வாழ்வியல், சமூகவியல் பிரச்சினையின் மூல காரணம் தெரியுமா?
தாம்பத்யம்.
திருமணம் ஆன ,திருமணத்திற்கு காத்திருக்கும் ஒவ்வொரு ஆணும், திருமணம்
என்றால் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும்.
இது பல்வேறு சமூக, கலாச்சார, பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு தரும்.
திருமணம் என்பது ஆணின் கைகளில் பூட்டப்பட்டுள்ள விலங்கு!
பெண்ணின் கைகளில் அது கண்ணாடி குடுவை |
குடுவை உடைய கூடாது.
ஆனால் உடைகிறது.
மது கடைகள் நிறைகிறது.
சமூக அவலங்கள் நிகழ்கிறது.
சமுதாயத்தின் பல்வேறு பிரச்சினைகள் கண்டும், காணாமல் கடக்க படுகிறது.
பலர் வெளிநாடுகளில் வாழ்வதே, வாழ்க்கை என்று முடிந்து போகிறது.
கணவன், மனைவியின் பிரிவு வாழ்வில் ஒரு குழந்தை தன் தன்னம்பிக்கையை இழக்கிறது.
தேவையற்று தற்கொலை எனும் பெயரில்
மனித உயிர்சேதமடைகிறது.
தெரிந்து கொள்வோம்..
தாம்பத்யம் என்றால் என்ன?
_ .........................
திருமணம் ஆகி 10 வது மாதம் என் மனைவிக்கு வளைகாப்பு விழா நடத்தி ஊருக்கு அழைத்து செல்லபட்டார். குழந்தையும், எல்லையில்லா குதூகலமும் கலந்து வீட்டிற்குள் வரும் என்று காத்திருந்தேன். குழந்தை பிறந்தது.
மனைவி வரவில்லை. அதற்கு பதிலாக சட்டம் பல தாக்கீது களோடு உள்ளே வந்தது.
முன் வாயில் வழியாக சட்டம் நுழைந்த போதே பின் வாசல் வழியாக இல்லறமும், என் நம்பிக்கையும் ஓடி விட்டன.
3 ஆண்டுகள் வழக்குகளோடு போராடினேன். நான் ஒரு வன்முறையாளன், கொடூரன் என்று நிரூபிக்கப்பட்டு விட்டது.
உறவுகளும், பொது மனிதர்களும் பேசியாகி விட்டது. என்ன நிபந்தனை சொன்னாலும் ஏற்று கொள்கிறேன். என் மனைவியும், குழந்தையும் வேண்டும் என்றேன்.
என் மனைவியும் ஒரு நிபந்தனை கொடுத்தாள். சொத்தில் சரிபாதி பங்கு வேண்டும் என்று!
வாழ்க்கை இருண்டு போனது. சொத்தும் பறிபோனது. அதை விட கொடுமை, ஒரு தகப்பனாக என் குழந்தைக்கு நான் எதுவும் செய்ய உரிமையற்று போனேன்.
திருமணம் என்பது ஆணின் கைகளில் பூட்டப்பட்டுள்ள விலங்கு!
பெண்ணின் கைகளில் அது கண்ணாடி குடுவை |
உடைந்து விட்டது வாழ்க்கை!
மது அருந்த விருப்பம் இல்லை.
தவறான சேர்க்கை கொள்ளும் சூழலில் நான் வளரவில்லை!
இழந்த சமூக மரியாதையை பெற முடியவில்லை!
தற்கொலை செய்து கொள்ளும் தைரியமும் இல்லை!
முடிவு
சன்னியாசம் பெற்றேன.
வாழ்க்கையை கொண்டாடு என்று கூறியது ஒஷோவின் உலகம்!
என்ன கொண்டாடுவதற்கு பெயர் தான் சன்னியாசமா?
ஆச்சர்யங்களுடன், ஒரு புண்ணிய பூமிக்குள் அடியெடுத்து வைத்தேன். அங்கு தான் தெரிந்து கொண்டேன்.
