Wednesday, 26 July 2017

காடு திருத்தி கழனி செய்தது போதும்

காடு திருத்தி கழனி பரப்பியது போதும்!
கழனி திறுத்தி காடு செய்வோம் வாரீர்!
இந்த மண்,
மனிதனுக்கானது இல்லை.
விலங்குகளுக்கும்,
பறவைகளுக்கும்
நீர்வாழ் உயிர்களுக்கும்
சொந்தமானது.
நாம் விவசாயம்
செய்வததற்காக அழித்தது
காட்டை மட்டுமல்ல |
அங்கு வாழ்ந்த
உயிர்களையும் தான் |
ஐம்பெரும் நிலப்பரப்பில் இயற்கையை நம் இஷ்டத்துக்கு மாற்றி வாழும் இடமாக மாற்றபட்டது மருத நிலம் மட்டும்தான்!
அதை மீண்டும் இயற்கையிடம் ஒப்படைக்க வேண்டும்
இது,
நம் கடமை
அல்லவா?

உலகம்   சந்தித்த புரட்சிகளில் இயற்கை வழியில் உருவான புரட்சி இதுதானாம். ஒரு குறிப்பிட்ட இடங்களில் மட்டும் ஒரு சில பயிர்கள் வளர்த்தனவாம்.அப்படி வளர்ந்த பயிர்களும் கூட மரம் அளவிற்கு உயர்ந்து நின்றனவாம். எனவே அந்த காட்டை மருதம் என்று அழைத்தாராம்.


ஆனால் இன்று காட்டை அழித்து விவசாயம் செய்வது , நமக்கு விதைக்கப்பட்ட தவறான அறிவு .


அப்படி தானாக வளர்ந்த  பயிர் செடிகள் ஓட்ஸ் , சோளம், பார்லி . இவை தானாகவே இம்மண்ணில் விளைய கூடியவை. பிறகு வளர்ந்தவை நெல் , கோதுமை . இவற்றை விளைவிக்க அவசியம் இல்லை . இவை மருத காடுகள் . ஆள் உயர செடிகள் !- என்று கூறுகிறார்
 எழுத்தாளர் பா.பிரபாகரன்

மருத நில வளர்ச்சியை கையில் எடுத்து கொண்டு , நகரம் வளர ஆரம்பித்து , அதற்காக மலைகள் அழிக்க பட்டு , கடல் எல்லைகள் சுருக்கப்பட்டு , காடுகள் முற்றிலும் அழிக்க பட்டு ,இன்னும் எத்தனை எத்தனை தவறுகள் - அடிக்கி கொண்டே போகலாம் .

இந்த மருதநிலம் தான் அரசு , அரசாங்கம், அரசியல் , வணிகம், எல்லாவற்றையும் விதைத்தது .

அதன் விளைவு தான் , ஊழல், கொலை, குற்றம் , கொடுமை, வசதி, ஜாதி, என எல்லா தவறுகளையும் கூடவே விதைத்தது.

ஒவ்வொரு நிலத்திற்கும் இடையில் இருந்த மரங்களை கூட அழித்து விவசாயம் செய்வது கொடுமையிலும் கொடுமை!

வணிகம் செய்பவன் மட்டும்தான் பேராசை பிடித்தவனா ?
அரசியில் வாதி மட்டும்தான் இந்த மண்ணை கூறு போட்டு விற்கிறானா ?

விவசாயி செய்யவில்லை.
தனக்காக மட்டும் விதைதான்.சரி.
தன ஊருக்காக விதைதான் சரி.

அத்தோடு நில்லாமல் , இந்த மண் மீது விஷம் தெளித்தான் .
உரம் என்ற பெயரில் !

அங்கு வாழ்ந்த உயிர்களை அழித்தான்
பூச்சி கொல்லி மருந்து என்ற பெயரில் !

இந்த மண் தாங்குமா ?

போதும்!

நாம்

காடு திருத்தி கழனி செய்தது போதும்
கழனி மாற்றி காடு செய்க !

இதை தொடங்கி பார் ,
இந்த உலகம் , எப்படி துடிக்கும் என்று பார் !


2 comments:

  1. இதை பற்றி கட்டுரை எழுத நினைத்திருந்தேன்.. இந்த கட்டுரை மிக அருமையாக உள்ளது..

    ReplyDelete
  2. நன்றி . காலதாமதமாக சொல்வதற்கு மன்னிக்கவும் !

    ReplyDelete

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...