Wednesday, 15 March 2017

சுற்றுலா போக ஏற்ற இடம் -3



முருடேஸ்வர கோவில்



இது முருடேஸ்வர கோவில். 20 அடுக்கு கொண்ட இந்த கோவில் 123 அடி  உயரம் கொண்டது  .கர்நாடக மாநிலத்தில் ,உத்தர கர்நாடகத்தில் உள்ளது. ஒரு முறை போய் பாருங்க.சுத்தியும் கடல்.உயர்ந்த சிவன் சிலை .கமெரசியலா கூட கோவில்,கடல் ,போட்டிங்கன்னு சூப்பரா இருக்கும். இந்த 20 அடுக்கு கோபுரத்தின் உள்ளே செல்ல லிப்ட் வசதி உள்ளது.மேல போய் நின்னு ஊரை சுத்தி பார்க்கலாம் . கோடை விடுமுறைக்கு நல்ல இடம். மங்களூர் , மஞ்சுநாதர் கோவில் இதெல்லாம் வரலாறுகளை கடந்த இடங்கள் .இந்த இடமெல்லாம் பூர்வீக தமிழர் வாழ்ந்த இடங்கள். இந்த கோவிலில் வற்றாத நீர் ஊற்று ஒன்று உள்ளது. அதில் வருவது கங்கை நீர் என்றும், முன்னொரு காலத்தில் வாழ்ந்த எதோ ஒரு மன்னன் கங்கை நதியோடு இந்த நீர் ஊற்றை இணைத்துள்ளான் என்றும் அங்குள்ளவர்கள் கூறுகிறார்கள் .


குக்கி சுப்பிரமணியம் கோவில்

குக்கி சுப்பிரமணியர் கோவில் இருக்கும் மலையின் பெயர் கடம்ப மலை. இது கடம்ப வம்சாவழியினர் ஆண்ட இடம் .

குக்கி சுப்பிரமணியர் கோவில் , நாக தோஷம் உள்ளவங்களுக்கு ,தோஷம் நீங்க ஏற்ற இடம் . ரெண்டு கோவில் இருக்கு. மறக்காம பழைய சுப்பிரமணியர் கோவிலுக்கும் போங்க. கோவில் வாசலில் கடம்ப ஆறு ஓடுகிறது. அழகு அந்த இடம். கடம்ப மலை ஏற உதவி செய்யும் ஆட்களும் அங்கு உள்ளனர்.




இது கோவா .கடற்கரை ஓரம் விடுமுறையை கடக்க விரும்பினால் கோவா ஏற்ற இடம். ஒன்றா இரண்டா ,பார்க்கும் இடம் எல்லாமே பீச் தான்.30 க்கும் மேற்பட்ட பீச் இங்கு உள்ளது. பெய்ஜிங் போனவுடன் ஒரு இரு சக்கர வாகனத்தை வாடகைக்கு எடுத்துக்கங்க .( ஒரு நாள் வாடகை 300 ரூபாய் தான் ) 3 நாள் வாடகை 5 நாள் வாடகைக்கு தர்றாங்க. நீங்க ஊருக்கு திரும்பும் போது போன் பண்ணினா அவங்களே வந்து எடுத்துப்பாங்க. அது வரையிலும் நீங்க பயன்படுத்திக்கலாம்.

தென்னை மரங்கள் நிறைந்து நிற்க , அந்த கடலில் கால் நனைப்பது சுகம். ரம்யமா இருக்கும். குட்டி குட்டி மலை பாறைகள். அதில் விளையாடும் நண்டுகளும் ,மீன்களும் கையில் பிடிக்க ஆசையாய் இருக்கும்.ஆனால் முடியாது.

பீச் க்கு மட்டும் சுத்தாதீங்க .அருகாமையில் வரலாற்று கால கோட்டைகள் உள்ளன. டால்பின் பார்க்க , அதுங்க விளையாட்டை பார்க்க கடலுக்கு உள்ள கொஞ்ச தூரம் அழைச்சிட்டு போறாங்க . அழகு .

அப்புறம் போண்டாவில் ஒரு மூலிகை பண்ணை இருக்கு .அங்க போய் பாருங்க .எல்லா மூலிகை மரங்கள் குறித்தும் விளக்கம் தருவாங்க. அங்க விற்கும் எல்லா பொருள்களும் கலப்படம் இல்லாத பொருள்கள்.அங்க முந்திரி சாராயம் விக்கிறாங்க. குடிப்பதற்கும் இலவசமா கொஞ்சம் தர்றாங்க. ஒரு தனி நபர் 1 லிட்டர் அல்லது 2 லிட்டர் வாங்கி கொள்ளலாம். அவ்வளவுதான் அங்கிருந்து எடுத்து வர முடியும். ஊரை தாண்டி எடுத்து வர கூடாதுன்னு அந்த ஊர் சட்டம் சொல்லுது.

சனி கிழமை சாயங்காலம் , சந்தை போடுறாங்க .அங்க போங்க ! ஆனா எதுவும் வாங்காதீங்க .எல்லாம் கூடுதல் விலை. பேரம் பேசும் திறம் இருந்தால் பிரச்னை இல்லை.

இங்குள்ள சர்ச்சை எல்லாம் பாருங்க ! கொஞ்சம் சுவாரஸ்யமா இருக்கும்.

ஆனா ஒன்னு மட்டும் மறந்துடாதீங்க ! ஏற்கனவே வெள்ளைய இருக்குறவங்க கறுப்பாகிடுவாங்க ! கருப்பா இருக்குறவங்க , கவலையே படாதீங்க ! இன்னும் கொஞ்சம் கருப்பு கூடும் .அவ்வளவு வெயில். குளிர் காலத்திலேயே தூக்கும்.வெயில் காலத்துல சொல்லவே வேண்டாம்.

( சின்ன வேண்டுதல் : பீச் க்கு போற ஆண் ,பெண் எல்லோரும் பீர் குடிச்சிட்டு கடலுக்குள்ள தூக்கி போடாதீங்க .பாவம் அங்குள்ள உயிர்கள் .)

கொஞ்சம் காஸ்ட்லீ .யாரும் ரொக்கமில்லா வர்த்தகம் அப்புடின்னு நம்பிக்கிட்டு கார்டு எடுத்துக்கிட்டு போகாதீங்க. எல்லாம் அங்க ரொக்கம்தான். wifi மட்டும் எல்லா இடத்துலயும் free .

போய் வா என்று சொல்லும் ஒரே ஊர் கோவா தாங்க ! போய்வாங்க ஒரு முறை!


No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...