Saturday, 31 March 2018

கருப்பு கொடி கலாசாரம்

சுப்ரமணிய சாமி தெளிவாக தான் சொல்றார்.
நீ நிலத்திற்கு தண்ணீர் கேட்காதே !
அது தர மாட்டோம் .
நிலத்திற்கு தண்ணீர் வந்தால் , மீத்தேன் எடுக்க முடியாமல் போகும் .
அதனால் நிலத்தடி நீர் கிடையாது .

குடிக்க நீர் வேண்டும் என்றால் ,
தர முயரிசிக்கிறோம்.
அப்பவும் , நிலத்தடி நீரோ , காவிரி நீரோ தர மாட்டோம்.
கடல் நீரை , நன்னீராக்கி தருகிறோம் .

அதுவும் இஸ்ரேல் உதவியுடன் !

எத்தனை பெரிய திட்டத்தை , அழகாக கூறி விட்டார் .
அவங்க முடிவில் எவ்வளவு தெளிவாக இருக்காங்க !

நம்ம ஆளு கருப்பு கொடி வாசலில் கட்டி விட்டால் ,
காவேரி தண்ணீர் வந்து விடும் என்கிறான் .
மிஸ்ஸுடு கால் கொடுத்தால் ,
நதிகள் இணையும் என்பது போல் உள்ளது கருப்பு கொடி !





Friday, 30 March 2018

காவேரி நதி நீர் போராட்டம் - புதுமை புதுமை , அத்தனையும் புதுமை .

ஏப்ரல் மாதம் போராட்ட மாதம் என்று அறிவிப்போமாக !
அவ்வளவு போராட்டமும் வைட்டிங் லிஸ்ட் ல இருக்கு !
------------------------------------------

ஏப்ரல் 2 மருந்து கடைகள் மூடப்படும்.
ஏப்ரல் 3 உண்ணாவிரத போராட்டம் - அதிமுக
ஏப்ரல் 11 கடையடைப்பு போராட்டம் - பாமக
ஏப்ரல் 15 ல் கருப்பு கொடி கட்டும் போராட்டம் - திமுக
வருமான வரி அலுவலக முற்றுகை - மே 17 இயக்கம் .
வீட்டுக்கு வீடு கருப்பு கொடி கட்டும் போராட்டம் - பாமக
செல்போன் டவர் கைப்பற்றும் போராட்டம் - தவாக
அப்புறம் ரயில் மறியல் போராட்டம்
பஸ் மறியல் போராட்டம்
நிறையவே இருக்கு !
எல்லாமே நம்ம வயிற்றில் நாமே அடித்து கொள்ளும் போராட்டம் .
இதில் விவசாயிகள் செய்யும் போராட்டம் ரொம்ப புதுமையானது .
உலகமே அசந்து போகுது .
ஒப்பாரி போராட்டம்,
கருப்பு கொடி போராட்டம் ,
பாடை கட்டும் போராட்டம்,
கோலம் போடும் போராட்டம்,
அரை நிர்வாண போராட்டம்,
மண்டையோடு அணியும் போராட்டம்,
வேப்பிலை அணியும் போராட்டம்,
மொட்டை அடிக்கும் போராட்டம்,
உண்ணா விரத போராட்டம்,
மெழுவர்த்தி ஏற்றும் போராட்டம்
ஆற்றில் இறங்கும் போராட்டம்,
கடலில் இறங்கும் போராட்டம்,
முட்டிகாலில் நிற்கும் போராட்டம்
அதிகப்படியாக போனால் தற்கொலை செய்து கொள்ளும் போராட்டம் .
என்னய்யா உங்க போராட்டம்!
இந்த போராட்டங்கள் எல்லாம் பிரிட்டிஷாரை எதிர்த்தபோது கூட யாரும் இப்படி செய்ய வில்லை.
எந்த காலத்தில்,
தமிழினம் இப்படி போராடிய வரலாறு உள்ளது என்றே தெரிய வில்லை.
எவ்வோளவோ தொழில்நுடபத்திற்கு மாறி விட்டோம் .
ஆனால் போராடும் போது மட்டும் ,
யாருக்கும் பாதிப்பு இல்லாமல் நோகாமல் போராட ,
நம் பகுத்தறிவு நம்மை வழிநடத்துகிறது போலும் !
ஆங்கிலேயனை எதிர்க்க சொன்னால் ,
நம்ம ஊர் பனை மரங்களையும் , தென்னை மரங்களையும் வெட்டி வீழ்த்தி ,
நம் மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தவர்கள் தானே !
அப்படிதான் சொல்லி தருவார்கள் .
போராட்ட முறைகளை மாற்றுங்கள் !
இல்லையேல் ,
போராட்டங்களையெல்ல்லாம் புறக்கணிப்பு செய்யுங்கள் !
ஆக்கபூர்வ வழி தேடுங்கள் !
( நம்மை அழிக்க வழி சொல்லும் திராவிட
பகுத்தறிவை புறக்கணிப்பு செய்வோம் .)
HELP ஏலம் ஏப்ரல் 3 ல் முடிவடையும் .
பின்னால் ஒரு நாள் இதற்கும் போராடுவோம் .
அப்போதும் இந்த திராவிட போராட்டத்தை அரசியல் கொண்டு வரும் .
நினைவிற் கொள்க .
காலத்தில் கிடைக்காத நீதி அநீதிக்கு சமம் .
வரும் முன் போராடுவது , நம் மூலதனம் .
வழிகளை எல்லாம் அடைக்கிறது , பகுத்தறிவு மனம் !


