Thursday, 8 March 2018

விவசாயிக்கும் விடிவு

தமிழகத்தில் ஒரு இளநீரின் விலை குறைந்தது 40 ரூபாய் முதல் 50 , 60 கூட விற்பனை ஆகிறது .தஞ்சாவூரில் கூறுகிறார்கள்  , இளநீரெல்லாம் கேராளாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது என்று ! தென்னை விவசாயத்திற்கா பஞ்சம் தஞ்சாவூரில் ! ஆனால் ஏற்றுமதி செய்யப்படுகிறது . அதே இளநீர் ,பாட்டில் மூலம் விற்பனைக்கு வருகிறது . இதன் விலை 6 பாட்டில் கொண்ட ஒரு பேக்கிங் விலை 250  ரூபாய் வரை !

ஐயா விவசாயிகளே ,
தண்ணீர் இல்லை என்று நிலத்தடி நீரை உறிஞ்சி , விவசாயம் செய்து கூட பொறுத்து கொள்கிறோம் . அந்த உற்பத்தியை கூடவா , இங்குள்ள மக்களுக்கு கொடுக்க கூடாது !





எல்லோருக்கும் பொதுவான நிலத்தடி நீரை ஒருவர் மட்டும் உரிந்து கொண்டு  , எல்லோருக்கும் பொதுவான மண்ணில் ஒருவர் மட்டும் உரம் என்ற பெயரில் விஷத்தை தெளித்து விட்டு , உற்பத்தியையும் ஏற்றுமதி செய்து தான் மட்டும் வசதியாக வாழ்ந்து விட முடியும் என்ற எண்ணம் விவசாயிகளிடம் உள்ள வரை

எந்த விவசாயிக்கும் விடிவு என்பதே இல்லை .

எப்போ பார்த்தாலும்

மத பிரச்சனை
ஜாதி பிரச்சனை

உண்மையிலேயே பிரச்னை எது என்று ஆய்வு செய்வதும் இல்லை .
அதற்க்கு தீர்வு தேடுவதும் இல்லை .


விவசாயிக்கே தெரியாமல் , விவசாயி பிரச்சனை என்று கூறி
பிற பிரச்சனைகள் மறைக்கப்பட்டு வருகிறது .

முன்பு விவசாயிகளுக்கு எதுவும் தெரியாது , அதனால் உரம் பயன்படுத்தப்பட்டது .
ஆனால் இன்று விவாசாயிகள் ஒவ்வொருவரும் பன்மடங்கு பேசுகிறார்கள் .ஆனாலும் உரம் தான் போடுவார்களாம் .
என்னய்யா நியாயம் ?

இதே சமயம் இயற்கை விவசாயம் என்று கூறி ,
சாதாரணமாக தக்காளி ஒரு கிலோ 10 ரூபாய் எனில் ,
ஆர்கானிக் தக்காளி 40 ரூபாய் விற்பனைக்கு வருகிறது .

இந்த மண்ணில் மாற்றம் என்பது சாத்தியம் எனில்
அது விவசாயிகள் கைகளில் மட்டுமே உள்ளது .


No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...