பொருளாதார பயனற்ற திட்டம் இது ! - பகுதி 1
பெப்ருவரி மாதம் 15 ம் தேதி இந்தியா பிரதமர் , ஹைட்ரோகார்பன் எனும் திட்டத்திற்கு கையெழுத்து போட்டார். இதில் 6 மாநிலங்களில் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உட்பட 31 இடங்களில் எடுக்க இருப்பதாக தகவல் தெரிவிக்க படுகிறது .
அவ்வாறு எடுக்க படும் ஹைட்ரோகார்பன் மூலம் இந்தியாவிற்கு அடுத்த 15 ஆண்டுகளுக்கு 5000 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.இதில் தமிழகத்திற்கு 10 % மும் , அதாவது 500 கோடி ரூபாயும் , அதில் ஒரு 10 % ஆகிய 50 கோடி ரூபாய் வருவாய் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் போய்சேரும் .
வருமானம் என்ற அடிப்படையில் இதில் தமிழ்நாட்டிற்கு எந்த பலனும் இல்லை. அதே சமயம் , இதன் மூலம் இந்தியா பயன் பெரும் என்றால் எந்த கேள்வியும் யாரும் கேட்கபோவதும் இல்லை.
ஆனால் இந்தியாவிற்கும் இந்த திட்டத்தால் பெரிய பலன் இல்லை . காரணம் அடுத்த 15 ஆண்டுகளில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் தனியார் நிறுவனம் பெற போகும் வருமானம் பன்மடங்கு பெரும் . கிட்டத்தட்ட 30000 கோடியை தாண்டும் .
சில அறிவாளிகள் கூறுகிறார்கள் . இந்திய வருமானம் பெறுக போகிறது. மோடிஜி இந்தியாவை வல்லரசு ஆக்கப்போகிறார் என்று !
ஆனால் அது உண்மை இல்லை. இந்தியா முதலில் , இந்த திட்டத்தை தனியாருக்கு ஏன் கொடுக்க வேண்டும் ? தானே செய்யலாம் .
அதைவிடுத்து, தான் செய்ய போவதாக மக்களிடம் பொய் கூறி நிலங்களை வாங்கி , அதனை தனியாருக்கு தாரை வார்க்கிறது .
சரி தனியார் நிறுவனங்கள் இந்த ஹைட்ரொகார்போனை எடுத்து என்ன செய்யும் ?
இந்தியாவிற்கு விற்கும் . அதனை இந்தியா அதீத விலை கொடுத்து வாங்கும் !
எனில் அரசுக்கு நட்டம் .
ஏற்கெனவே நடைமுறை உள்ள நிலக்கரி நிறுவனம் பற்றி தெரிந்து கொள்வோம்.
இன்று மோடிஜி கருப்பு பண ஒழிப்பு பற்றி பேசுகிறார். அதனை ஒழிக்க நடவடிக்கை எடுக்க படும் என்று கூறி சில உதவாத திட்டங்களையும் கொடுத்திருக்கிறார். ஆனால் அவருக்கு தெரியும் எங்கெல்லாம் கருப்பு பணம் இருக்கிறது என்று !
சரி , இந்த நிலக்கரி நிறுவனத்தில் என்ன நடக்கிறது ?
இந்த உலகத்திலேயே நிலக்கரி அதிகம் உற்பத்தி செய்யும் நாடு நம் இந்தியா .
இந்த உலகத்திலேயே நிலக்கரி அதிகம் இறக்குமதி செய்யும் நாடும் நம் இந்தியா தான் !
வியப்பாக இருக்கிறதா ?
ஆமாம் இந்த உலகமும் அப்படிதான் நம்மை வியந்து பார்க்கிறது ! இது எப்படி சாத்தியம் என்று ?
மேற்கு வங்கத்தில் நிலக்கரி உற்பத்தி செய்யப்படுகிறது . ஆனால் எங்கும் அது ஏற்றுமதி செய்யப்படுவதில்லை . ஆனால் ஏற்றுமதி செய்யப்பட்டு , வேறு நாட்டிற்கு சென்று , அதற்க்கு இடையில் இடைத்தரகர் இருப்பது போல் பேசி மீண்டும் இந்தியாவிற்கு வருவது போல் காட்டப்படுகிறது.
இதனால் இந்தியாவிற்கு எப்போதும் நட்டம் .ஆனால் இடைத்தரகர்கள் , கலால் வரி துறையினர் இப்படி பலபேருக்கு இதில் வருவாய் வருகிறது. இதன் மூலம் அதிக கருப்பு பணமும் சுற்றி வருகிறது .
இது இந்தியாவில் நடைபெற்ற , நடைபெறுகின்ற மிகப்பெரிய ஊழல் !
இப்படித்தான் , ஹைட்ரோகார்பன் திட்டமும் மாற இருக்கிறது.
