உலகின் பிரபலமான இதிகாசங்கள் எது என்றால் எல்லோரும் கூறி விடுவோம்.
அது
ராமாயணம்
மகாபாரதம்
இலியட்
ஒடிசி
அதிகப்படியாக இதை பற்றித்தான் நமக்கு தெரியும்.
சுமேரியதை பற்றி அறிவதற்கு முன்னால், இதை பற்றி மட்டும்தான் கல்வியும் , எழுத்தாளர்களும் போதித்தனர் .
19 ம் நூற்றாண்டின் துவக்கம் முதல் , எல்லாம் தலைகீழாக மாறியது . அதில் ஒன்று தான் இதிகாச வரலாறு .
உலகின் முதல் இதிகாசம் பற்றி கூறுகிறது சுமேரிய வரலாறு !
கில்கமெஷ் மற்றும் என்கிடு என்ற நண்பர்களின் நெடுங்கதையே உலகின் முதல் இதிகாசம் ஆகும் .
சுமேரியர்கள் தான் உலகில் முதன் முதலில் எழுதும் வழக்கத்தை கொண்டு இருந்தனர். இது வரையில் மட்டும்', சுமேரியத்தில் 500000 ஓடுகள் கிடைத்துள்ளன. ஈரமான களிமண்ணில் எழுதி அதை நெருப்பில் சுட்டு பாதுகாத்துள்ளனர். இதோ 8000 ஆண்டுகளை கடந்த பிறகும் , அந்த ஓடுகள் உலகின் நாகரீக வளர்ச்சி என்ன என்பதை நமக்கு கூறுகின்றன.
மேலும் அங்குள்ள வீடுகள் , ஜிகுராத் என்று வழங்கப்படுகின்றன. சுமேரியத்தில் , மலைகள் இல்லை. பாறைகள் இல்லை . ஆனால் அங்குள்ள வீடுகள் மலை போன்று அமைக்கப்பட்டு அதன் மீது கட்டப்பட்டுள்ளது.
அத்தனை உயரத்தில் கட்டப்பட வேண்டிய அவசியம் என்ன ?
எப்படி வீடுகள் கட்டி இருக்க முடியும் ? அதுவும் இத்தனை உறுதியுடன் என்று பல்வேறு கேள்விகளுக்கு பதிலும் அங்கேயே இருக்கிறது..
இயற்கையாகவே தற்போதைய ஈராக் பகுதி . ( முன்பு பாரசீகம் என்று அழைக்க பட்டுள்ளது. அதற்கு முன்பு இதன் பெயர் சுமேரியம் மற்றும் மெஸோபடோமியம் ஆகும்.) பெட்ரோலிய பொருள்களால் நிறைந்துள்ளது. இப்போது மண்ணிற்கும் துளையிட்டு எடுக்கிறார்கள் எனில் 8000 ஆண்டுகளுக்கு முன்னால் அதன் கச்சா எண்ணெய் தரையில் வழிந்தோடி இருக்க வேண்டும் . அந்த தாரை எடுத்து தான் செங்கற்களுக்கு இடையில் பூசி ஜிகுராத் கட்ட பட்டுள்ளது .
ஏன் உயரமான இடத்தில கட்டப்பட்டுள்ளது ?
ஏற்கெனவே , அங்கு இருந்த நிலம் , வீடுகள் வெள்ளம் வந்தோ அல்லது வேறு பிற காரணங்களாலோ அழிந்திருக்க வேண்டும். அல்லது விலங்குகள் தொல்லைகள் இருந்திருக்க வேண்டும் .
இந்த கதையில் , விலங்குகளை அசாத்தியமாக வேட்டையாடும் சக்தி பெற்று உள்ளார் கில்காமெஷ் . எனில் விலங்குகளை சமாளிக்கும் பயிற்சி அங்கு கொடுக்க பட்டுள்ளது.
அப்படியாயின் , ஏற்கெனவே இருந்த இடம் வெள்ளத்தால் அழிந்து விட்டது போலும் , அதனால் தான் மலை போன்ற அமைப்பை உருவாக்கி அதில் வாழ்ந்திருக்கிறார்கள் .
எனில் ஏற்கெனவே அவர்கள் இருந்த இடம் எது ?
அது தான் யூப்ரடீஸ் , டைகிரிஸ் நதிகளுக்கு இடையில் உருவான முதல் இடம் .அந்த இடம் தான் ஊர் என்று வழங்கப்பட்டுள்ளது. இன்றும் நாம் எல்லா இடங்களுக்கும் ஊர் என்ற பெயரை சேர்த்தே வழங்கி வருகிறோம் .
ஏன் ஊர் உருவானது ?
நாடோடிகளாக அழைந்து திரிந்த மனிதன் , தானியங்களை பயன்படுத்த ஆரம்பித்த பிறகு , அதன் சுவையின் நிமித்தம் அதை உற்பத்தி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தான் .
ஆனால் எப்படி செய்வது என்று தெரியவில்லை.
அந்நிலையில் , ஆண்கள் வேட்டைக்கு செல்லும் போது பெண்கள் , உணவு சேர்த்து வைக்கும் பழக்கம் மேற்கொண்டுள்ளனர். அவ்வாறு சேகரித்த பெண்கள் , பெரிய வகை செடிகள் , மூலம் கிடைத்த விதைகளை தரையில் தூவி விட்டு இரண்டொரு நாள் கழித்து பார்த்த போது , அங்கு அதே செடி மீண்டும் முளைத்து இருந்திருக்கிறது .
இப்போது தான் உலகம் நகருதலை நிறுத்தி நாகரீக வாழ்க்கைக்குள் நுழைகிறது.
விவசாயம் செய்ய ஆரம்பித்தான் மனிதன் . இது கிட்டத்தட்ட 10000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய வரலாறு .
ஆனால் இதை பலரும் விரும்ப வில்லை . சண்டைகள் , சச்சரவுகள் என எல்லாம் கடந்து விவசாய புரட்சி ஏற்பட்டது .
இது தான் உலகின் முதல் புரட்சி !
இங்கு தான் நகர நாகரீகம் ஆரம்பித்தது .
கூட்டமாக வாழ்ந்த மக்கள் குழு குழுவாக பிரிந்து , வேலை பார்க்க ஆரம்பித்தனர்.
வீடுகள் கட்ட ஒரு குழு
இசை மீட்கும் குழு
விவசாயம் செய்ய ஒரு குழு
என்று குழுக்கள் பிரிந்தன. ஆனால் அதே சமயம்
ஐஸ் ஏஜ் எனப்படும் , பனிக்காலம் முடிவடைந்துள்ளது . அந்த தருணத்தில் , விவசாய புரட்சியால் உருவான ஊர் அழிந்து போக ,
மீண்டும் உருவானது தான் ஊர்க் !
( ஊர் என்ற் பெயர் தமிழர்களிடமிருந்து வந்தது என்பது தனி கதை .)
இந்த நாட்டின் மன்னன் தான் நம் கதாநாயகன் கில்காமெஷ் !
-------------- தொடரும்

No comments:
Post a Comment