களுக்கு ஒரு வழி கூற வேண்டும்.

4.  ஸ்மார்ட் போன் கையில் இருப்பதை விட , ரொக்கமில்லா வணிகம் தொடர்பான ஆப் மக்களுக்கு இலவசமாக கிடைக்க வேண்டும்.

5. குறிப்பாக எல்லா இடங்களிலும் வை பை வசதி இலவசமாக கிடைக்க வேண்டும் . ( குறைந்த பட்ச இணைய வசதி செய்வதாயினும் மொத்த செலவு 35000 கோடி ரூபாய் ஆகும் ) இதன் மூலம் சராசரி இந்தியனின் மாதாந்திர வருமானத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் அதிக செலவு ஆகும் .

6 .ஒவ்வொரு நடவடிக்கைக்கும் மாதந்தோறும் , வங்கிகள் பிடிக்கும் சேவை வரி கட்டணத்தை நிறுத்த வேண்டும்.( குறைந்த பட்சமாக 100 ரூபாய்க்கு 2 ரூபாய் வீதம் இந்தியாவின் மொத்த வர்த்தகத்துக்கும் அமெரிக்கா பெரும் லாபம் 1700 லட்சம் கோடி என்பதையும் அறிந்து கொள்வோம். இதன் மூலம் இந்தியாவின் அந்நிய செலாவணி குறைந்து பணமதிப்பும் குறையும் )

7. ஒருவர் பணத்தை , அவரது password பயன்படுத்தி , வேறு ஒருவர் எடுக்காமல் இருக்க வழி செய்ய வேண்டும். ( இது சார்ந்த வழக்குகள் பல நீதிமன்றம் வந்து செல்கின்றன என்பது அனைவரும் அறிந்ததே. சராசரி இந்தியன் எப்படி அதை ஏற்பான் ? )

india pic with black money க்கான பட முடிவு


8. தனது வீட்டின் எதிர்புறத்தில் உள்ள பால் காரருக்கோ , கீரை விற்பவருக்கோ , பணம் கொடுக்க இடைத்தரகர் எனும் வங்கியை தேடுவது , எல்லோரையும் தனிமை படுத்தும் நடவடிக்கை போல் மாறும் .

9. அது மட்டும் அல்லாமல் , எவரும் இதை விரும்ப மாட்டார்கள்.

10. இதன் குழப்ப , முறைமைகளானது பண்டமாற்று முறைக்குத்தான் அழைத்து செல்லுமே ஒழிய , வங்கிகள் மூலம் நடைபெறுவது சற்று சாத்தியப்படாது.

11. என் வீடு , என் ஊர் , என் உறவுகள் , எனக்கு தெரிந்த மளிகை கடைக்காரர் , என் வீட்டோடு ரத்த பந்தம் இல்லாது , உறவு போல் நடந்து கொள்ளும் பால் காரர், என் வீட்டின் விழாக்களுக்கு சமைப்பவர், பாத்திரம் துல க்குபவர் என என் சார்ந்தவர்களோடு நான் செய்து கொள்ளும் ரொக்க பரிவர்த்தனைகளை , எங்கோ இருக்கும் யாரோ ஒருவர் பரிசோதிப்பதும், அவர் அதனை நிர்வகிக்க முற்படுவதும்  மனதளவில் என்னுடைய தனிப்பட்ட சுதந்திரத்தில் வேறு ஒருவர் தலையிடுவது போலும்  உணர்வையே ஏற்படுத்துகிறது.

12. என்னிடம் உள்ள எல்லா பரிவர்தனைகளையும் , வங்கிகள் மூலம் காட்டுவது குடும்ப உறவுகளில் சிக்கல்களை ஏற்படுத்தும்.

13. மனைவிக்கு தெரியாமல் , தன உறவுகளுக்கும், தனது நண்பர்களுக்கும் உதவி செய்யும் கணவர்களுக்கும் , கணவருக்கு தெரியாமல் தன தாய் தகப்பனுக்கு பண உதவி செய்யும் மனைவிமார்களும் என எல்லோரும் கோர்ட் வாசலிலே நிற்க வேண்டும் .

