ஒரு 2000 ரூபாய் நோட்டை கூட அச்சிடவில்லை
------------------------
இந்தியாவின் உயர்மதிப்பு ரூபாயாக அறியப்படும் 2000 ரூபாயானது இன்று முதல் செல்லாது என்பன போன்ற தகவல்கள் பரவி வருகின்றன . இது குறித்து அரசு எந்த பதிவும் தர வில்லை . நடப்பு நிதி ஆண்டில் அதாவது ஏப்ரல் 2019 முதல் மார்ச் 2020 ) 2000 ரூபாய் நோட்டு அச்சிடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக RBI ஒரு பத்திரிகை செய்திக்கு கூறியுள்ளது . அதாவது 2016 - 2017 ல் 3542 மில்லியன் அச்சிட்ட RBI மறு ஆண்டிலேயே அதை வெறும் 111 மில்லியனாக குறைத்துள்ளது . அதுவும் அடுத்த 2018 - 2019 ம் ஆண்டில் வெறும் 46 மில்லியனாக குறைத்து விட்டது . இப்போது ஒரு 2000 ரூபாய் நோட்டை கூட அச்சிடவில்லை என்று கூறி உள்ளது . இதன் காரணம் குறித்து பத்திரியாளர்களுக்கு தெரிவிக்கையில் , ஏற்கெனவே வெளியிட்ட ரூபாய் நோட்டுகளை விட 35 % புழக்கத்தில் உள்ளதாக கணக்குகள் கூறுவதாக RBI தெரிவித்து இருக்கிறது . இது முழுக்க முழுக்க கருப்பு பணம் . இது அதிகரித்தால் , விலை வாசி உயரும் . பண வீக்கம் அதிகரிக்கும் .

இதனால் , 2000 ரூபாயின் புழக்கத்தை படிப்படியாக குறைக்கலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர் . அதாவது வங்கிக்கு வரும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பவும் புழக்கத்திற்கு கொண்டு வராமல் , அதை அப்படியே வைத்திருப்பது . இதன் மூலம் வெளியிடப்பட்ட அளவிற்கு பணம் திரும்ப வந்தவுடன் , தன்னிச்சையாகவே பண புழக்கம் நின்று விடும் . அதே சமயம் பதுக்கி வைத்திருந்தவர்கள் அதை பயன் படுத்த இயலாமல் போகும் .
இதன் அடிப்படையில் மொத்த ரூபாய் நோட்டுகள் அளவில் வெறும் 22 .5 % மட்டும் இருந்த 500 ரூபாய் அளவில் தற்சமயம் 49 % மாக அதிகரிக்கப்பட்டுள்ளது .
மேற்படி இ - கரெனசி பெருக வேண்டும் என்ற நோக்கமும் இங்கு உண்டு .
அதன்படி எல்லோருடைய கொடுக்கல் வாங்கல்களும் பதிவு செய்யப்படும் .இதனால் வரி ஏய்ப்பு தவிர்க்கப்படும் .
( முழுமையாக வெளியிடப்பட்ட அளவுக்கு பணம் வங்கிக்குள் வந்த பிறகு ஒரு வேளை
2000 ரூபாய் நோட்டுக்கள் இனி செல்லாது என்று அறிவிக்கப்படலாம் . அதுவும் 100 % உறுதி இல்லை .
ஆனால் அந்த நாள் இன்று இல்லை . )

No comments:
Post a Comment