Wednesday, 13 December 2017

தேவதாசிகளின் உண்மையான வரலாறு

தேவதாசிகளின் உண்மையான வரலாறு


தேவதாசிகள் உருவான கதை கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனும் அறிந்து கொள்ள வேண்டும்.
ஏனெனில் அது தமிழ் ஏமாந்த கதை . தமிழர்கள் ஏமாற்றப்பட்ட கதை .

தொடக்க கால வரலாறு :


நம் இதிகாசங்கள் , புராணங்கள் கூறுகின்றன . நம் நாட்டில் வாழ்ந்த மன்னர்கள் அத்துணை பேருக்கும் 20000 முதல் 60000 மனைவி இருந்ததாக கூறுகின்றன. அத்தனை பேருடனும்  மன்னர் வாழ்ந்தாரா என்ற கேள்விக்கு எந்த காவியமும் பதில் எழுதவில்லை.
எப்படி ஒரு மன்னருக்கு இவ்வளவு மனைவியர் இருக்க முடியும் ?
எந்த பெண் வேண்டும் என்றாலும் திருமணம் என்ற பெயரில் அந்த பெண்ணை அரண்மனை அழைத்து வர மன்னருக்கு உரிமை உண்டு . அதன் அடிப்படையில் தான் தசரதனுக்கு 60000 மனைவி . க்ரிஷ்ணனுக்கு 16000 மனைவியாம்.

இதே அடிப்படையை ராவணன் பின்பற்றினால் மட்டும் அது தவறாம. என்ன நியாயம் இது ? இது தனி கதை .

சரி நம்ம கதைக்கு வருவோம்.

அவ்வாறு அழைத்து வரப்பட்ட பெண்களோடு மன்னர்கள் வாழ்வது கிடையாது. அழகிகள் , அறிவுள்ள பெண்கள் , எதிரியின் வீட்டு பெண்கள் இங்கு தான் இருக்க வேண்டும் .அது தான் அவர்களுக்கு மரியாதை .
அனால் , இவ்வளவு பெண்களுக்கும் உணவு ,  உடை என்று எவ்வளவு செலவுகள் ? ஒரு வேலையும் செய்யாமல் மன்னரின் கவுரவத்தை காப்பாற்ற அதீத செலவுகள் மன்னர்கள் செய்து வந்தனர் . இந்த செலவுகளை ஈடுகட்ட வரியும் அதிகம் விதித்தார்கள் .

அப்படிதான் கி.பி.590 களில் விக்ரமாதித்தன் என்று வழங்கப்பட்ட ஹர்ஷவர்தனும் பல மனைவியரோடு வாழ்ந்து வந்தான். அவரது அவையில் இருந்த புலவனும் , ஹர்ஷனின் நெருங்கிய நண்பனும் ஆகிய , பணப்பட்டான் , மன்னரிடம் எல்லா விஷயங்களும் பேசும் உரிமை பெற்றவன்.

அவன் , மன்னனிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி இதுதான்.
ஏன் இவ்வளவு பெண்கள் ?
இவர்களால் மக்களுக்கும் வரி சுமை அதிகரிக்கிறது .
இதை தவிர்க்க கூடாதா ?

மன்னரோ ,
நான் என்ன செய்யட்டும் . இது வழக்கமாக இருப்பது தானே . இதற்க்கு என்ன வழி என்று எனக்கும் தெரியவில்லை. ஆனால் இதை விடவும் முடியாது என்று பதில் கூறுவார்.

இந்நிலையில் பௌத்த மதம் தொடர்பாக பேசவும்,  மஹாபாரதம் பற்றி கூறவும் , தென்னிந்தியா விற்கு வந்தார் பணப்பட்டார்.
அதே சமயம் மத்தியில் ஆட்சி செய்து கொண்டு இருந்த , மேலை சாளுக்கிய மன்னன் 2 ம் புலிகேசியும் தென்னிந்தியாவிற்கு வந்திருந்தான்.

அந்நேரம் தென்னிந்தியாவை ஆட்சி செய்தது பல்லவர்கள் .மஹேந்திர வர்ம பல்லவனின் ஆட்சி அது. பணப்பட்டர் நேரடியாக , அவைக்குள் வரவேற்கப்பட்டார். அப்போது தான் அது நடந்தது.