அரசு தான் செய்யாமல் , தனியாரை செய்ய வைத்து ,
பிறகு அங்கிருந்து இறக்குமதி செய்து அதே காஸ் அதே நெடுவாசலுக்கு , பன்மடங்கு விலையில் வரும் . இது தான் மத்திய அரசின் திட்டம்.
எனவே இந்த திட்டத்தால் இந்தியா வல்லரசு ஆகும் என்று கூறும் அறிவாளிகளே தயவு செய்து நிறுத்தி கொள்ளுங்கள் . இந்த திட்டத்தால் பொருளாதார ரீதியாக 10 பைசாவுக்கு பிரயோசனம் இல்லை .
ஊழல் தான் பெருகும் . கருப்பு பணம் வளரும் !
பகுதி 2:
இந்த திட்டம் மக்களுக்கு பாதிப்பு தரும் . எவ்வாறு என்று பல விழிப்புணர்வு காணொளிகள் வந்து விட்டன.
பூமிக்கு அடியில் 2500 அடியில் துளை யிட்டு , அதில் 650 க்கும் மேற்பட்ட ரசாயன கலவைகளை கொட்டி , அதில் இருந்து ஹைட்ரோகார்பன் பிரித்தெடுக்க படும். அப்படி எடுக்கப்படும்போது , அதில் இருந்து வெளிவரும் நஞ்சு , அருகில் உள்ள நீர்நிலைகள் முதல் விவசாய நிலங்களையும் பாதிக்கும். இதனை தொடர்ந்து உட்கொண்டாலோ , சுவாசித்தாலோ காசநோய் வருவது உறுதி .
இது 2010 முதல் நம்மாழ்வார் அய்யாவின் பரப்புரை ஆகும் . இப்படி சொல்வோரெல்லாம் அறிவாளியா ? விஞ்ஞானி யா என்று ஒரு கூட்டம் கேட்கிறது .
இது குறித்து விளக்கம் கொடுத்த நம்மாழ்வார் ஐயா,இயற்கை வேளாண் விஞ்ஞானி தான் .
ஆகையால் , இந்த திட்டம் கைவிட பட வேண்டும் என்று பெப்ருவரு 17 ம் தேதி முதல் நெடுவாசல் மட்டும் இன்றி உலகின் எல்லா தமிழர்களும் போராடி வருகிறார்கள் .
ஆனால் இன்று வரை அரசு பதில் கூற வில்லை.
மாறாக ,
பாரதீய ஜனதாவை சேர்ந்த தமிழிசையும், பொன்ராதா கிருஷ்ணனும்,
H .ராஜாவும்
சரமாரியாக , தமிழக மக்களை தேச துரோகிகள் என்று கூறி வருகின்றனர்.
தமிழர்கள் தேசத்துரோகி எனில் தமிழிசை யார் ?
பகுதி - 3
இதற்க்கு முடிவு என்ன ?
போராட்டம் தொடங்கி , இதோ நெருங்கி விட்டோம் ஒரு மாதத்தை , ஆனால் மத்திய அரசு மெத்தனமாக உள்ளது.
மாநில அரசோ , உண்டு , உறங்கி மகிழ்ந்து வருகிறது .
எனில் , இந்த போராட்டத்தை யாரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
அப்படியாயின் போராடும் முறையில் தவறு உள்ளது.
தண்ணிக்குள் நின்று போராட்டம்!
உண்ணாவிரத போராட்டம்!
பாடை கட்டும் போராட்டம் !
கோலம் போடும் போராட்டம் !
இது போன்ற போராட்டத்தால் யாருக்கு நட்டம் !
இந்த போராட்டத்தால் யாருக்கும் நட்டம் இல்லை விவசாயியை தவிர்த்து !
ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்ற போது , எல்லா இளைஞர்களும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்தனர். அது என்ன முடிவு ?
இனி பெப்சி கோக் போன்ற அந்நிய பானங்களை தொட மாட்டோம்.என்று !
இந்த செய்தி பிபிசி வரை ஒளிபரப்பானது .
எனில் , இந்த போராட்டத்திலும் ,
விவசாயிகள் 5 முடிவுகள் எடுத்தால் ,
மத்திய மாநில அரசுகள் ,
நெடுவாசல் போராட்டத்தை திரும்பி பார்க்கும் !
முதலில் , விவசாயம் சார்ந்த எல்லா மானியங்களையம் , சலுகைகளையும் வேண்டாம் என்று முடிவு எடுக்க வேண்டும்.
இரண்டாவது , அரசு விலை நிர்ணயம் செய்ய கூடாது .