என் மனைவி குற்றவாளி அல்ல.
ஒரு நோயாளி!
அவரை நோயாளியாக்கிய குற்றவாளி நான் தான்.
இப்படி மனைவியை நோயாளியாக மாற்றிய முதல் நபரும் நான் அல்ல.
முடிவான நபரும் நான் அல்ல.
எனில்.....
ஆண், பெண், திருமணம் என்றால் என்னவென்றே தெரியாமல், அந்த புது வெள்ளத்தில் எல்லோரும் குதித்து கொண்டு இருக்கிறோம்.
இப்படி தான் தன் சுயவிவர குறிப்போடு ஆரம்பிக்கிறார்
போதி பிரவேஷ் (தொடர்வோம்)
தந்த்ரா வழியில் தாம்பத்யம்
-------------------------------------------------------------------------------------------------------------
தந்த்ரா வழியில் தாம்பத்யம் - நூல் குறிப்பு
பாகம் - 2
பல ஆயிரம் ஆண்டுகளாக ஆண் , ஆதிக்கம் செலுத்தி கொண்டு இருக்கிறான்.
இதன் தொடக்கம் எங்கு இருந்து ஆரம்பிக்கிறது.
விலங்குகளை போல் வாழ்ந்த மனிதன் , எவ்வாறு உருமாற்றம் பெற்றான் என்பதையும் குகை வாழ்க்கை எப்படி இருந்தது என்பதையும் அழகாக விளக்குகிறார்.
அடிக்கடி விலங்குகளுக்கு உணவானது ஆண் அல்ல. பெண் தான்.
கும்பல் வாழ்க்கை என்ற கூட்ட வாழ்க்கை ஆரம்பித்த வரலாறை விளக்கும் ஆசிரியர்,
அங்கு பெண்ணின் நிலை என்ன என்பதையும் விளக்குகிறார்.
பெண்ணுக்காக ஆண்கள் அடித்து கொண்டு பலர் மாண்டத்தையும் கூறும் பொழுது,
விலங்குகளுக்காக இறந்த ஆண்களை விட பெண்களுக்காக இறந்த ஆண்களே அதிகம் என்று கூறுகிறார்.
அந்நிலை எப்படி மாறியது , அதை எப்படி ஒரு தாய் வழி சமூகம் வழி நடத்தியது என்பதையும் கூறுகிறார்.
பிறகு ,
அரசன் என்ற பெயரில் , பாதுகாக்கும் பொறுப்பில் இருக்கின்ற ஆண்கள் , பெண்ணுக்கு இல்வாழ்க்கை தொடர்பாக என்ன வெல்லாம் சட்டம் விதித்தார்கள் .என்று கூறி ,
ஒரு தார வாழ்க்கை பயணம் .பற்றி ஆரம்பிக்கிறார்.
இங்கு தான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது.
அதே சமயம் ஆண் ,பெண் சக்தி எப்படி இருக்கும் ,என்று கூறுகிறார்.
ஆண் என்பவன் சக்தி வாய்ந்தவன்.ஆனால் அவன் சக்தி அழிவு சக்தியாகவே இருக்கும் .அந்த சக்தியை ஆக்கும் சக்தியாக மாற்றும் வல்லமை படைத்தவள் பெண்.
ஒரு பெண்ணால் மட்டுமே, தலைமுறைகள் கடந்தும் நிற்க கூடிய பண்பாற்றாலை ,
ஒரு குழந்தைக்கு உருவாக்க முடியும் .
என்று கூறும் பொழுது பெண்ணின் உயர்வையும் , அவளால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதையும் கூறி பெண்ணை உயர்வு படுத்து கிறார்.
எனில் பெண்ணை ஆண், எப்படி நடத்த வேண்டும் ?
ஒரு தேவதை போல் நடத்த வேண்டும்.
