Monday, 5 June 2017

ஜாதியா ? பட்டமா ?


ஜாதியே தமிழ்நாட்டில் இல்லை.
ஜாதி என்பது தமிழனின் அடையாளம் அல்ல என்று ஒரு சாரார் கருத்து கூறுகிறார்கள் .

ஆனால்

ஜாதி தமிழனின் அடையாளம் . ஜாதிய வேறு பாடுகளோ , அடிதடியோ தமிழனின் அடையாளம் அல்ல .

பிரிட்டிஷார் தான் ஜாதி குறித்து வரைந்து வரைத்து புத்தகங்கள் வெளியிட்டது. ஏனெனில் அவர்களுக்கு புதிது . அதனால் இதெப்படி சாத்தியம் .அடித்து கொள்ளாமல் ஒரு கூட்டம் வாழுமா ? கூடாது என்று முடிவு எடுத்தனர். அதன் விளைவாக அவர்களே ,உயர்ந்த ஜாதி என்றும் தாழ்ந்த ஜாதி என்றும் பிரிவினையோடு புத்தகங்கள் எழுதினார். அதை நடைமுறை படுத்த இடஒதுக்கீடு முறையை அறிமுகம் செய்தனர். ஆங்கலேயர்களிடம் பேச வரும் போது , குறைந்த பட்சம் 2 தாழ்ந்த ஜாதியினர் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர் . அன்று ஆரம்பித்தது இடஒதுக்கீடும் , ஜாதிய வேறுபாடும் ! நமக்கு உதவுவது போலவே சிண்டு முடித்து விடுவதில் வல்லவர்கள் ஆங்கிலேயர்கள் .

Castes and Tribes of Southern india - எழுதியவர் Edgar Thurston - ஆண்டு 1909

 நம் தமிழிலக்கியங்களில் தாழ்ந்த ஜாதி  என்றோ உயர்ந்த ஜாதி  என்றோ எங்கேனும் குறிப்பு இருக்கிறதா ?தேடுங்கள் !

ஆனால் ஜாதியின் பெயர்கள் உண்டு .

கணிகையர் என்பது ஜாதியின் பெயர். இது தான் கணிமேதாவியார் .
இந்த ஜாதியைத்தான் கணிகை பார்ப்பான் என்று இருந்தது. அதை தான் பிராமணர்கள் கற்று கொண்டு பார்ப்பனர் ஆனார்கள் .

வள்ளுவர் என்பது ஜாதியின் பெயர். இன்றும் அந்த ஜாதி மக்கள் வாழ்கிறார்கள் .

ஒவ்வை என்பதே ஜாதியாக இருக்க வாய்ப்புண்டு. அவர் ஒரு பெண் என்றும் , பிற்கால அவ்வையார் அந்த ஜாதியை சேர்ந்த ஆண் என்றும் கூறப்படுகிறது

பரதர் என்று மீனவர்களுக்கு பெயரும் உண்டு .

வலையர் என்ற பெயரும் உண்டு.

மருதம் மற்றும் நெய்தல் நிலம் சார்ந்த ஜாதிகள் அனைத்தும் ஒரே பெயர் பெயர் கொண்டவை .


ஆனால் பட்டப்பெயர்கள் மன்னர்களால் வழங்கப்பட்டவையே அன்றி , ஜாதி கிடையாது . அந்தந்த காலகட்டத்தில் யாரெல்லாம் மன்னருக்கு ஜால்ரா போட்டார்களா அவர்கள் பெற்றது தான் பட்ட பெயர் .

அதாவது

பிராமணர்களை நாம் பார்ப்பார் என்று ஜாதியின் பெயர் சொல்லி அழைக்கிறோம். ஆனால் அய்யர் என்பது அவர்களது பட்டப்பெயர்.

இதே போல் , செட்டியார் என்பதும் , முதலியார் என்பதும் , தேவர் என்பதும் , ஜாதி பெயர்கள் அல்ல . பட்ட பெயர்கள் ஆகும் .


எந்த ஜாதி பெயரை குறிப்பிட்டாலும் , அது சார்ந்த தொழில் நமக்கு விளங்கவில்லையாயின் அது பட்ட பெயர் ஆகும் .

வன்னியர் சமூகம் மட்டும் 500 வகையான பட்டப்பெயர்களை பெற்றுள்ளது .

செட்டியார் இன மக்களும், சேட்டு இன மக்களும் ஒன்று தான் என்ற ஐயப்பாடு கொண்டு , ஒரு சில ஆய்வுகளும் வந்துள்ளன.
இதுவும் பட்ட பெயர்தான்.

