Thursday, 16 January 2020

Go back amazon

அமேசான் நிறுவனர் இந்தியா வந்திருக்கிறார். ரூபாய் 4400கோடி யை ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்ய வந்துருக்கிறார் . கடந்த இரண்டு நாட்களாக பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
இதனால் பெரும் அளவில் சிறு குறு வணிகர்கள் பாதிக்க படுவார்கள். இதன் காரணமாக go back amazon என்ற கொடி ஏந்தி வட இந்தியர்கள், ஆந்திராவில் கூட போராடி வருகிறார்கள்.


இந்நிலையில் நேற்று RBI ஒரு உத்தரவு போட்டுள்ளது. அதாவது ஆன்லைன் பரிவர்த்தனையில் ஈடுபடாத atm கார்டுகள் ரத்து செய்ய படும் என்று கூறி உள்ளது. மேலும் வேண்டும் என்றால் மீண்டும் விண்ணப்பித்து வாங்கி கொள்ளலாம் என்று கூறியுள்ளது.


இரண்டு செய்தியும் ஒப்பிட்டு பார்த்தாலும்
கிட்ட தட்ட ஆன்லைன் வர்த்தகம் கட்டாயம் என்ற நிலைக்கு வருகிறது.
ஆன்லைன் பரிவர்த்தனை வேறு ஆன்லைன் வர்த்தகம் வேறு என்று எண்ண கூடும்.
கிராம புறத்து மக்கள் யாருக்கு பண பரிவர்த்தனை செய்ய போகிறார்கள்.
யாருக்கும் இல்லை.
அவர்களுக்கு தெரிந்த ஒரே வழி ஆன்லைன் பொருள் வாங்குவதாகத்தான் இருக்கும்.
இது தொடர்ந்தால் மனிதர்கள் பழகி விடுவார்கள். கொஞ்சம் கொஞ்சமாக சிறு சிறு தொழில் கள் முற்றிலும் அழிந்து போகும்.
மாறாக
இங்கு கடலை மிட்டாய்க்கும், பூண்டு ஊறுகாய்க்கும் கூட கார்டு பயன்பாடு வரக்கூடும்.
அதனால் என்ன
அவர்களும் paytm, பயன்படுத்தி விட்டால் போதும். பிரச்னை தீர்ந்து விடும்.
என்றும் நமக்கு தோன்றும். இங்கு யாரும் சும்மா சேவை செய்வது இல்லை.
எல்லா கார்டுகளும் எதோ ஒரு வகையில் கமிசின் எடுக்கிறது. அப்படி எடுக்கும் கார்டு நிறுவனங்கள் எதுவும் இந்தியாவிற்கும் சொந்தம் இல்லை.
சிறுதுளி பெரு வெள்ளம் என்பது போல
சிறுகச்சிறுக நம் நாட்டின் பணம் அயல்நாடு செல்லும். விசா இல்லாமலேயே !
இயல்பாக பண மதிப்பு குறையும்.
எனில் எல்லா இடங்களும் நட்டம் அடையும்.
ஏற்கெனவே 80 கோடி மக்களிடம் டெபிட் கார்டு சேர்க்க பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கூவி கூவி விற்றதும் நம் மக்களே !



Go back amazon 

Thursday, 2 January 2020

எல்லா காலத்திலும் உற்பத்தி


அதீத உற்பத்தியால் சரியான விலை கிடைக்காமல் தக்காளி சாலையில் வீசப்பட்டது .
காய்கறி விலை உயர்வு .
உற்பத்தியாளர்கள் ஆண்டுமுழுவதும் நட்டப்படத்தான் வேண்டுமா ?
இந்த கேள்வி எப்போதும் வந்து கொண்டே இருக்கிறது . இதற்க்கு தீர்வு இல்லையா ?

நாம தீபாவளிக்கு முன்னாடி ஏன் பலகாரம் செய்கிறோம் தெரியுமா ?
இந்த பண்டிகை தீபாவளி என்று பெயர் இடப்படவில்லை என்றாலும் நாம பலகாரம் செய்வோம் . அது தான் மழை காலத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை .
அப்படி தான் இதுவும் .

இந்த கோடை காலம் என்று வழங்கப்படும் சித்திரை மாதம் இருக்கே , அது நம்மூரில் வசந்த காலம் என்று பெயர் பெறுகிறது . பூத்து குலுங்கும் காய்கள் , கனிகள் , பூக்கள் என எல்லாம் விளையும் காலம் அது .
மா , பலா , வாழை , எலுமிச்சை , நார்த்தை , ஏன் மீன் உற்பத்தி உட்பட இதெல்லாம் அந்த நேரம் மட்டும் தான் அதீதமாக விளையும் . பிற நேரங்களில் இத்தனை விளைச்சல் கிடைக்காது .
அதற்காக தான் ஊறுகாய் , கருவாடு என்று உணவு பொருள்கள் தயாரித்தனர் .
அப்பளம் , வடகம் , ஏன் சாராயம் கூட இதில் சேரும் .
அப்போவெல்லாம் இந்த மண்ணு என்ன நமக்கு கொடுத்ததோ அதை நாம் பயன்படுத்தினோம் .
அதனால் , கிடைக்கும் பொருளை எல்லா காலத்திற்கும் பயன்படுத்தும் முறை கண்டறிந்து வைத்திருந்தோம் .