தேவதை என்றால் , ஆடை , அலங்காரங்களால் அல்ல.
அவளுக்கு என்ன வேண்டுமோ , அதை சரிவர செய்து அவளை தேவதை போல் நடத்த வேண்டும் .என்று கூறுகிறார்.
ஆனால் ,
நீண்ட காலமாக ,நாமும் ,
நம் சமுதாயம் பெண்ணின் சுதந்திரம் என்று என்னனென்ன வெல்லாமோ செய்து கொண்டு இருக்கிறோம் .
சினிமா கூறியதை எல்லாம் செய்து கொண்டு இருக்கிறோம் .
கல்வி கொடுத்தால் பெண் சுதந்திரம் பெறுவார்கள் என்றனர்.
முடிந்தவரை எல்லா பெண்களும் கல்வி பெற்று விட்டனர்.
வேலைக்கு சென்றால் பெண் சுதந்திரம் என்றனர்
செய்தோம்
அழகு படுத்தி கொள்வது,
அவள் பெயரில் சொத்து இருப்பது,
தனி குடித்தனம் செல்வது
வெளிநாடுகளில் வாழ்வது, இன்னும் எவ்வளவோ சொல்லி விட்டார்கள் .
நாமும் செய்து கொண்டு தான் இருக்கிறோம்.
ஆனால் இன்று வரை பெண் நிம்மதியாக தூங்காவதில்லை.
அவளுக்கான சுதந்திரம் என்னவென்று ஆண்கள் எழுதிக்கொண்டே இருக்கிறோம்.
அவள் மட்டும் சொல்லவே இல்லை.
தனக்கு என்ன தேவை என்று !
ஆண்களும் யோசிக்கவில்லை எது அவளது தேவை என்பதை !
அந்த குறைகளை முற்றிலும் நீக்கி இருக்கிறார் ஆசிரியர்.
மேலும் , எங்கு பார்த்தாலும் பெண்களை கேலி செய்யும் நகைசுவை.
பெண் ஆணை அடிமை படுத்துவது போலவும்,
ஆண்கள் அதை சிரித்து கொண்டே கடப்பது போலவும் உள்ளது.
பல்வேறு இடங்களில் ஆண்கள் புலம்புகிறார்கள் . அப்படி புலம்புகின்ற ஆண்களின் புலம்பல்களை பட்டியல் இடுகிறார்.
அவற்றில் சில :
1. வீட்டிற்குள் நுழைந்தாலே சண்டையாகவே இருக்கிறது. தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட தோன்றுகிறது . ஆனால் என் மகனுக்காகத்தான் வாழ்கிறேன்.
2. லட்ச ரூபாய்க்குமேல் சம்பளம் . ஆனால் நிம்மதி இல்லை. ஒரே சண்டை. எவ்வளவு ஒதுங்கி சென்றாலும் வாய்க்குள் விரலை விட்டு ,வார்த்தைகள் பிடுங்கி சண்டை போடுகிறாள்.
3. நான் ஒய்வு பெற்றவன் . நல்ல வருமானம் . ஆனால் , நானும் என் மனைவியும் சண்டை போடுவதற்காக மட்டுமே பேசி கொள்கிறோம்.
4. ஒரு பெரிய பணக்கார கணவர் கூறுகிறார். செலவுக்கு பத்தாயிரம் கேட்டால் , இருபதாயிரம் கேட்டால், ஐம்பதாயிரம் தருகிறேன். ஆனால் நிம்மதி இல்லை.
இது போல பல பிரச்சனைகளை கூறும் ஆசிரியர் ஒன்றை மட்டும் தெளிவாக கூறுகிறார்.
குடும்ப பிரச்சனைகளுக்கு பொருளாதாரம் என்பது காரணமே அல்ல.
பெண்ணின் ஆசைகள் , தேவைகள் காரணம் அல்ல .
எங்கோ தவறு இருக்கிறது.
அந்த தவறை செய்பவன் , ஆண் .