ஒரு அழகிய பெண், உடலை காக்கும் அத்துணை முத்திரைகளையும் பயன்படுத்தி நடனம் ஆடினாள் . என்ன ஆச்சர்யம் ! முத்திரைகளை கொண்டு நாட்டியமா ? வியந்து போனார் பணபட்டர் .

இதே நிகழ்ச்சியை பின்வாசல் வழியாக நோட்டம் விட்டு வேடிக்கை பார்த்தவன் புலிகேசி . அதன் பிறகு அந்த நாட்டிய பெண் கடத்தப்பட்டாள் . மத்திய இந்தியா முழுக்க இந்த நாட்டியத்தை பரப்பினான் புலிகேசி . அவளது ஒவ்வொரு முத்திரை அசைவையும் கொண்டு அஜந்தாவும் , எல்லோராவும் உருவாகின.

இதன் அழகிய பதிவுதான் திரு கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதிய , சிவகாமியின் சபதம் .

அதே சமயம் , தான் கண்ட நிகழ்வை ஹர்ஷரிடம் கூறினான், பாணபட்டன்.
அதை நேரில் பார்க்க ஆசை கொண்டான். அங்கனமே , பல்லவ சாம்ராஜ்யம் உதவியது. இதனை கொண்டு , தன அரண்மனையில் இருந்த பெண்களுக்கெல்லாம் நடனம் கற்று தர பட்டது. பிறகு அப்பெண்கள் தேவர் அடியார்கள் என்று பெயர் சூட்டப்பட்டு , கோவிலில் நடனம் ஆட அனுமதிக்கப்பட்டனர்.

முதன் முதலில் , மத்தியபிரதேசம் , உஜ்ஜயினியில் உள்ள , மஹாகாளேஸ்வரர் என்ற ஜோதிர்லிங்கேஸ்வரர் கோவிலில் தான் தேவர் அடியார்கள் என்ற வரலாறு தொடங்கியது.


                                            மஹாகாளேஸ்வரர் திருக்கோவில்


இந்த காலகட்டத்திற்கு பின் , மன்னர்கள் அதிகஅளவில் திருமணம் செய்வது நிறுத்தப்பட்டது. ,மேலும் பெண்கள் கவுரவமாகவே நடத்தப்பட்டார்கள் .இம்முறையானது எல்லா மன்னர்களும் பின்பற்றினார்கள் . இஸ்லாமியர்கள் வரும்வரை !

சில இஸ்லாமிய படையெடுப்பில் இப்பெண்கள் , மற்றும் மன்னரின் மனைவியர் தவறாக நடப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன., இதற்க்கு பயந்து பலர் தற்கொலை செய்து இருக்கிறார்கள். அதுவும் கூட மொகலாய ஆட்சியில் இல்லை .

அதேசமயம் தமிழ்நாட்டில் , சோழர்கள் அப்பெண்களை , மிகுந்த மரியாதையோடு நடத்தினார்கள் . அவர்களுக்கு என்னென்ன செய்ய பட்டது என்றும் எவ்வளவு நிலங்கள் தரப்பட்டன என்பன போன்ற தகவல்கள் கொண்டுள்ளது சோழர்கள் கால கல்வெட்டுகள் .
ராஜராஜ சோழன் காலத்தில் மட்டும் 400 பெண்கள் நாட்டியம் ஆடி இருக்கிறார்கள்.

தவறான வாழ்க்கையின் துவக்கம் :

கிருஷ்ணதேவராயர் ஆட்சிக்கு பிறகு , இஸ்லாமியர், பிரிட்டிஷார் , மற்றும் போர்த்துகீசியர்கள் போன்றோரின் வருகை நம் நாட்டை புரட்டி போட்டது அனைவரும் அறிந்ததே ! இவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?

அவர்களின் சொத்தை எல்லாம் பறித்து கொண்ட பிரிட்டிஷார் , அவர்களை தவறாக பயன்படுத்தினர். அவர்களின் விருந்தாளிகளுக்கு பரிசாக மாற்றினர் .