14. நம் நாட்டின் பிரச்னை,  எல்லா மக்களும் , வங்கிகளை பயன்படுத்தே தீர வேண்டும் என்பது அல்ல . நாட்டின் கருப்பு பணம் இல்லாமல் இருப்பதே !

15. இதன் அடிப்படை தவறு செய்தவர்கள் மக்கள் அல்ல. கஸ்டம்ஸ் துறை அதிகாரிகள் . வருமான வரி அதிகாரிகள் . லஞ்சம் வாங்கும் அரசு அலுவலர்கள் . நன்கொடை என்ற பெயரில் மக்களை கொள்ளை அடிக்கும் கல்வி நிறுவனங்களும் , அரசியல் வாதிகளும்.

16. என் நாட்டில் எல்லோருக்கும் இலவச கல்வி என்று கிடைக்கிறதோ அன்று கருப்பு பணம் ஒழிந்து விடும்.

17. என் நாட்டில் எல்லோருக்கு இலவச மருத்துவம் என்று கிடைக்கிறதோ அன்று கருப்பு பணம் ஒழிந்து விடும்.

18 . என் நாட்டின் விவசாயிகள் , என்றைக்கு சலுகை பொருள் எல்லாம் எனக்கு வேண்டாம் , எனது உற்பத்தி பொருளுக்கு நான் விலை வைக்க எனக்கு உரிமை வேண்டும் என போராட்டம் நடத்தி வெற்றி பெருகிறானோ , அன்று கருப்பு பணம் ஒழிந்து விடும்.

19. கலாசார சீர்கேட்டால் , அநாதை பிள்ளைகளும் , ஊனமுற்ற பிள்ளைகளும் , வயது  முதிர்ந்த மக்களும் பெருகி விட்ட நாட்டில் , அவர்களுக்கான வாழ்க்கையை அரசு மட்டுமே கொடுக்கும் , தனியார் தேவை இல்லை என்று , என்றைக்கு சட்டம் வருகிறதோ அன்று கருப்பு பணம் ஒழிந்து விடும்.

20 . சினிமா நடிகர்களும், விளம்பரத்துறையினரும் , வணிக பெரு மக்களும், மத உணர்வாளர்களும்  நடத்தும் டிரஸ்ட் எனப்படும் அறக்கட்டளைகள் என்று இந்தியாவில் இருந்து ஒழிகிறதோ அன்று கருப்பு பணம் ஒழிந்து விடும் .

21. என்று இந்திய கனிம வளங்கள் ஏற்றுமதி நிறுத்த படுகிறதோ , அன்று கருப்பு பணம் ஒழிந்து விடும் .

22. பிற  நாடுகளில் உள்ளது போல் 5 ஆண்டுகள் , 10 ஆண்டுகள் என வருமான வரியை முறையாய் செலுத்தியவர் ஓர் ஆண்டு வேலை இன்றி இருந்தால் அவருக்கு அரசு ஊதியம் தரும் என்று சட்டம் வருகிறதோ அன்று கருப்பு பணம் ஒழிந்து விடும் .

23 . 5 கோடிக்கு மேல் வர்த்தகம் செய்பர்கள் எத்தனை பேர் இருப்பார்கள் இந்தியாவில் , அவர்கள் கணக்குகள் வங்கிகள் மூலம் நடைபெற்றாலே போதும் கருப்பு பணம் ஒழிந்து விடும் .

24. எங்கும் , எவருக்கும் ரசிகர் மன்றங்கள் நடத்துவது கூடாது , அதற்கென வசூல் செய்வதோ , அதற்க்கு செலவு கணக்கு காட்டவோ கூடாது என்று கூறினாலே போதும் , கருப்பு பணம் ஒழிந்து விடும் .

25. வகுப்பில் , படிக்கும் மாணவர்களில் யாரெல்லாம் சரியாக படிக்க மாட்டார்கள் என்பது ஒரு ஆசிரியருக்கு தெரியாமல் இருக்காது. தெரிந்தும் எல்லா மாணவர்களுக்கும் தண்டனை கொடுப்பது சரியான ஆசிரியருக்கு அழகல்ல ! மன்னவனுக்கும் , மந்திரிக்கும் கூட இது பொருந்தும் !

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் 
வாய்நாடி வாய்ப்ப செயல் .

-                                                    திருவள்ளுவர் 


No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...