முதலியார் எனப்படும் பட்ட பெயர் , கிருஷ்ணா தேவராயர் காலத்தில் , மதுரை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் , நாயக்க மக்களுக்காக பணியாற்றிய வெள்ளாள ஜாதி மக்களுக்கு கொடுக்கப்பட்ட பட்ட பெயர்.
இந்த காலத்திற்கு முன்பு முதலியார் எனும் பட்ட பெயர் தமிழ் மக்கள்
 மத்தியில் கிடையாது .

பட்டப்பெயர்கள் என்பது காலத்திற்கு காலம் ,ஆளும் அரசனை பொறுத்து அவருக்கு வேண்டியவர்களை பொறுத்து , பல்வேறு நபர்கள் பெற்றுள்ளார்கள் . ஆனால் அது ஜாதி அல்ல .

உண்மையில் தமிழ்ச்சமூகத்தில் எந்த ஜாதி மக்களும் அடித்து கொள்ளவில்லை. இந்த பட்ட பெயர் வாங்கிய மக்கள்தான் , தன ஜாதி என்ன என்பதை மறந்து விட்டு , இல்லை தொலைத்து விட்டு , அந்த பட்டப்பெயர் சொல்லி அடுத்தவரை அடிப்பதும் , கொள்வதுமாக இருக்கிறார்கள்!

உண்மையில் தமிழ் சமூகம் அழிக்க வேண்டியது ஜாதியை அல்ல .

பட்ட பெயர்களை !

இங்கு ஜாதி எல்லாம் இழிவு படுத்த பட்டுவிட்டது. அதன் விளைவாக பல தொழில்கள் தமிழ்நாட்டில் இல்லை .

மீனவ சமூகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 500 பிரிவினர் இருந்தாராம். இன்று இல்லை. அவர்களை இழிவு படுத்தி அவர்கள் மதம் மாறி , இனம் மாறி இன்று கப்பல் கட்டும் தொழில் என்பதை நாம் தொலைத்து விட்டோம். இவர்கள் இருந்ததால் தானே அன்று ராஜராஜ சோழன் கப்பல் படை வைத்திருந்தான் .
இன்று கப்பல் எந்த மரத்தில் செய்வது என்பது மீனவ நண்பர்களில் பலபேருக்கு தெரியாது.

பனைமரத்தின் கதை ஊர் அறிந்தது . இன்று பனைமரம் வளர்க்க வேண்டும் என்று கூறியவுடன் எதிர்ப்பது யார் தெரியுமா ? அந்த மக்கள் தான் ! மீண்டும் நம்மை தாழ்த்தி விடுவார்களோ என்று அஞ்சுகிறார்கள் . அதன் நுட்பங்கள் எல்லாம் கிட்டத்தட்ட அழிந்து விட்டது.

மருத்துவர் என்று ஒரு ஜாதி ,ஊரில் யாருக்கு என்ன நேர்ந்தாலும் , நாடி பிடிக்கும் முன் , முகம் பார்த்து கூறி விடுவான். இன்று அந்த ஜாதி இல்லை .

பள்ளர் சமூகம் இன்று தேவேந்திர குல வெள்ளாளராக மாறி விட்டது. விளைவு எந்த ஆற்றிலும் பராமரிப்பு இல்லை . குளங்கள் இல்லை . ஏரிகள் என்பது ஏட்டுச்சுரைக்காய் ஆகிவிட்டது.

கோனார் சமூகம் யாதவ சமூகம் ஆகி விட்டது. இன்று நாமெல்லாம் நாட்டு மாடு வேண்டும் என்று கூவி கொண்டு இருக்கிறோம். இதில் என்ன சிறப்பு என்றால் செஞ்சி மலையை ஆண்ட ஆனந்த கோனார் எனும் மன்னர் தன பெயரை ஆனந்த கோன் என்று அந்த காலத்திலேயே ஸ்டைலாக வைத்திருந்தாராம் .அந்த சமூகம் தன ஸ்டைலை தொலைத்து விட்டது.

கலைத்துறையில் கோலோச்சி இருந்த சமூகம் விஸ்வகர்மாகி விட்டது. என்ன பயன்? எங்கு பார்த்தாலும்  மலையாளி யும் , ராஜசதானியும் நகைக்கடை வைத்திருக்கிறான். அதில் இரும்பும் உண்டு. ஈயமும் உண்டு. வியந்து வியந்து நாம் பார்த்து , பூரித்து நிற்கும் கோவில் சிற்பங்களை செதுக்கிய சமூகத்தில் 10% பேர் கூட இன்று அந்த தொழிலில் இல்லை . கதவுகளில் கூட கலைநயம் காட்டிய ஆசாரிக்கு கதவு எந்த மரத்தில் செய்ய வேண்டும், சாளரம் எதில் செய்ய வேண்டும் என்று தெரியவில்லை .