பெண் அல்ல .
என்ன தவறு அது ?
அருமையாக விளக்குகிறார்
ஞானி போதி பிரவேஷ் --- தொடர்வோம்
-----------------------------------------------------
நம் சமுதாயம் பெண்ணின் சுதந்திரம் என்று என்னனென்ன வெல்லாமோ செய்து கொண்டு இருக்கிறோம் .
சினிமா கூறியதை எல்லாம் செய்து கொண்டு இருக்கிறோம் .
கல்வி கொடுத்தால் பெண் சுதந்திரம் பெறுவார்கள் என்றனர்.
முடிந்தவரை எல்லா பெண்களும் கல்வி பெற்று விட்டனர்.
வேலைக்கு சென்றால் பெண் சுதந்திரம் என்றனர்
செய்தோம்
அழகு படுத்தி கொள்வது,
அவள் பெயரில் சொத்து இருப்பது,
தனி குடித்தனம் செல்வது
வெளிநாடுகளில் வாழ்வது, இன்னும் எவ்வளவோ சொல்லி விட்டார்கள் .
நாமும் செய்து கொண்டு தான் இருக்கிறோம்.
ஆனால் இன்று வரை பெண் நிம்மதியாக தூங்குவதில்லை .
ஏனெனில் இதுவெல்லாம் அவளது சுதந்திரம் இல்லை .
அவள் பொண்ணுக்கும் , பொருளுக்கும் ஆசை படவில்லை .
அவளுக்கான சுதந்திரம் என்னவென்று ஆண்கள் எழுதிக்கொண்டே இருக்கிறோம்.
அவளும் இதுநாள் வரை சொல்லவே இல்லை.
தனக்கு என்ன தேவை என்று !
ஆண்களும் யோசிக்கவில்லை
எது அவளது தேவை என்பதை !
ஆண்கள் எல்லோரும் பெண்ணின் தேவைகளை அறிந்து கொண்டு திருமணம் செய்வது இந்த சமுதாய முன்னேற்றத்தின் அடித்தளம் ஆகும்
தந்த்ரா வழியில் தாம்பத்தியம்
தாம்பத்தியம் என்ற வார்த்தையை கேட்டாலோ , படித்தாலோ அசிங்கம் என்று நம் மனதில் விதைத்த இலுமினாட்டி திட்டத்தை முறியடித்து ,
வருங்காலத்தை வளமாக்க , திறம் மிக்க தமிழ் வாரிசுகளை இம்மண்ணில் விதைக்க
ஆண் என்பதையும் பெண் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள் .
----------------------------------------------------------------------------------------------------------
ஆண்களின் புலம்பல்கள் :
1. வீட்டிற்குள் நுழைந்தாலே சண்டையாகவே இருக்கிறது. தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட தோன்றுகிறது . ஆனால் என் மகனுக்காகத்தான் வாழ்கிறேன்.
2. லட்ச ரூபாய்க்குமேல் சம்பளம் . ஆனால் நிம்மதி இல்லை. ஒரே சண்டை. எவ்வளவு ஒதுங்கி சென்றாலும் வாய்க்குள் விரலை விட்டு ,வார்த்தைகள் பிடுங்கி சண்டை போடுகிறாள்.
3. நான் ஒய்வு பெற்றவன் . நல்ல வருமானம் . ஆனால் , நானும் என் மனைவியும் சண்டை போடுவதற்காக மட்டுமே பேசி கொள்கிறோம்.
4. ஒரு பெரிய பணக்கார கணவர் கூறுகிறார். செலவுக்கு பத்தாயிரம் கேட்டால் , இருபதாயிரம் கேட்டால், ஐம்பதாயிரம் தருகிறேன். ஆனால் நிம்மதி இல்லை.
எனில் ,
குடும்ப பிரச்சனைகளுக்கு பொருளாதாரம் என்பது காரணமே அல்ல.
