Sunday, 18 March 2018

கேட்பாரற்று கிடைக்கும் தொகை

வங்கிகளில் சேமித்து விட்டு எடுக்காமல் , கேட்பாரற்று கிடைக்கும் தொகை மட்டும்
11302 கோடி என்று ரிசெர்வே வங்கி
--------------------------------------------------------------


வங்கி கணக்கு கட்டாயம் என்று கூறி , மக்களை வங்கி கணக்கு தொடங்க வைத்தது அரசு தான் !
அதில் குறைந்த வைப்பு தொகை இருக்க வேண்டிய கட்டாயத்தை விதித்தும் வங்கிதான்!
இதில் இன்னொரு விஷயம் என்னவெனில் ,
தனியார் நிறுவனங்களில் , பி.எப் பணம் பிடிக்க படுகிறது .
ஆனால் , அந்த பணியாளர் வேலையில் இருந்து செல்லும் போது , அவருடைய பி.எப் பணத்தை எடுத்து தர , நிறுவன எழுத்தர்கள் முயற்சிப்பது இல்லை . அந்த பணம் அப்படியே வங்கிகளில் கிடக்கிறது .
தற்போது மத்திய அரசு பி.எப் பணத்தை எடுக்க வேண்டுமானால் , வேலையில் இருந்து நீங்கி 3 மாதங்கள் வரை வேறு வேலையில் இல்லை என்று சான்றிதழ் வழங்கினால் தான் தருவேன் என்று கூறுகிறது . அந்த 3 மாதங்களுக்குள் வேறு வேலை கிடைத்து விட்டால் , ஏற்கெனவே இருந்த கணக்கை புதிய நிறுவனத்தோடு இணைத்து தொடர வேண்டும் என்று கூறுகிறது . ஆனால் , பலரும் புதிய நிறுவனத்தில் பழைய கணக்கை தொடர்வது இல்லை .
தன மனைவிடம் கூறாமல் கூட , சேமிப்பது .
கணவனுக்கு தெரியாமல் சேமிப்பது .
சேமிக்கும் போது கூடவே , சேமிக்க தூண்டிய ஆள் , எடுக்க செல்லும் போது ஒத்துழைப்பு தராதது
சேமித்த பணத்தை எடுக்க தெரியாமல் அப்படியே விடுவது
வயது முதுமை காரணமாக ஏற்படக்கூடிய ஞாபக மறதியின் நிமித்தம் , சேமித்த முதிர்வு தேதி தெரியாமல் இருப்பது
வெறுமை , தனிமை ,
என்ற காரணங்களுக்கு இடையே ஏற்படும் விபத்துக்கள்
இப்படி யாக , வங்கிகளில் சேமித்து விட்டு எடுக்காமல் , கேட்பாரற்று கிடைக்கும் தொகை மட்டும்
11302 கோடி என்று ரிசெர்வே வங்கி கூறி உள்ளது .
அதிகபட்சமாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் ரூ.ஆயிரத்து 262 கோடியும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.ஆயிரத்து, 250 கோடியும் அனாதையாக இருக்கின்றன. மற்ற வங்கிகளில் ரூ.7 ஆயிரத்து 40 கோடி கேட்பாரற்று இருக்கிறது.தனியார் வங்கிகளைப் பொறுத்தவரை, ஆக்சிஸ், டிசிபி, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, இன்டஸ்இன்ட், கோடக்மகிந்திரா, யெஸ் வங்கி ஆகியவற்றில் ரூ.824 கோடி டெபாசிட்கள் கேட்பாரற்று கிடக்கின்றன.
மேலும் 12 தனியார் வங்கிகளில் மொத்த டெபாசிட் ரூ 592 கோடியும், ஒட்டுமொத்தமாக தனியார் வங்கிகளஇல் ரூ.ஆயிரத்து 416 கோடி பணம் கேட்பாரற்று கிடக்கிறது.
வங்கியில் சேமிப்பு கணக்கை திறப்பதோடு சரி , அதன் பிறகு வங்கி பக்கமே வராமல் , இருப்பதாலும் வங்கியில் பணம் கிடைக்கிறதாம் .
அந்த பணத்தை ,டீமேட் முறைக்கு மாற்றி கொள்ள அறிவுரை கூறுகிறது மத்திய வங்கி !
வங்கிகள் , அஞ்சலகங்கள் , காப்பீடு போன்ற இடங்களில்
சேமிப்பு பணம் இருந்தால் எடுக்க முயற்சி செய்யுங்கள் !
அல்லது
உங்கள் குடும்பத்தாருக்கு தெரிய படுத்துங்கள் !
சேமிப்பு என்பதே ஏமாற்று வேலை தான் !
அதிலும் தானாக சென்று ஏமாறுவேன் என்பது மிக பெரிய ஏமாளி தனம்.
இந்த சேமிப்பு எதற்க்காக ?


No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...