வேலைகாரன் என்றொரு திரைபடம் பார்த்தேன். பாவம், Dr.சிவராமன், ஹீலர் பாஸ்கர் போன்றோரின் உழைப்பு வீணடிக்க வழி கூறும் திரைபடம் அது.
இந்த திரைப்படத்தில் சில முக்கிய விஷயங்கள் பேசப்படுகிறது .
1. தாழ்த்தப்பட்ட மக்கள் என்றும் , பட்டியல் மக்கள் என்றும் வழங்கப்படுபவர்களை, அவர்களின் தலைவர்கள் எப்படி பயன்படுத்தி கொள்கிறார்கள் என்று விளக்கப்பட்டுள்ளது.பாராட்டுக்கு உரியது.
2. அதே போல் , அந்த தலைவர்கள் , கார்பரேட்டுக்காக வேலை பார்க்கிறார்கள் என்பதும் கூறப்பட்டுள்ளது அருமை .
3. பெண்களை கொண்டு நடத்தப்படும் சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்ச்சிகளின் உண்மை விளக்கப்படுகிறது . அதுவும் அருமை .
4. கடைகளில் பொருள்கள் எடுக்கப்படும் விதம் மற்றும் , விற்பனை முறை விளக்குவதும் அருமை .
5. 8 மணி நேர மார்க்கெட்டர் தான் 16 மணி நேர consumer என்று கூறுவதும், ஒருவர் பாக்கெட்டில் இருந்து , மற்றொருவர் பாக்கெட்டுக்கு பணம் மாற்றுவதே வணிகம் . இதுவும் அருமை .
ஆனால் ,
சினிமா எல்லா பிரச்சினைகளையும் சரியாக கூறி, தவறான தீர்வை மக்களுக்கு கொடுக்கும். அந்த Formula இந்த திரைபடத்திலும் உண்டு.
உற்பத்தியாளன் செய்ய கூடிய சந்தையிடுதல் (Marketing) பற்றி பேசாமல், விற்பனையாளனின் சந்தையிடுதலை நிறுவனம் விளக்குகிறது.
முதலாளிகளை குறை கூறாமல், பணியாளர்கள் மாற வேண்டும் என்று கூறுகிறது.
(Consumer ) நுகர்வோர் கடைசி வரை , தற்சார்புக்கு செல்லாமல், கடைகளில் விற்கும் Noodles, Jam, Bread, Biscuit, Energy Drink போன்றவற்றை தான் உண்ண வேண்டும் என்பதில் இயக்குநர் தெளிவாக இருந்திருக்கிறார்.
Junk Food வேண்டாம் என்று கூறி, விழிப்புணர்வு கொடுக்கும் Dr.சிவராமனை பேச வைத்து, அதை நல்ல முறையில் தயாரித்தால் உண்ணலாம் என்று தவறான முடிவு சொல்கிறது திரைபடம் .
Junk Food தொடர்ந்தால் மலட்டு தன்மை வரும் என்பதை மட்டும் கதையில் சொல்ல வே இல்லை.
Junk Food தொடர்ந்தால் மலட்டு தன்மை வரும் என்பதை மட்டும் கதையில் சொல்ல வே இல்லை.
வேலைகாரன்
கார்ப்பரேட்டுக்காக உழைத்து, மக்களை அதற்குள்ளேயே வைக்க
உழைத்திருக்கிறான்.
கார்ப்பரேட்டுக்காக உழைத்து, மக்களை அதற்குள்ளேயே வைக்க
உழைத்திருக்கிறான்.
திரைபடத்தில் வோல்கா to கங்கா எனும் புத்தகம் பற்றியும், தாய் வழிசமூகத்தில் இரவில் பெண் எந்த ஆணுடன் இருக்க வேண்டும் என்பதை தானே முடிவெடுத்தாள் என்றும் கதாநாயகி கூறுகிறார்.
அது 4000 ஆண்டுகளுக்கு முன் உருவாகிய ஆரிய வம்சாவளி கதை
அது 4000 ஆண்டுகளுக்கு முன் உருவாகிய ஆரிய வம்சாவளி கதை
தமிழர்களுக்கும் அதற்கும் யாதொரு தொடர்பும் இல்லை.
வேலைக்காரன் தவறான மூளையை சொல்லி தருகிறான்.
பலபேரின் உழைப்பை உறிஞ்ச போராடுகிறான்.
No comments:
Post a Comment