Tuesday, 17 January 2017

சினிமாவை விரட்டிய ஜல்லிக்கட்டு !

Peta வை எதிர்த்தும், ஜல்லிக்கட்டு நடத்த கோரியும் மதுரை அலங்காநல்லூரிலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டம் நேற்று காலை ( 16 . 1.2017 ) முதல் நடைபெறுகிறது.

இது காளைகளுக்காக 
இளங்காளையர் நடத்தும் போராட்டம்!
சமூக வலைத்தளங்கள் 
சாதித்த போராட்டம்!
தமிழ்நாடு குறித்து 
அரசியல்வாதிகள் எல்லோர் மனதிலும் 
சலனத்தை ஏற்படுத்திய போராட்டம்!
இந்த சலனம் தான் சுப்ரமணிய சாமி போன்றோரை 
தமிழ் மக்கள் குறித்து 
கேவலமாக பேச தூண்டியது!
அந்த கேவலமானவர்கள் இப்போ நமக்கு 
வேண்டாம் !











இந்த போராட்டத்திற்காக ,
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பேரவையினர் 
அழைப்பு விடுத்து இருந்தனர். அதன் அடிப்படையில் 
தமிழ்நாடு முழுக்க இளைஞர்கள் குழுமி 
மிகுந்த அமைதியுடனும் 
நீருமின்றி , சோறுமின்றி 
வாடிவாசலில் கூடி 
போராடும் போது , இதை சிறு சலனமென நினைத்து 
காவல துறையை ஏவிவிட்டு 
வேடிக்கை பார்த்த தமிழக அரசு , மத்திய அரசு 
காவல்துறையும் கூட 
மக்களின் மனதில் இருந்து தூக்கியெறிய பட்டனர்.
இது ஒருபுறம் இருக்க !

நேற்று வரை ,
இது குறித்து பேசாத நடிகர் கூட்டம்,
அரசியல் கூட்டம் திடீரென ,
எதோ கோமாவில் இருந்து எழுந்ததுபோல் 
வாடிவாசல் நோக்கி விரைந்து கொண்டு இருக்கிறது.

கருணாஸ்  என்றும் நடிகன் 
தற்போது, ஜெயலலிதாவால் சட்டப்பேரவை உறுப்பினர் ஆக்கப்பட்ட 
இந்த கருணாஸ் 
இரவு 11.50 மணிக்கு , 
கடுங்குளிரில் போராட்டத்தில் இருந்த மாணவர்ககளை 
சந்தித்து பேசுகிறார்.








பிறகு விடியற்காலை அங்கிருந்த மாணவர்கள் 
காவல்துறையால் கைது செய்யப்பட 
இத்தோடு இந்த போராட்டம் முடியப்போகிறது 
என்று எண்ணிய நடிக கூட்டம் , அரசியல் கூட்டம் 
அதிர்ந்து போக ,
கைது செய்தவர்களை ,விடுவிக்க கோரியும் 
பீட்டாவை தடை செய்ய கோரியும் 
மீண்டும் மாணவர்கள் 
தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் 
சென்னையின் மெரினாவிலும்
போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதன் காரணமாக 
சுடாலின் போராட்ட காலத்திற்கு வருகிறார்!
வாடிவாசலுக்கு 
இசை அமைப்பாளர் பிரகாஷ் குமார் 
வருகிறார்!
சரத்குமார் 
வருகிறார்!
சூர்யா ஆதரவு தருகிறார்!
ஆர்யா மன்னிப்பு கேட்கிறார்!
திரிஷா , நான் தவறாக எதுவும் பேசவே இல்லை என்று மழுப்புகிறார்!
சீமான் , அமீர், கவுதமன் 
இவர்களெல்லாம் ஏற்கெனவே களத்தில் இருந்த போதும் 
வாடிவாசலிலேயே தங்குகிறார்!

இன்னும் பலர் 
வாடிவாசல் நோக்கி விரைந்து கொண்டு இருக்கிறார்!

சொல்ல முடியாது!
ரஜினிகூட 
நாளை களத்தில் 
இருக்கலாம்!

சினிமா மோகத்தில் ,
மிதந்த அந்த பழைய தலைமுறை இல்லை இது!

அவர்கள்கூட ,
சினிமாக்காரன் ஒரு துரோகி என்று தெரியாமல்தான் 
ரசித்தான் !

இனி அதுவும் நடக்காது !
சினிமா உலகமே 
உன் நடிப்பை எல்லாம் 
திரையோடு நிறுத்தி விடு !
இல்லையேல் 
திரைக்கு பின்னால் கூட 
நீ நிற்க 
இடமில்லாமல் செய்வோம் !
இது ரஜினி பார்த்த கூட்டம் இல்லை!
எம்ஜிஆரை ரசித்த கூட்டம் இல்லை !
ஜெயலலிதாவை அரியணையில் 
அமரவைத்து கூட்டம் இல்லை!

தனித்தமிழ் கூட்டம்!
தன்மான கூட்டம்!
தன்னம்பிக்கை கூட்டம் !
தமிழையும் வாழவைத்து 
தமிழோடு சேர்ந்து 
தன தலைமுறையை 
வாழவைக்க போராடும் கூட்டம்!

காளைகளும் ,
எம் இனம்!
அதை வாழவைக்க போராடும் 
இந்த போராட்டத்தில் 
சினிமாவே 
மிதிபட்டு நசுங்கிவிடாதே !

சினிமாவே !
மறந்து விடு தமிழர்களை!
ஓடிவிடு 
தமிழகத்தை விட்டு  !



No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...