Friday, 15 December 2017

ராஜா ராஜா சோழன் என்ன ஜாதி ?

ராஜ  ராஜ சோழன் என்ன ஜாதி ?

இப்படி ஒரு பதிவை இன்று படிக்க நேரிட்டது.
அட அட அட என்னமா நம் மக்கள் சண்டை போட்டு கொல்கிறார்கள் .
பெருமையாகத்தான் இருக்கிறது.

சோழன் என்றாலே , நெல் , விளைவிப்பன் எனில்

வேளாளர் ஜாதியாம்.

அவன் கல்வெட்டுலேயே , பெரு உடையார் என்று தான் கூறி இருக்கிறான் .
அப்போ

உடையார் ஜாதி .

ராஜராஜ சோழனின் உண்மையான பெயர் , அருண்மொழி தேவன் .
எனில் ,

தேவர் ஜாதியாம்.

11982 ல் இந்திராகாந்தி அம்மையார் தஞ்சை வந்து சதயவிழாவில் பங்கு கொண்டபோது , தேவேந்திர குல வெள்ளாளர்கள் தான் துண்டு பிரசுரம் கொடுத்து கொண்டாடினார்கள் . எனில் ,

தேவேந்திர குல வெள்ளாளர். மற்றும் பள்ளர் , மள்ளர் எல்லாம் !
பள்ளர் என்பதில் குடும்பர், குடும்பி என்னும் பல உள்ளது.
(  இந்த குடும்பர் ஜாதியும் ஆந்திர ரெட்டி ஜாதியும் ஒன்று என்று கூறிதான் , அதன் அடிப்படையில் விஷால் தமிழராம் .)

ராஜராஜ சோழன் பூ நூல் அணிந்து தான் அவனது சிலைகள் உள்ளன .
எனில் ,

பிராமணர்.

சோழர்களே தெலுங்கர்கள் தான் .
எனில்

தெலுங்கர்.

இன்னும் பலரும் ,

ஒரே சண்டை.

அப்பப்பா , முடியல ,
.
தேவர், தேவேந்திரர், தெலுங்கர், பிராமணர், உடையார் எல்லாரும் ஒண்ணா அடிச்சிக்கிட்டு கிடங்க !

தேவர் , தேவேந்திரர் , இதெல்லாம் ஜாதி கிடையாது. பட்ட பெயர்கள் .இதனை யார் வேண்டுமானாலும் போட்டு கொள்ளலாம். அதுவும் பிராமண சொம்புதூக்கிகளுக்கு கொடுக்கப்படுவது.
பிராமணர் தமிழர்களே கிடையாது.
தெலுங்கர் பார்சி ஒட்டு !
உடையார் என்ற வார்த்தையானது, ஜாதி அல்ல .
பெருமை உடையார் , கருத்து உடையார் என்பன போன்று

அங்கிருக்கும் சிவன் பல பெருமைகளை கொண்ட , பெரிய உருவம் உடையவர் என்று பொருள் தானே தவிர ஜாதி அல்ல.

தேவர் , தேவேந்திரர் போன்ற வார்த்தைகளே தமிழ் இல்லை . ராஜராஜசோழன் காலத்தில் , சைவம் , வைணவம் என்று பௌத்தத்தை அழிக்க வேறு மதங்களை பயன்படுத்த வேண்டிய நிலையில் ,
பிராமணர்களுக்கு முக்கித்துவம் கொடுக்கும் நிலையில் இருந்திருக்கிறார்கள் .
அதன் அடிப்படையில் , உயர்ந்தவர் என்று பொருள் கொள்ளும் தேவர் என்ற வார்த்தையை , சோழன் பயன்படுத்தினான் .
அதனால் அவன் தேவர் ஜாதி அல்ல .தேவர் என்பதும் , முக்குலத்தோர் என்பதும் ஜாதியே அல்ல. கள்ளர் , மறவர், அகமுடையார் இணைந்து வைத்து கொண்ட பட்ட பெயர்.

சோழர்கள் சில காலங்கள் ஆந்திராவை ஆண்டதும் , ராஜராஜ சோழனின் மகளை தெலுங்கு மன்னருக்கு  பெண் கொடுத்ததும் உண்மைதான் .
ஆனால் , ஆந்திராவிலேயே , நாங்கள் தெலுங்கு பேசுபவர்கள் அல்ல என்று அவர்களே கல்வெட்டில் குறித்து விட்டார்கள் .

ஆமா , இந்த தேவேந்திரன் யார் ?
தமிழருக்கும் , இவருக்கும் என்ன சம்பந்தம் ?
பள்ளர் , கள்ளர் , மள்ளர் எல்லாம் கூட பரவா இல்லை .
இந்த தேவேந்திர குல வெள்ளாளர் என்பது தான் மிகவும் குறையாக உள்ளது.

மக்களே ,

ராஜராஜன் என்ன ஜாதியாக இருந்தால் என்ன ?
இன்றைய நிலைக்கு ,
தன ஜாதி பெரியது என்று அலட்டி கொள்ள ஒருவனுக்கும் தகுதி இல்லை. தமிழ்நாடு தெலுங்கர் வாசமும், இஸ்லாமியர் வசமும் , ஆங்கிலேயர் வசமும் இருந்த போது அவர்களை எதிர்த்த ஜாதியெல்லாம் யார் ?


இன்று வசனம் பேசும் எல்லா சத்திரிய ஜாதிகளும் எங்கே போய் இருந்தன ?
வாள் தீட்டப்படாமல் இருந்ததா ?

உங்களில் ஒருவர் , கையில் ஆயுதம் ஏந்தி ஆங்கிலேயனை எதிர்த்தேன் என்று கூற முடியுமா ? போர் செய்து என் குலமே அழிந்தது என்று கூற முடியுமா ?

வீரம் பெண்ணிடம் காட்டப்படுகிறது.
இளம் காதலர்களிடம் காட்டப்படுகிறது.
அக்காலத்தில் இருந்த , எந்த மன்னனும் கூட ஒப்பு கொள்ளமாட்டான், உங்களின் வீரத்தை !




சண்டையிடும் பலரும் பல எழுத்தாளர்களையும், புத்தகங்களையும் உதாரணம் கூறும் போது  தான் தெரிகிறது,
எழுத்தாளர்களின் எழுத்தை தவறாக பயன்படுகிறார்கள் என்று!

ஐயா , ஆண்ட பரம்பரைகளே ,
எல்லா பரம்பரையும் எங்கோ தோற்று தான் போயிருக்கும் . தோற்றபிறகு வீராப்பு எதற்கு ?

சோழர் வம்சம் கூட முற்றிலும் அழிந்து விட்டது. அப்படி இருக்க , அவருக்கு , உரிமை கொண்டாடுவது அசிங்கம் .
தமிழனுக்கு , தமிழனே செய்யும் கேடு !





1 comment:

  1. மலையமான் குலத்தில் பிறந்தவர் வானமாதேவி என்பதை மறந்து விட வேண்டாம்.

    ReplyDelete

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...