பெண்ணின் ஆசைகள் , தேவைகள் காரணம் அல்ல .
தீர்வு தேடுங்கள்!
சமுதாய பிரச்சனைகளுக்கு முற்று புள்ளி வையுங்கள்!
பல பேருக்கு நாட்டின் பிரச்சனைகளை போராட்டமாக கொண்டு செல்ல வேண்டும்.
அரசை எதிர்த்து நம் வருங்கால சந்ததிக்கு நீரையும் , காற்றையும் விட்டு செல்ல வேண்டும் என்று ஆசை. லட்சியம்.
ஆனால் காலை இடறி விடுகிறது இல்லறம்.
வீட்டில் உள்ள பிரச்சனைகளை சரி செய்யாமல் என்னால் எப்படி , பொது பிரச்சனையில் ஈடுபட முடியும்.
தாம்பத்தியம் என்ற வார்த்தையை கேட்டாலோ , படித்தாலோ அசிங்கம் என்று நம் மனதில் விதைத்த இலுமினாட்டி திட்டத்தை முறியடித்து ,
வருங்காலத்தை வளமாக்க , திறம் மிக்க தமிழ் வாரிசுகளை இம்மண்ணில் விதைக்க
ஆண் என்பதையும் பெண் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள் .
இது உடல் சார் பிரச்சனை அல்ல.
உணர்வு சார்ந்த , இனம் சார்ந்த , மொழி சார்ந்த பிரச்னை .
அடிப்படையை சரி செய்யாமல் ஆள இயலாது.
----------------------------------------------------------------
தந்த்ரா வழியில் தாம்பத்யம் - நூல் குறிப்பு - இறுதி பாகம்
ஒரு வெளிநாடு வாழ் கணவர் மனைவி மற்றும் குழந்தைகளை காண ஊருக்கு வருகிறார். ஊருக்கு வந்த மறுநாள் அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட மருத்துவமனை சென்று பார்த்த பொழுது அவருக்கு வயிற்றில் புண் ஏற்பட்டுள்ளது. காரணம் அவர் நீண்ட நாட்களாக கடை உணவு உண்கிறார். ஒரு 7 நாட்கள் கழித்து உடல் ஓரளவிற்கு தேறி விட்டார். அவருடைய லீவ் நாட்களில் 10 நாட்கள் ஓடி விட்டது.
அவருடைய உறவுகள் எல்லாம் மீண்டும் ஊருக்கு போக வேண்டாம். மீண்டும் மீண்டும் வைத்தியம் செய்து கொண்டே இருப்பாயா என்று கேள்வி எழுப்ப , அவரும் அது குறித்து மனைவிடம் ஆலோசனை செய்கிறார். ஆனால் அவர் மனைவி ஒப்பு கொள்ளவில்லை.
"ஒன்னும் பண்ணாதுன்னு டாக்டரே சொல்லிட்டாரு , உங்க சொந்த காரவங்களுகெல்லாம் நாம வசதி ஆகுறோம்னு பொறாமை , அதான் தூண்டி விடுறாங்க ! "
என்று கூறியதும் ,
சரி தான் என்பது போல தலையாட்டி விட்டு வேண்டா வெறுப்பாக வும் , என் மனைவி என்னை வெறுக்கிறாளோ என்ற அவ நம்பிக்கையும் அவருக்கும் தோன்ற , மீண்டும் வெளிநாட்டு வாழ்க்கை .
ஒரு வார காலத்திற்குள் அவரது மனைவிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவ மனையில் சேர்த்த செய்தி அவருக்கு அலைபேசியில் தெரிவிக்கப்பட்டது. உடன் அவரால் வர இயலவில்லை. மருத்துவ மனை தலைமை மருத்துவரிடம் அலைபேசி வழியாக பேசினார். மருத்துவர் கூறிய பதில் அவருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
"அவங்களுக்கு ஒன்னும் இல்லீங்க! நீங்க தான் பக்கத்துல இருக்கணும் . இது தான் மருந்து "
என்றார் .
