Thursday, 2 January 2020

எல்லா காலத்திலும் உற்பத்தி


அதீத உற்பத்தியால் சரியான விலை கிடைக்காமல் தக்காளி சாலையில் வீசப்பட்டது .
காய்கறி விலை உயர்வு .
உற்பத்தியாளர்கள் ஆண்டுமுழுவதும் நட்டப்படத்தான் வேண்டுமா ?
இந்த கேள்வி எப்போதும் வந்து கொண்டே இருக்கிறது . இதற்க்கு தீர்வு இல்லையா ?

நாம தீபாவளிக்கு முன்னாடி ஏன் பலகாரம் செய்கிறோம் தெரியுமா ?
இந்த பண்டிகை தீபாவளி என்று பெயர் இடப்படவில்லை என்றாலும் நாம பலகாரம் செய்வோம் . அது தான் மழை காலத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை .
அப்படி தான் இதுவும் .

இந்த கோடை காலம் என்று வழங்கப்படும் சித்திரை மாதம் இருக்கே , அது நம்மூரில் வசந்த காலம் என்று பெயர் பெறுகிறது . பூத்து குலுங்கும் காய்கள் , கனிகள் , பூக்கள் என எல்லாம் விளையும் காலம் அது .
மா , பலா , வாழை , எலுமிச்சை , நார்த்தை , ஏன் மீன் உற்பத்தி உட்பட இதெல்லாம் அந்த நேரம் மட்டும் தான் அதீதமாக விளையும் . பிற நேரங்களில் இத்தனை விளைச்சல் கிடைக்காது .
அதற்காக தான் ஊறுகாய் , கருவாடு என்று உணவு பொருள்கள் தயாரித்தனர் .
அப்பளம் , வடகம் , ஏன் சாராயம் கூட இதில் சேரும் .
அப்போவெல்லாம் இந்த மண்ணு என்ன நமக்கு கொடுத்ததோ அதை நாம் பயன்படுத்தினோம் .
அதனால் , கிடைக்கும் பொருளை எல்லா காலத்திற்கும் பயன்படுத்தும் முறை கண்டறிந்து வைத்திருந்தோம் .

இப்போவெல்லாம் நமக்கு , எல்லா காலத்திலும் உற்பத்தி செய்வது எப்படி ?
இந்த மண்ணை எப்படியெல்லாம் பாடாய்படுத்தி , எல்லா காலத்திலும் எல்லா பொருளையும் விளைவிக்கும் முறை என்ன ?
எப்படியெல்லாம் உரம் போடணும் ? காய்க்காத காயையெல்லாம் காய்க்க வைக்கும் முறை என்ன ?
பூக்காத பூவை எல்லாம் எப்படி பூக்க வைப்பது என்றெல்லாம் , அறிவியல் சொல்லி கொடுத்து விட்டது .

அதற்காக வயிறு பெருக்குமா ?
நுகர்வுதான் அதிகரிக்க முடியுமா ? முடியாது .
வாங்கி சேமித்து வைத்து விற்க வியாபாரிகளும் தயார் இல்லை .

இப்போ இயற்கையை விடுத்து , 
இயற்கையை அழித்த அறிவியலை யாருமே குறை சொல்லல .
அதை மதிப்பு கூட்டு பொருளாக மாற்றாத உற்பத்தியாலனையும் குறை சொல்லல .

வியாபாரியையும் , நுரகர்வோரையும் மட்டும் எப்படி குறை சொல்கிறோம் .?



No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...