சமீபமாக ஒரு சில பதிவுகள் படித்தேன் !
வேறு ஜாதி ஆண் வேண்டாம் என்று பெண்ணுக்கு அறிவுரை கூறும் பதிவு ஒன்று !
அந்த பதிவில் , பெண்ணே பார் நம் ஜாதியில் உள்ள ஆண்கள் கேரளா பெண்களை திருமணம் செய்து கொண்டு எவ்வளவு சந்தோசமாக வைத்திருக்கிறார்கள் !
இப்படிப்பட்ட ஆண்களை விட்டுவிட்டு நீ வேறு ஜாதி ஆணை திருமணம் செய்து கொண்டால் எப்படி நீ சந்தோசமாக இருக்க முடியும் என்று அந்த பதிவு கூறுகிறது.
மேலும் வேறு ஜாதி ஆணை திருமணம் செய்தால் அது நம் ஜாதிக்கு இழுக்கு என்பது போல் அந்த பதிவு முடிவுற்றது .
இதில் வேடிக்கை என்னவென்றால் , அந்த பதிவிலேயே கூறி விட்டார்கள் , அவர்கள் ஜாதி ஆண்கள் கேரளா பெண்களை விரும்பி திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று ! பிறகு அறிவுரை மட்டும் ஒரு பெண்ணுக்கு கொடுக்க என்ன அருகதை இருக்கிறது ஒரு ஆணுக்கு ! ஜாதிய கோட்பாடுகள் எல்லாம் பெண்ணுக்குத்தான் இந்த சமுதாயம் கொடுத்திருக்கிறது . ஆணுக்கு அல்ல . அல்லவா ?
இது உண்மையா ?
இல்லை உண்மையில் ஜாதியை காக்க வேண்டுமாயின் ஆண் தான் ஜாதியை காக்க வேண்டும் . இது பெண்ணுக்கு இல்லை.
பெண் ஜாதி இல்லாதவள்!
பெண் சாபம் இல்லாதவள் !
பெண் தோஷம் இல்லாதவள் !
எந்த ஒரு சம்ருதாயங்களும் பெண்ணுக்கு பொருந்தாது !
ஆண் சமுதாயம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்! எப்போதும் , எல்லா கோட்பாடுகளையும் பெண்ணுக்காக எழுத கூடாது ! அதை சொல்ல ஆண் ஒன்றும் ஆண்டவன் இல்லை !
ஆண்களுக்கு தான் இந்த சமுதாயம் ஜாதியை தன் பெயருக்கு பின்னால் போட்டு கொள்ள அனுமதி அளித்துள்ளது. எங்கேனும் , எந்த பெண்ணாகிலும் தன் பெயருக்கு பின்னால் ஜாதி போட்டு பார்த்து இருக்கிறோமா ?
இல்லை . ஒரு பெண் ஜாதியின் பெயரை தன் பெயருக்கு பின்னால் போடமாட்டாள் ! போடவேண்டிய அவசியமும் இல்லை . வடஇந்திய பெண்களை காட்டாதீர்கள் . அது ஜாதியின் பெயர் இல்லை குடும்ப பெயர். அது பெரிய வரலாறு கொண்டது. நம் சமூகத்தில் ஆண்கள்தான் ஜாதியை காக்க வேண்டும் . பெண் அல்ல. சரோஜினி நாயுடுவும் , முத்துலட்சுமி ரெட்டியும் தமிழ் சமூகம் இல்லை. வேலு நாச்சியார் இருந்தாரே ! என்றால் , அரசியை நாச்சியார் என்றும், மாதேவியார் என்றும் அழைக்கும் வழக்கம் நம் தமிழ் சமூகத்தில் எப்போதும் உண்டு . குந்தவை நாச்சியார் ,இருந்துள்ளார். சிங்கள நாச்சியார் வாழ்ந்துள்ளார். இவைகள் ஜாதியின் பெயர்கள் அல்ல . இந்த அரசியார் கூட தன ஜாதி ஆணை
மணக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது .
அதென்ன ஆணுக்கு மட்டும் ஜாதி உண்டா ? உண்டு . நாம் என்ன தொழில் செய்கிறோமோ , நம் தலைமுறை என்ன தொழில் செய்து எந்த தொழிலை நமக்கும் விட்டு சென்றதோ , எத்தைகைய மரபு சார் கல்வியை நமக்காக விட்டு சென்றதோ அது தான் ஜாதி . இது நாம் செய்யும் தொழில் . பெண்ணுக்கானது அல்ல . ஒரு வேலை நாமும் அந்த தொழிலில் இப்போது இல்லை . அது தொடர்பாக எந்த தகவலும் நமக்கு தெரியாது என்று ஆண் நினைத்தால் ஆண்களுக்கும் ஜாதி பொருந்தாது .
தயவு செய்து பெண்ணை துரத்தாதீர்கள் ! ஆண் ஆதிக்கத்தை நிலை நாட்டை நம் வீட்டு பெண்ணையே பலி கொடுப்பது மிக அநியாயம் ! விட்டு விடுங்கள் ! எந்த ஜாதியில் திருமணம் செய்தாலும் , ஓரு பெண் பிறந்த வீட்டிற்கு சொந்தமில்லை . மறந்துவிடாதீர்கள் !

No comments:
Post a Comment