இப்போவெல்லாம் நமக்கு , எல்லா காலத்திலும் உற்பத்தி செய்வது எப்படி ?
இந்த மண்ணை எப்படியெல்லாம் பாடாய்படுத்தி , எல்லா காலத்திலும் எல்லா பொருளையும் விளைவிக்கும் முறை என்ன ?
எப்படியெல்லாம் உரம் போடணும் ? காய்க்காத காயையெல்லாம் காய்க்க வைக்கும் முறை என்ன ?
பூக்காத பூவை எல்லாம் எப்படி பூக்க வைப்பது என்றெல்லாம் , அறிவியல் சொல்லி கொடுத்து விட்டது .

அதற்காக வயிறு பெருக்குமா ?
நுகர்வுதான் அதிகரிக்க முடியுமா ? முடியாது .
வாங்கி சேமித்து வைத்து விற்க வியாபாரிகளும் தயார் இல்லை .

இப்போ இயற்கையை விடுத்து , 
இயற்கையை அழித்த அறிவியலை யாருமே குறை சொல்லல .
அதை மதிப்பு கூட்டு பொருளாக மாற்றாத உற்பத்தியாலனையும் குறை சொல்லல .

வியாபாரியையும் , நுரகர்வோரையும் மட்டும் எப்படி குறை சொல்கிறோம் .?



Wednesday, 1 January 2020

2000 ரூபாய் செல்லுமா ? செல்லாதா ?

ஒரு 2000 ரூபாய் நோட்டை கூட அச்சிடவில்லை

------------------------
இந்தியாவின் உயர்மதிப்பு ரூபாயாக அறியப்படும் 2000 ரூபாயானது இன்று முதல் செல்லாது என்பன போன்ற தகவல்கள் பரவி வருகின்றன . இது குறித்து அரசு எந்த பதிவும் தர வில்லை . நடப்பு நிதி ஆண்டில் அதாவது ஏப்ரல் 2019 முதல் மார்ச் 2020 ) 2000 ரூபாய் நோட்டு அச்சிடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக RBI ஒரு பத்திரிகை செய்திக்கு கூறியுள்ளது . அதாவது 2016 - 2017 ல் 3542 மில்லியன் அச்சிட்ட RBI மறு ஆண்டிலேயே அதை வெறும் 111 மில்லியனாக குறைத்துள்ளது . அதுவும் அடுத்த 2018 - 2019 ம் ஆண்டில் வெறும் 46 மில்லியனாக குறைத்து விட்டது . இப்போது ஒரு 2000 ரூபாய் நோட்டை கூட அச்சிடவில்லை என்று கூறி உள்ளது . இதன் காரணம் குறித்து பத்திரியாளர்களுக்கு தெரிவிக்கையில் , ஏற்கெனவே வெளியிட்ட ரூபாய் நோட்டுகளை விட 35 % புழக்கத்தில் உள்ளதாக கணக்குகள் கூறுவதாக RBI தெரிவித்து இருக்கிறது . இது முழுக்க முழுக்க கருப்பு பணம் . இது அதிகரித்தால் , விலை வாசி உயரும் . பண வீக்கம் அதிகரிக்கும் .

இதனால் , 2000 ரூபாயின் புழக்கத்தை படிப்படியாக குறைக்கலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர் . அதாவது வங்கிக்கு வரும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பவும் புழக்கத்திற்கு கொண்டு வராமல் , அதை அப்படியே வைத்திருப்பது . இதன் மூலம் வெளியிடப்பட்ட அளவிற்கு பணம் திரும்ப வந்தவுடன் , தன்னிச்சையாகவே பண புழக்கம் நின்று விடும் . அதே சமயம் பதுக்கி வைத்திருந்தவர்கள் அதை பயன் படுத்த இயலாமல் போகும் . இதன் அடிப்படையில் மொத்த ரூபாய் நோட்டுகள் அளவில் வெறும் 22 .5 % மட்டும் இருந்த 500 ரூபாய் அளவில் தற்சமயம் 49 % மாக அதிகரிக்கப்பட்டுள்ளது .    

மேற்படி இ - கரெனசி பெருக வேண்டும் என்ற நோக்கமும் இங்கு உண்டு .
அதன்படி எல்லோருடைய கொடுக்கல் வாங்கல்களும் பதிவு செய்யப்படும் .இதனால் வரி ஏய்ப்பு தவிர்க்கப்படும் .

( முழுமையாக வெளியிடப்பட்ட அளவுக்கு பணம் வங்கிக்குள் வந்த பிறகு ஒரு வேளை
2000 ரூபாய் நோட்டுக்கள் இனி செல்லாது என்று அறிவிக்கப்படலாம் . அதுவும் 100 % உறுதி இல்லை .
ஆனால் அந்த நாள் இன்று இல்லை . )

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...