Monday, 2 January 2017

காந்திக்கு முன் இந்திய மஹாத்மா !

சுதந்திர இந்தியாயாவில் , மட்டும் அல்ல உலகம் முழுக்க மஹாத்மா என்றால் அது காந்தியடிகளையே கூறுவார்.

ஆனால் அவருக்கு முன்னாலேயே , இந்தியா ஒரு மஹாத்மா வை பெற்றிருந்தது .

அவர் தான் ஜோதி  பாய் பூலே  ஆவார் . ( 1827 - 1890 )


                          ஜோதி பாயும் அவரது மனைவி சாவித்திரி பாயும் .



1827 ஆம் ஆண்டு காணவாடி ( தற்போது மஹாராஷ்ட்ரா ) என்ற இடத்தில பிறந்த ஜோதி பாய் , தனது 12 வது வயதில் , 9  வயது பெண்ணாகிய சாவித்திரி பாயை மணந்து கொண்டார். 

ஆனால் அவர் தனது மனைவிக்கு , எழுத , படிக்க கற்று கொடுத்தார்.

அக்கால கட்டத்தில் , வயது வரும் முன்னே விதவை கோலம் என்பது சர்வ சாதாரணமாக இருந்தது மஹாராஸ்ராவில் .
ஜாதி கொடுமைகள் 

உயர் ஜாதி பெண் என்றாலும் , விதவை கோலம் , கொடூரத்தையே கொடுத்தது .

தனது 21 வது வயதில் , 1848 ம் ஆண்டு அவர் படித்த ஒரு புத்தகம் , மாபெரும் மாற்றத்திற்கு வழிவகுத்தது . அந்த புத்தகம் தாமஸ் எழுதிய " ரைட்ஸ் ஆப் மேன் "

அதே ஆண்டு இவரும் ,இவர் மனைவி  சாவித்திரி பாயும் சேர்ந்து , ஒரு பள்ளி ஆரம்பித்தனர் .அது பெண்களுக்கான பள்ளி . இது இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி .

அங்கு ஜாதி கொடுமைகளை எதிர்க்கவும் ,

விதவை மறுமணம் குறித்தும் போதிக்கப்பட்டது. 

அது தாழ்ந்த ஜாதி , உயர்ந்த ஜாதி வேறுபாடுகளை கலைந்தது .

சத்யசோதக் சமாஜ் மதம் 


மத மற்றும் ஜாதியின் அடிப்படியில் நடக்கும் , தீண்டாமை , விதவை கொடுமைகளை தீர்க்க , வேண்டி தானே ஒரு புதிய மதத்தையும் உருவாக்கினார். அந்த மதம் தான் சத்யசோதக் மதம் .

தலித் 


தலித் என்றால் மராத்தி மொழியில் உடைத்து விடு , நசுக்கி விடு என்று பொருள் . இந்த வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தியவர் ஜோதி பாய் தான் . தீண்டாமை என்னும் கொடுமை நிகழும் போதெல்லாம் அதை உடைத்து விடு என்று குரல் எழுப்பினார்.


பல்வேறு புத்தகங்களை படைத்த இவருக்கு மஹாத்மா என்ற பட்டத்தை
 1888 ம் ஆண்டு v .k .வந்தேங்கர் என்பவர் வழங்கினார்.

தன வாழ்நாளின் இறுதி வரை பெண்ணுக்கு மரியாதை கொடுத்து , பெண் கல்வி பேசி , விதவை திருமணங்கள் நிகழ்த்தி , ஜாதியில் இருந்து வெளியே வா என்று அழைத்த ஜோதி பாய் , அவரது எண்ணத்திற்கு ஏற்றார் போல் , தனது மனைவிக்கு முழு சுதந்திரம் கொடுத்து , அவரையும் தனது பயணத்தில் பங்கெடுக்க வைத்தார்.







இன்று மஹாராஷ்டிரா மாநிலம் , இவர்கள் இருவருக்கும் முழு மரியாதையும் செலுத்தி கொண்டு இருக்கிறது.

இந்தியாவில் பின்னாளில் நடைபெற்ற , அத்தனை புரட்சிக்கும் அடிப்படையாக வாழ்ந்தர்கள்தான் 

ஜோதி பாயும் , சாவித்திரி பாயும் !

3.1.2017 சாவித்திரி பாயின் பிறந்த நாள். 

நாமும் அந்த மகாத்மாக்களை வணங்க கடமைப்பட்டுள்ளோம்.!





 ! 

No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...