Tuesday, 1 August 2017

Different education system in Tamil nadu, Alternative way of education system in tamil

மாற்று வழி கல்வி முறை என்பதை சிலர் எப்படி புரிந்து கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. அது எதோ அரசாங்கத்திற்கு எதிரானது என்றும் , சட்ட பிரிவு எண் 14 கீழ் அவ்வாறு பிள்ளைகளை முறையாக படிக்க வைக்காதவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுகின்ற கருத்துக்கள் முழுமையாக தவறு.

ஒரு பெற்றோர் தன குழந்தையை வீட்டில் வைத்து பாடம் சொல்லி தரும் முறையாகிய ஹாம் ஸ்கூலின் எனப்படுவது சட்டப்படி இந்தியாவில் செல்லும்.

மேலும் மாற்று வழி கல்வி என்பது அரசுக்கோ , சட்டங்களுக்கோ எதிரானது அல்ல. இது 1950 களுக்கு முன்பிருந்தே நடைமுறையில் இருக்கிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் .

தயவுசெய்து ஆசிரிய பணி செய்வோர், செய்தோர், செய்ய போவோர் எல்லோரும் மாற்று வழி கல்வி என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். உங்களின் அடிமை தனத்தை குழந்தைகளின் மீது திணிக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. எந்த பெற்றோரையும் மிரட்டவும், குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கவும் உங்களுக்கு அதிகாரம் இல்லை .இதை கொஞ்சம் கோவமாக திட்ட முடியும். வேண்டாம் என்று இந்த இடத்தில விடுகிறேன்.


பானு வீட்டு கல்வி திட்டத்தில் , திரு . ஹீலர் பாஸ்கர் அவர்கள் , பரிந்துரை செய்த புவிதம் என்னும் மாற்று வழி கல்வி நிலைய விடீயோவைத்தான் இங்கு பகிர்ந்துள்ளேன். இது முற்றிலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட CBSE கல்வி நிலையம் என்பது குறிப்பிட தக்கது . முழுமையாக பாருங்கள் .

இதோ அந்த URL .

ரஷியாவை சேர்ந்த ஒருவர் கூட இங்கு பாடம் நடத்துகிறார்.
கலை துறையும், விவசாயமும் நன்கு பயிற்றுவிக்கப்படுகிறது.
நல்ல ஆங்கில புலமை கொடுக்க படுகிறது.

மீனாட்சி என்ற அம்மையாரின் தலைமையில் , நன் முறையில் இந்த கல்வி முறை வளர்ந்து வருகிறது .

தொடர்பு கொள்ள வேண்டிய எண் :

96001 17712

https://www.youtube.com/watch?v=7-uo-noRVfU




No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...