Sunday, 18 March 2018

கேட்பாரற்று கிடைக்கும் தொகை

வங்கிகளில் சேமித்து விட்டு எடுக்காமல் , கேட்பாரற்று கிடைக்கும் தொகை மட்டும்
11302 கோடி என்று ரிசெர்வே வங்கி
--------------------------------------------------------------


வங்கி கணக்கு கட்டாயம் என்று கூறி , மக்களை வங்கி கணக்கு தொடங்க வைத்தது அரசு தான் !
அதில் குறைந்த வைப்பு தொகை இருக்க வேண்டிய கட்டாயத்தை விதித்தும் வங்கிதான்!
இதில் இன்னொரு விஷயம் என்னவெனில் ,
தனியார் நிறுவனங்களில் , பி.எப் பணம் பிடிக்க படுகிறது .
ஆனால் , அந்த பணியாளர் வேலையில் இருந்து செல்லும் போது , அவருடைய பி.எப் பணத்தை எடுத்து தர , நிறுவன எழுத்தர்கள் முயற்சிப்பது இல்லை . அந்த பணம் அப்படியே வங்கிகளில் கிடக்கிறது .
தற்போது மத்திய அரசு பி.எப் பணத்தை எடுக்க வேண்டுமானால் , வேலையில் இருந்து நீங்கி 3 மாதங்கள் வரை வேறு வேலையில் இல்லை என்று சான்றிதழ் வழங்கினால் தான் தருவேன் என்று கூறுகிறது . அந்த 3 மாதங்களுக்குள் வேறு வேலை கிடைத்து விட்டால் , ஏற்கெனவே இருந்த கணக்கை புதிய நிறுவனத்தோடு இணைத்து தொடர வேண்டும் என்று கூறுகிறது . ஆனால் , பலரும் புதிய நிறுவனத்தில் பழைய கணக்கை தொடர்வது இல்லை .
தன மனைவிடம் கூறாமல் கூட , சேமிப்பது .
கணவனுக்கு தெரியாமல் சேமிப்பது .
சேமிக்கும் போது கூடவே , சேமிக்க தூண்டிய ஆள் , எடுக்க செல்லும் போது ஒத்துழைப்பு தராதது
சேமித்த பணத்தை எடுக்க தெரியாமல் அப்படியே விடுவது
வயது முதுமை காரணமாக ஏற்படக்கூடிய ஞாபக மறதியின் நிமித்தம் , சேமித்த முதிர்வு தேதி தெரியாமல் இருப்பது
வெறுமை , தனிமை ,
என்ற காரணங்களுக்கு இடையே ஏற்படும் விபத்துக்கள்
இப்படி யாக , வங்கிகளில் சேமித்து விட்டு எடுக்காமல் , கேட்பாரற்று கிடைக்கும் தொகை மட்டும்
11302 கோடி என்று ரிசெர்வே வங்கி கூறி உள்ளது .
அதிகபட்சமாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் ரூ.ஆயிரத்து 262 கோடியும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.ஆயிரத்து, 250 கோடியும் அனாதையாக இருக்கின்றன. மற்ற வங்கிகளில் ரூ.7 ஆயிரத்து 40 கோடி கேட்பாரற்று இருக்கிறது.தனியார் வங்கிகளைப் பொறுத்தவரை, ஆக்சிஸ், டிசிபி, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, இன்டஸ்இன்ட், கோடக்மகிந்திரா, யெஸ் வங்கி ஆகியவற்றில் ரூ.824 கோடி டெபாசிட்கள் கேட்பாரற்று கிடக்கின்றன.
மேலும் 12 தனியார் வங்கிகளில் மொத்த டெபாசிட் ரூ 592 கோடியும், ஒட்டுமொத்தமாக தனியார் வங்கிகளஇல் ரூ.ஆயிரத்து 416 கோடி பணம் கேட்பாரற்று கிடக்கிறது.
வங்கியில் சேமிப்பு கணக்கை திறப்பதோடு சரி , அதன் பிறகு வங்கி பக்கமே வராமல் , இருப்பதாலும் வங்கியில் பணம் கிடைக்கிறதாம் .
அந்த பணத்தை ,டீமேட் முறைக்கு மாற்றி கொள்ள அறிவுரை கூறுகிறது மத்திய வங்கி !
வங்கிகள் , அஞ்சலகங்கள் , காப்பீடு போன்ற இடங்களில்
சேமிப்பு பணம் இருந்தால் எடுக்க முயற்சி செய்யுங்கள் !
அல்லது
உங்கள் குடும்பத்தாருக்கு தெரிய படுத்துங்கள் !
சேமிப்பு என்பதே ஏமாற்று வேலை தான் !
அதிலும் தானாக சென்று ஏமாறுவேன் என்பது மிக பெரிய ஏமாளி தனம்.
இந்த சேமிப்பு எதற்க்காக ?