தேவர் அடியார்களாகிய இருந்த , தலித் சமுதாய பெண்கள் மிகுந்த துன்பத்தை அனுபவித்தனர். அதிலிருந்தது விட , கிறிஸ்தவ மதம் மாற கட்டாயப்படுத்தப்பட்டனர்.

மேலும் , மேலும் நசுக்கப்பட்டனர். பல பெண்கள் , வீதிகளில் பிட்சை எடுத்தனர். வீதிகளில் நடனம் ஆடினார். தவறான தொழிலும் புரிந்தனர்.
வறுமை தவறுக்கு வழி செய்தது.

1919 ம் ஆண்டு தேயோசோபிக்கால் சொசைட்டி நடத்திய நாட்டிய நிகழ்ச்சி ஒன்றில் ஒரு தேவர் அடியார் ஆடுவதை பார்த்த

ருக்மணி தேவி எனும் பிராமண பெண், தானும் அந்த நடனத்தை கற்று கொள்ளவேண்டும் என்று அடம் பிடித்து கற்று கொண்டார். ஆனால் அது தேவர் அடியார்கள் ஆடிய சதுர் ஆட்டம் அல்லவா , பார்ப்பவர்கள் என்ன சொல்வார்கள் ?

பெயர் மாற்றப்பட்டது .
பரதநாட்டியம் உருவானது . அன்றுதான் பரதநாட்டியம் என்ற பெயரே வைக்கப்பட்டது. அதற்குள் அதற்கு ஒரு புராணமம் எழுதி விட்டார்கள் . இது பாரத முனி கொடுத்தது என்று ! அபத்தம் !

உடை அமைப்புகளை மாற்றினார். இசை கருவி வாசிப்பவர்களை எப்படி எப்படி  அமர வேண்டும் என்று மாற்றி அமர வைத்தார்.




அவர் வெள்ளைக்காரனாகிய ஜார்ஜ் அருந்தலே என்பவரை மணந்து கொண்டார். அவர் தான் லண்டன் Animal Welfare Board ன்  தலைவர்.மிகுந்த செல்வாக்கு ஆங்கிலேயர்கள் மத்தியில்! அதன் பிறகு  வேலை துரிதமாக நடந்தது . கலாஷேத்ரா ஆரம்பிக்கப்பட்டது. அன்னிபெசன்ட் மற்றும் பல ஆங்கில பெண்மணிகள் உதவி புரிந்தனர். பிரமாணமும், பிரிட்டிஷும் இணைந்தது .

முழுமையாக நாட்டியம் கைமாறியது. இனியும் தேவர் அடியார்கள் இருப்பது ருக்மணிக்கு பிடிக்க வில்லை . 1935 ல் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது என்று அறிவிக்கப்பட்டது. இனி அவர்கள் வேறு வேலை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டார்கள் . ஆனால் எந்த வேலையும் எவரும் தரவில்லை . தொடர்ந்து நடனம் ஆடினார்கள் .


பின் 1947 ம் முத்துலட்சுமி ரெட்டி , தேவதாசி முறை சட்ட படி குற்றம் என்று அறிவித்தார். ஆனால் 1949 ம் தஞ்சாவூர் பாலசரஸ்வதி ( வீணை தனம்மாள் அவர்களின் பேத்தி , தேவதாசி பரம்பரையை சேர்ந்தவர்.) ருக்மணியின் செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார் . என்ன பயன் ? ருக்மணி இந்திய அரசின் , Animal Welfare Board யின் தலைவியாக நேரு அவர்களால் 1962 ல் அறிவிக்கப்பட்டார். அப்போ விதைத்த விதைதான் ஜல்லிக்கட்டு போராட்டம் .

ஆனால் ருக்மணியின் செல்வாக்கை அரசுதான் உயர்த்தியது. வெளியில் தேவதாசிகளின் நடனம் தான் செல்வாக்கோடு இருந்தது. இது பிராமண சமுதாயம் விரும்பவில்லை. எல்லா திரைப்படங்களிலும் , இழிவானவர்களாக சித்தரிக்க பட்டாட்கள் . அவர்கள் வாழ்க்கை , ரஜினி , கமல் போன்றோரால் விமர்சிக்கப்பட்டது. ( எதோ சினிமாவில் உள்ளவன் எல்லாம் யோக்கியன் போல ) பிறகு , அம்மக்கள் முற்றிலுமாக நடனத்தை இழந்தனர்.
வறுமை வாட்டும்போது நடனம் சாத்தியமா ?