மூன்றாவது கரும்பு உற்பத்தியை நிறுத்த வேண்டும். ஏனெனில் , ஒரு ஆண்டிக்கு விவசாயிகளுக்கு , கொடுக்கப்படும் இலவச மின்சாரம் 2851 கோடி ரூபாய் ஆகும். அதே போல் கரும்பு ஒரு டன்னுக்கு அவர்கள் கொடுக்கும் பணம் ரூபாய் 2600 . எனில் தமிழகம் முழுமைக்கும் உற்பத்தி செய்யப்படும் கரும்புக்கு இவர்கள் கொடுக்கும் மொத்த விலை
208 கோடி ரூபாய் .
ஆக மொத்தம் மின்சார செலவு + உற்பத்தி விலை இரண்டையும் கூட்டினால் கூட 3100 கோடியை தாண்டாது . அனால் கரும்பை வாங்கி கொண்டு , அதன் மூலப்பொருள் களை கொண்டு தயாரிக்க படும் , டாஸ்மாக் வருமானம் 30000 கோடி ரூபாய் .
ஒவ்வொரு விவசாயியும் கரும்பு உற்பத்தியை நிறுத்தி விட்டு , வேறு புன்செய் பயிர்கள் விளைவிக்க முடிவெடுத்தால் , தமிழ்நாட்டின் எல்லா சாராய உற்பத்தி நிலையங்களையும் மூட வேண்டி வரும் . ஏனெனில் , மூல பொருளுக்கென்று 10 பைசா செலவில்லாமல் இந்த சாராய உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அடுத்த மாநிலத்தில் இருந்து மூலப்பொருள் வாங்கி இந்த சாராய ஆலைகள் இயக்க மாட்டார்கள்.
இந்தியாவிலேயே கரும்பு உற்பத்தியில் 4 வது இடம் தமிழகத்திற்கு .
கரும்பு ஒரு முறை பயிரிட்டால் அடுத்த 3 அல்லது 5 ஆண்டு காலத்திற்கு அடி மரத்தை விட்டு விட்டு அறுவடை செய்தால் , மீண்டும் மீண்டும் விளையும் . அதற்க்கு பூச்சி கொல்லி மருந்துகள் மற்றும் உரம் போட்டால் போதுமானது .இந்த இடைப்பட்ட காலத்தில் நீங்கள் , அரபு நாடுகளில் பணியாற்றி மேலும் மேலும் பணக்காரர் ஆகிவிடலாம் என்று பரப்புரை செய்தே , கரும்பு உற்பத்தியை மத்திய மாநில அரசுகள் ஊக்குவிக்கின்றன. அப்படி செல்லும் விவசாயிகள் தான் அரபு நாடுகளின் கட்டிட கலையிலும் , விவசாயத்திலும் ஈடுபடுத்த படுகின்றனர்.
கரும்பு உற்பத்தி இனி நடக்காது , அரபு நாடுகளில் கூலி வேலை செய்யும் நம் விவசாயிகள் , உள்நாட்டில் மட்டுமே வேலை பார்ப்பார்கள் என்று முடிவு எடுத்தால் ,
மத்திய மாநில அரசுகள் ஓடி வந்து , தமிழக பிரச்சனைகளை தூர்வாரும்.
நான்காவது , இத்தனை நாள் போராட்டம் நடந்தும் , எந்த ஒரு கிராமத்திலும் டாஸ்மாக் விற்பனை குறையவே இல்லை.
நம்மால் ஒரு டாஸ்மாக்கை கூட விட்டு தர முடியவில்லையாயின் , நம் பிரச்சனைகள் தீராது .
ஐந்தாவது , யூரியா , பொட்டாஷ் DAP போடுவதை நிறுத்துங்கள் !
இயற்கை வழியில் அரிசி உற்பத்தி செய்யுங்கள் .
விதை நெல் வாங்காதீர்கள் !
IR 8, IR 20 போன்ற இஸ்ரேளுக்கு சொந்தமான இன்டர்நேஷனல் அரிசி ஆய்வு மையத்தின் எந்த ஒரு விதையும் வாங்காதீர்கள்.
பாரம்பரிய நெல் விதை இப்போதும் கிடைக்கிறது.
முடிவு எடுங்கள் ! உங்கள் கையில் தான் இந்த நாளைய சந்ததியே உள்ளது !
மாற்று வழி எல்லாம் அரசு செய்யாது!
அரசு என்ன செய்ய வேண்டும் என்று நாம் முடிவு எடுக்க கூடாது !
நாம் என்ன செய்ய வேண்டும் என்பது மட்டுமே நம் கையில் உள்ளது !
விவசாயிகளே இது உங்கள் வாழ்க்கை மட்டும் அல்ல!
தமிழக மக்களின் வாழ்க்கை !
வாழ வைப்பதும், வாழ்வை அழிப்பதும் உங்கள் கைகளில் !

No comments:
Post a Comment