Monday, 12 March 2018

தஞ்சாவூரின் பெயர் காரணம்

தண் செய் என்றால் குளிர்விப்பது மட்டும் தான் . தானியம் செய் என்ற பெயர் தான் மருவி தஞ்சாவூர் ஆனது .

தஞ்சன் என்ற அரக்கன் வந்தான் . அவனை கொல்ல சொல்லி பெருமாளிடம்  , தஞ்சபுரீஸ்வரர் கூறினார்  அதன்படி , அரக்கன் கொல்லப்பட்டான் . அதனால் பெருமாளின் மனைவி , தஞ்சபுரீஸ்வரர் கோவிலில் வீற்று இருக்கிறார் என்ற கதையெல்லாம் சுத்த பொய் .

தனஜெயன் என்பவன் , தானிய உற்பத்தி செய்வது குறித்து , கற்று கொடுத்த விஞானி . தானிய பெயரிலேயே தானியம் செய்தவன் என்ற பெயர் மருவி தனஜெயன் என்று பிராமண சமூகத்தால் அழைக்கப்பட்டு , அவர்கள் விட்ட , அரக்க புராணமும் பரவியது .

பத்திரிகைகள் ஆண்டாண்டு காலமாக , பிராமண சமூகத்தின் கதைகளை மட்டுமே நமக்கு கூறி வருகின்றன .

தஞ்சாவூரின் பெயர் காரணம்




Thursday, 8 March 2018

விவசாயிக்கும் விடிவு

தமிழகத்தில் ஒரு இளநீரின் விலை குறைந்தது 40 ரூபாய் முதல் 50 , 60 கூட விற்பனை ஆகிறது .தஞ்சாவூரில் கூறுகிறார்கள்  , இளநீரெல்லாம் கேராளாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது என்று ! தென்னை விவசாயத்திற்கா பஞ்சம் தஞ்சாவூரில் ! ஆனால் ஏற்றுமதி செய்யப்படுகிறது . அதே இளநீர் ,பாட்டில் மூலம் விற்பனைக்கு வருகிறது . இதன் விலை 6 பாட்டில் கொண்ட ஒரு பேக்கிங் விலை 250  ரூபாய் வரை !