முற்றிலும் பிரமாணம் அதிகாரம் செய்து திருடியது தமிழ் நடனத்தை , இசையை !

சதுர் நடனம் தன வாழ்வை தேவர் அடியார்களோடு சேர்ந்து இழந்தது !

இன்று தேவர் அடியார்களின் நிலை :

தமிழ்நாட்டில் முற்றிலும் இல்லை என்று கூறி , அரசு அம்மக்களையே அழித்து விட்டது.

கர்நாடகத்தில் , இம்மக்கள் கோவில்கள் கழுவி விட, சுத்தம் செய்ய போன்ற வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 16000 ரூபாய் வரை அரசு சம்பளம் கொடுக்கிறது.

ஆந்திராவில் அரசு 20000 ரூபாய் வரை சம்பளம் கொடுக்கிறது. அதே கோவில் பணிகளுக்காக !

மஹாராஸ்ராவில் , சுமார் 1735 பேர் 8000 ரூபாய் பென்ஷனாக வாங்குகின்றனர்.

ஒடிசாவில் , பூரியில் வாழ்ந்த ஒரு பாட்டி இருந்த பிறகு , முற்றிலும்
ஒழி க்கப்பட்டுவிட்டதாக அரசு கூறுகிறது.

தெலுங்கானாவில், மட்டும் இப்போதும் பொட்டுக்கட்டிவிடும் வழக்கத்தின் அடிப்படையில் சுமார் 80000 பெண்கள் இருக்கின்றனர். புதிய அரசு இது .பொறுமையாகத்தான் நடவடிக்கை எடுக்கும் .என்று கூறப்படுகிறது.

ஆமா , பொட்டுக்கட்டி விடுவது என்றால் என்ன ?


எங்கிருந்து இந்த பழக்கம் வந்தது ?


சிறு வயதிலேயே 8 முதல் 15 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளை , கோவிலில் விட்டுவிடுவது. அவர்கள் அப்பெண்ணுக்கு தாலி கட்டி , அவளை அந்த கோவிலில் உள்ள தெய்வத்தின் மனைவி என்று அறிவிப்பார்கள் . அதன் பிறகு , ஊரில் பெருசுகள் எல்லாம் அந்த பெண்ணை பயன்படுத்தி கொள்ளும்.

ஊரில் உள்ளவர்கள் விவசாய வேலைக்கு அழைத்து செல்லலாம் . வீட்டு வேலைக்கு அழைத்து செல்லலாம். ஆனால் சம்பளம் தர வேண்டியது இல்லை. ஒரு வேலை சாப்பாடு . அதுவும் கூட தேவை இல்லை . அவர்கள் பிட்சை எடுத்து கொள்ள வேண்டும் .

இன்றும் இதே நிலைதான் தெலுங்கானாவில் உள்ளது. இது கொடுமை அல்லவா ?

கோவிலில் நடனம் ஆடும் பெண்கள் வேறு ! ஆனால் இவ்வாறு உருவாக்கப்படும் பெண்கள் வேறு ! ஆனால் இருவரையும் ஒன்றென கூறி , நாட்டியதை திருடி , பெண்குழந்தைகளை கேவலப்படுத்தும் முறைகளை எங்கிருந்து கற்றுக்கொண்டோம் .

நமக்கெல்லாம் பெண் விடுதலை , பெண் சுதந்திரம் என்றெல்லாம் வியாக்கியானம் சொல்லி தந்ததே அந்த வெள்ளை அரசு கொடுத்த பரிசு இது .
2011 ம் ஆண்டு போலந்து நாட்டில் ஒரு கன்னியாஸ்திரி ஹரே ராம , ஹரே கிருஷ்ணா என்ற அமைப்பின் மீது வழக்கு தொடர்ந்தது.
வழக்கு விசாரணைக்கு வந்தது .

நீதிபதி : என்ன வழக்கு ?
 கன்னியாஸ்திரி : ISKON அமைப்பை தடை செய்ய வேண்டும் .