பூசாரி என்று ஒரு சமூகம் இருந்தது . அவர்களுக்கு தெரியும் விபூதியின் பயன்கள் என்னென்ன என்று ! இன்று அந்த பெயரே இல்லை.

இன்று விவசாயம் ஏன் படுபாதாளத்தில் இருக்கிறது தெரியுமா ? உழுவதற்கும், அறுப்பதற்கும் இயந்திரங்கள் தேவைப்படுகிறது. அதற்கான செலவுகள் அதிகம். ஏன் என்றால் , அந்த வேலையை செய்து வந்த பறையர் இனம் தான் இன்று துபாய் வளமைக்கும், சிங்கப்பூரின் பெருமைக்கும் காரணம்!

இப்படி கூறி கொண்டே போகலாம் . நம் தொழில் வளமை அப்படி!
ஒரு இனத்தை அழிக்க வேண்டுமாயின் அதன் பொருளாதாரத்தை முதலில் அழிக்க வேண்டும் என்பது வெள்ளையர்களின் கோட்பாடு .

சிறப்பாக நடந்து விட்டது. ஜாதியில் ஏற்ற தாழ்வு கூறி , அதில் இருந்து வெளியேற , அந்த தொழிலையே விட்டு , அந்நிய நாட்டு பொருளுக்காக ஏங்கி நிற்கிறோம்!

இப்போ சொல்லுங்க ! ஜாதியை அழிக்க  வேண்டுமா ? பட்டத்தை அழிக்க  வேண்டுமா என்று !
---------------------------------   - - -







குறிப்பு :
------------


இனம் என்றால் என்ன?

குலம் என்றால் என்ன ?

குல தெய்வம் என்றால் என்ன ?

தமிழில் பேசும் அத்தனை பேருக்கும் ஜாதி உண்டா? பட்டம் உண்டா?

குடும்ப பெயர் தமிழருக்கு உண்டா ?

இவ்வளவு கேள்விக்கும் பதில் தெரிஞ்சிட்டா ,


ஜாதி பிரச்னை இருக்காது .



உதாரணமாக ,

பிராமணன் என்பது இன பெயர்

பார்பனன் என்பது அவனது ஜாதி பெயர்

ஐயர் என்பது பட்டபெயர்.

இதில் இனபெயரும் , பட்ட பெயரும் தமிழுக்கு சொந்தமில்லை.

பார்பான் என்பது பிராமணர்களுக்கு தமிழ் நாட்டில் கொடுக்கப்பட்ட தொழிலுக்காகன பெயர்.

பார்பான் என்றால் , கணிகை பார்பான்.
ஆருடம் பார்பான்.
நாள் குறித்தும் , நேரம் குறித்தும் கணிப்பவன் என்று பொருள்.

இந்த இனம் தமிழ்நாட்டை தொடுவதற்கு முன்பே இந்த தொழில் , தமிழ் மக்களால் செய்யப்பட்டது தான்.

இன்றும் வேறு பிற சமூத்தை சேர்ந்தவர்களும் இந்த பணியை செய்கிறார்கள் என்பது குறிப்பிட தக்கது .


அதே போல் கோவில்களில் , அர்ச்சகர் பணிக்கும் இவர்கள் அமர்த்தப்பட்டனர் .

ஆசிரியர் பணிக்கும் அமர்த்தப்பட்டனர்.

சுருங்க சொன்னால் , அமர்ந்த பார்க்கும் வேலைகள் அனைத்தும்  இந்த இனத்திற்கு ஒதுக்கபட்டது.

காரணம் அக்காலத்தில் , ஒரே இடத்தில் அமர்ந்து பார்க்க கூடிய வேலை என்பது மக்களால் வெறுக்கப்பட்டது. அதனால் , அது போன்ற வேலைகள் இழிவான வேலைகள் என்று கருதி , வேற்று இனத்தவர்களுக்கு அவ்வேலைகள் வழங்கப்பட்டன.

இன்று நிலை தலை கீழாக மாறிய தால் எல்லோரும் அவ்வேலையை செய்ய , ஆசை கொண்டு , அல்லாடுகிறார்கள் .









No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...