ஐயா விவசாயிகளே ,
தண்ணீர் இல்லை என்று நிலத்தடி நீரை உறிஞ்சி , விவசாயம் செய்து கூட பொறுத்து கொள்கிறோம் . அந்த உற்பத்தியை கூடவா , இங்குள்ள மக்களுக்கு கொடுக்க கூடாது !





எல்லோருக்கும் பொதுவான நிலத்தடி நீரை ஒருவர் மட்டும் உரிந்து கொண்டு  , எல்லோருக்கும் பொதுவான மண்ணில் ஒருவர் மட்டும் உரம் என்ற பெயரில் விஷத்தை தெளித்து விட்டு , உற்பத்தியையும் ஏற்றுமதி செய்து தான் மட்டும் வசதியாக வாழ்ந்து விட முடியும் என்ற எண்ணம் விவசாயிகளிடம் உள்ள வரை

எந்த விவசாயிக்கும் விடிவு என்பதே இல்லை .

எப்போ பார்த்தாலும்

மத பிரச்சனை
ஜாதி பிரச்சனை

உண்மையிலேயே பிரச்னை எது என்று ஆய்வு செய்வதும் இல்லை .
அதற்க்கு தீர்வு தேடுவதும் இல்லை .


விவசாயிக்கே தெரியாமல் , விவசாயி பிரச்சனை என்று கூறி
பிற பிரச்சனைகள் மறைக்கப்பட்டு வருகிறது .

முன்பு விவசாயிகளுக்கு எதுவும் தெரியாது , அதனால் உரம் பயன்படுத்தப்பட்டது .
ஆனால் இன்று விவாசாயிகள் ஒவ்வொருவரும் பன்மடங்கு பேசுகிறார்கள் .ஆனாலும் உரம் தான் போடுவார்களாம் .
என்னய்யா நியாயம் ?

இதே சமயம் இயற்கை விவசாயம் என்று கூறி ,
சாதாரணமாக தக்காளி ஒரு கிலோ 10 ரூபாய் எனில் ,
ஆர்கானிக் தக்காளி 40 ரூபாய் விற்பனைக்கு வருகிறது .

இந்த மண்ணில் மாற்றம் என்பது சாத்தியம் எனில்
அது விவசாயிகள் கைகளில் மட்டுமே உள்ளது .


ஏற்றுமதி தேவையா ?

ஒரு ஊரில் விலை இருக்கிறது என்றால் என்ன அர்த்தம் ?

ஒன்று , தேவையை விட உற்பத்தி குறைவாக இருக்கிறது .
எனவே யார் அதிக விலை கொடுக்க தயாராக இருக்கிறார்களோ அவர்களுக்கு , வழங்கப்படும் என்று பொருள் !
உற்பத்தி பற்றாக்குறையினால் இறக்குமதி செய்யப்பட்டு , அதனால் ஏற்பட்ட செலவுகளுக்காக விலை ஏற்றப்பட்டது என்றும் பொருள் .
இதை சமாளிக்கலாம் , ஏனினில்  ஒரு பொருள் உற்பத்தி செய்ய எதுவாக நிலம் இல்லையென்றால்  , வேறு ஒரு பொருளை உற்பத்தி செய்து இருப்பார்கள் . அதை தேவை படும் இடங்களுக்கு ஏற்றுமதி செய்து சமாளிப்பார்கள் .

