Tuesday, 22 August 2017

விநாயகர் சதுர்த்தியும் கொலு கட்டையும்!

 விநாயகர் சதுர்த்தியும் கொலு கட்டையும்!

விநாயகருக்கும் தமிழ்நாட்டுக்கும் கி.பி. 8ம் நூற்றாண்டிற்கு முன்பு எந்த சம்பந்தமும் இல்லை.

கி.பி.10 ம் நூற்றாண்டிற்கு பிறகு எழுதபட்ட எல்லா பாடல்களிலும் விநாயகர் அகவல் இருக்கும்.

விநாயகரை வணங்கிய பிறகு தான், வேலையை ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆணை இட்டதும் பல்லவர்கள் தான்.
இவையெல்லாம் மத ரீதியாக நடந்த மாற்று வழி! இதில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. அவை எல்லாம் விவாதங்களுக்கு உட்பட்டவை! அவை தேவையில்லை.

ஆனால்,

கொலுக்கட்டைக்கும் ,
தமிழ் மரபுக்கும் சம்பந்தம் உண்டு.
கொலு கட்டை எனப்படுவது ஒரு அற்புத மருந்து!
இது தமிழர்களின் பூர்வீக உணவு!



பச்சரிசி மாவில், கடலை பருப்பு, வெல்லம், தேங்காய், ஏலம் கலந்து
பூவரசு இலையில் வைத்து வேக வைத்து உண்ண வேண்டும்.
பூவரசு இலையில் உண்ணும் போது, கருப்பை கட்டிகள், மற்றும் குழந்தையின்மை பிரச்சினைகள் தீரும்.
மேலும், ஒவ்வொடு பருவநிலை மாறும் போதும் கொலு கட்டை செய்து சாப்பிட வேண்டும். அது புதிய சூழ்நிலைக்கு நம் உடலை தயார் செய்யும் |

மேலும், பனை இலையிலும்,
வாழை இலையிலும் செய்து உண்ணலாம்.
பிளாஸ்டிக் பேப்பரில் செய்ய கூடாது.

பூவரசு, பனை ,வாழை இவை இல்லாமல் செய்து உண்டாலும் அதனால் பலன் இல்லை.


இதனாலேயே திருமணத்தின் போது, ஆணுக்கும், பெண்ணுக்கும் விருந்து என்ற பெயரில் பூவரசு இலை
கொலு கட்டையும்,
கல்யாண முருங்கை இலை அடையும் செய்து தரும் வழக்கம் இருந்தது.

திருமண நாள் அன்றும், மணம் முடித்த உடன் மணமகன், மணமகள் இருவரும் சேர்ந்து பூவரசை போத்து முறையில் நடும் வழக்கமும் இருந்தது.

பூவரசு மழையை பெருக்கும்!
மழலையையும் பெருக்கும்!

பிள்ளையாருக்கும், மோதகத்துக்கும் தான் தொடர்பு!அதுவும் இன்று மோமோவாகி மருந்து என்பதில் இருந்து விலகி விட்டது!

கொலு கட்டை அப்படி அல்ல!
இன்றும் இவ் வழக்கம் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷிய, பர்மா,
நாடுகளிலும், தமிழ்நாட்டிலும் மட்டுமே உள்ளது !

இந்த பத்திரிக்கை எழுத்தர் என்ற பெயரில் சில லூசுங்க, கொலு கட்டையை அண்டம், பிண்டம்ன்னு, கதை சொல்லி அது பிள்ளையாருக்கு பிடித்த உணவுன்னு வட இந்திய உணவு போல் திரிச்சி விடுங்க!

கொலு கட்டை
தமிழர்களுக்கு சொந்தம் |
பிள்ளையார்
வட இந்தியர்களுக்கு சொந்தம் |
சேர்த்து விட்ட பெருமை
பல்லவர்களுக்கு சொந்தம்!

இலைகளில் செய்து ,
கொலு கட்டை உண்போம்!
ஆரோக்ய வாழ்வு பெறுவோம்!




No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...