அவருக்கு குழப்பம் , என் மனைவி வெளி நாட்டு வாழ்க்கைக்குள் என்னை தள்ளி 11 ஆண்டுகள் ஆகி விட்டது. இன்னுமும் வெளிநாட்டில் தான் வேலை பார்க்க என்னை தூண்டுகிறார். ஆனால் அவளுக்கு நான் தான் மருந்து.
அவருக்கு தொடர்கிறது இந்த குழப்பம்.
இது கதை அல்ல. உண்மை!
இன்னும் சில மனைவிகள் இருக்கிறார்கள் . அவர்கள் என்ன செய்கிறார்கள் என்ற சிறு பட்டியல் :
1. ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டு விடுகிறார்கள்.
2. பிறகு பழனி மலை.
3.வேளாங்கண்ணிக்கு மாலை போடுவது.
4. மேல் மருவத்தூர் அம்மனுக்கு மாலை போடுவது.
5. திருப்பதிக்கு விரதம்.
6.செவ்வாய் , வெள்ளி, சதுர்த்தி, அமாவாசை,பௌர்ணமி விரதம்.
இன்னும் இந்த லிஸ்ட் நீண்டு செல்கிறது .
இதற்கெல்லாம் என்ன காரணம்?
மனைவி ,கணவனிடம் இருந்து விலகி நிற்க விரும்புவதே காரணம்.
சில பெண்கள் 1000 புடவைகள் வரை வாங்குகிறார்கள் !
சிலர் நகைகள் !
இதனாலும் லஞ்சம் , ஊழல் அதிகரிப்பு !
இதை தீர்க்க என்ன வழி ?
தந்த்ரா வழி தாம்பத்யம் வழி சொல்கிறது.
இதன் தீவிர தன்மையை விளக்கும் ஆசிரியர் , இந்த பிரச்சனையின் வீரியத்தை கீழ்கண்டவாறு கூறுகிறார் :
காலை யில் பள்ளிக்கு செல்லும் குழந்தையிடம் கோபத்தை காட்டுவது , அடிப்பது .
அவ்வாறு நடந்து கொள்ளும் போது குழந்தையின் மூளையில் ஒரு வேதி சுரப்பி சுரக்கிறது. அதனால் குழந்தை எதை படித்தாலும், அதை மூளையில் இருந்து அழித்து விடுகிறது அந்த சுரப்பி . குழந்தை கல்வியில் பின் தங்கி போகிறது.
மேலும் மேலும் சண்டை , ஒரு கட்டத்தில் விடுதலை பத்திரம் பேச ஆரம்பிக்கிறது.
அப்போது பெண் விடுதலை பெறுவதாக உணர்கிறாள். ஆனால் அந்த குழந்தை கிட்டத்தட்ட அனாதை ஆகிறது . மறுத்திருமணம் என்பது இருவருக்குமே நரகம் தான். அதில் குழந்தை முற்றிலும் அனாதை ஆகிறது .
இப்படி வளர கூடிய குழந்தைகள் தான் பிற்காலத்தில் பெரும் தவறுகளின் பாதையில் நடக்க ஆரம்பிக்கிறது. அங்கு தான் சமுதாய சீரழிவு ஆரம்பம் ஆகிறது .
அற்புதமாக விளக்குகிறார் ஆசிரியர் போதி பிரவேஷ் அவர்கள் !
தயவு செய்து எல்லோரும் தாம்பத்யம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
நம் வீடு நலம் பெற,
நம் நாடு நலம் பெற,
நம் சமுதாய சிக்கல்களை தீர்க்க ,
சரியான முறையில் தீர்வு சொல்கிறது
தந்த்ரா வழியில் தாம்பத்யம்!
அனைவரும் படித்து , நல்வாழ்வு பெறுவோம்!
வாழ்க வளமுடன் !
------------------------- முற்றும் ----------------------------------------