ஆனால் , உற்பத்தியும் அதிகம் செய்து , இறக்குமதியும் செய்யாமல் விலை ஏறுகிறது என்றால் என்ன பொருள் ?
அங்கு உற்பத்தியாகும் பொருள்கள் , வேறு யாரோ பயன்படுத்த வேண்டி ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று பொருள் !
இப்போது விலை ஏறும்போது தான் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள் .
ஏனெனில் மக்களின் உற்பத்தி முழுவதும் ஏற்றுமதிக்கு செல்கிறது . ஏற்றுமதி போக மீதம் உள்ள பொருள்கள் மட்டுமே , விற்பனைக்கு என்றால் , அது மிக பெரிய விலை உயர்வையே கொடுக்கும்


இவ்வாறாக , இந்தியாவில் , விலை வாசி அதிகரித்து , அதன் மூலம் வாழ்வாதார செலவு அதிகரிக்கும் மாநிலங்கள் மஹாராஷ்டிரா , கர்நாடக , தமிழ்நாடு  , மற்றும் குஜராத் ஆகியன !

இந்த நான்கு மாநிலங்களின் ஏற்றுமதி தான் இந்தியாவின் அந்நிய செலாவணி யில் முதலிடம் வகிக்கிறது .

ஆனால் இந்த நான்கு மாநிலங்களிலும் விலை மிக அதிகம் .

நம் மாநிலத்திற்கு மிஞ்சியது தான் ஏற்றுமதி .
இங்கேயே பற்றாக்குறை நிகழும் போது  எதற்காக ஏற்றுமதி ?
வாழை இலை முதல் , தேங்காய் , இளநீர் வரை ஏற்றுமதி  செய்து விட்டு
வாழை இலைக்கு பதில் பிளாஸ்டிக் பேப்பர் உணவு
இளநீர் பணக்காரர்கள் மட்டுமே குடிக்கலாம்

இது என்ன நியாயம் ?

ஏற்றுமதி தேவையா ?



பெண் சுதந்திரம் யாரேனும் வாங்கி தந்தார்களா ?

கைம்பெண் கதையெல்லாம் சுத்த வேஸ்டு ! இந்த தமிழ் சமூகம் போல் அழகானது எங்குமே இருக்க முடியாது . நம் வாழ்வாதாரம் எனப்படும் தொழில்களோடு மிக தொடர்புடையவை விலங்குகளும் , பறவைகளும் மரங்களும்தான் ! ஆடு , மாடு , நாய் , கழுதை, குதிரை , ஏன் காட்டு விலங்குகளை கூட பயன்படுத்தி இருக்கிறார்கள் . இந்த விலங்கு மற்றும் பறவை இனங்களோடு இணக்கமாக இருந்த நிறம் வெள்ளை . அவைகளின் கண்களுக்கு , பழக்கம் . ஆகவே , ஆண்கள் , இந்த விலங்குகளோடு தான் பணியாற்ற வேண்டும். அதன் நிமித்தம் வெள்ளை நிற ஆடைகள் அணிந்தனர். இதர பிற கலை துறையினரே  அல்லது மருத்துவம் மற்றும் ஆசிரிய பணியில் இருந்தவர்கள் காவி அல்லது வேறு நிறங்களில் உடை அணிந்தார்கள் . அதனால்  , ஒரு ஆண் இறந்த பிறகு , அவனது இல்லாள் அவன் இடத்திற்கு வருகிறாள் . போர் களம் கூட வந்து இருக்கிறாள் . அதனால் அவளும் அதே வெள்ளை ஆடைக்கு மாறி விட்டாள். அவளும் , அவள் கணவனின் தொழிலை தொடர்ந்து செய்தாள்.

இது புரியாத திராவிட கூட்டம் , வண்ண ஆடை உடுத்தி இருந்தவர்கள் உயர்சாதியினர் , வெள்ளை அணிந்தவர்கள் தாழ்ந்த சாதியினர் என்று வர்ணம் பூசி ,
காழ்ப்புணர்ச்சிக்கி ஆளாக்கி , அதற்க்கு தீர்வும் தருகிறேன் என்று ,
ஏதேதோ கதை விட்டார்கள் .

இங்கு பெண் அடிமை என்பது எல்லாம் துளியும் கிடையாது . அதை விடுதலை என்ற பெயரில் எவரிடமோ இருந்து வாங்கி தந்தேன் என்று கூறும் உரிமையும் எவருக்கும் கிடையாது .




வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...