என்ன காரணம் ? இது நீதிபதி

அதில் கிருஷ்ணன் 16000 மனைவியரை திருமணம் செய்து கொள்கிறார். இது பண்ணை இழிவு படுத்தும் விதமாக உள்ளது. இது கன்னியாஸ்திரி .

சரி தானே , இதற்க்கு உங்கள் கருத்தென்ன ,  ISKON அமைப்பின் வழக்கறிஞரை பார்த்து கேட்கிறார் நீதிபதி .

 ISKON வழக்கறிஞர், அந்த கன்னியாஸ்திரியிடம் கேட்கிறார்,

நீங்கள் கன்னியாஸ்திரி ஆகும் போது என்ன உறுதிமொழி எடுப்பீர்கள் ? அதை கொஞ்சம் சத்தமாக கூற வேண்டும் . அது ஒன்று மட்டும்தான் எனது கேள்வி . முடித்து விட்டார்.

சத்தமாக கூறினார். வழக்கு முடிந்து விட்டது.  ISKON அமைப்பை தடை செய்ய இயலாது என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

என்ன உறுதிமொழி தெரியுமா ?

கன்னியாஸ்திரியாக மாறும் நான் இன்று முதல் ஜீசஸின் மனைவியாகிறேன் .

என்பது. எனில் ஏசு கிறிஸ்துவிற்கு எத்தனை மனைவிகள் ?

1965 ல் மட்டும் அமெரிக்காவில் 200000 பேர் கன்னியாஸ்திரிகளாக இருந்துள்ளனர்.
இன்று  அமெரிக்கா , ஐரோப்பா எல்லாம் கூட்டினாலும் 50000 கூட வராது.

காரணம் ? அதை விடுங்க ! யாருக்கும் சேவை செய்ய புடிக்கல !

கன்னியாஸ்திரியாக மாறும் நாள் அன்று , மணப்பெண் போல் அலங்காரம் செய்யப்பட்டு , தேவாலயம் அழைத்தது வரப்பட்டு , அங்கு அவர்களுக்கு மோதிரம் அணிவிக்கப்படுகிறது. யார் போடுவார்? தேவாலயத்தில் உள்ள பாதிரியார் .




இப்போ , நம் நாட்டின் பொட்டு கட்டி விடும் பழக்கத்தை ஒப்பிட்டு பாருங்கள் .
இரண்டும்  ஒன்று என்பது எல்லோருக்கும் புரியும் .
எனில் இந்த பழக்கம் யார் நமக்கு தந்தது ?
ஆங்கிலேயர்கள்  தந்த கொடிய வழக்கம் இது!

இதில் நாட்டியம் ஆடிய பெண்களும் கலக்கப்பட்டு , மிகப்பெரிய சமுதாய சீரழிவை செய்து விட்டு , பெண் விடுதலை , பெண் சுதந்திரம் இதெல்லாம் பேசுகிறது ஆங்கில கலாசாரம். என்ன கொடுமை இது ?

கன்னியாஸ்திரிகள் நிலை என்ன என்று தெரியுமா ?

உள்ளே ஆயிரம் நடக்கிறது. எல்லாம் ரகசியம் . ஆனால் அதையும் மீறி கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் , AMEN ( தி ஆட்டோ பிரோக்ராபி ஆப் எ நன் )  புத்தகம் எழுதி உள்ளார்.
அதில் ஒரு கன்னியாஸ்திரியை உடல் ரீதியாக என்னென்ன கொடுமைக்கு ஆளாக்குகிறார்கள் என்று எழுதி உள்ளார். முற்றிலும் தேவதாசி முறை !




மற்றொரு கன்னியாஸ்திரி , கூறுகையில் , குளிக்கும் போது அதை படம் எடுப்பது, இன்னும் ஏகப்பட்ட விஷயங்களை அவர் பதிந்து இருக்கிறார்.மேலும் அவர் , ஒரு நாள் கன்னியாஸ்திரி உலகம் வாயை திறக்கும் . அன்று ஒரு சுனாமி உருவாகவும் என்றும் கூறுகிறார்.



எந்த மதமாக இருந்தாலும் பெண்ணை இழிபடுத்துவது மிக கொடுமை !

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ,
தமிழர்கள் இழிவு செய்வது மிக அபத்தம் !

நம் நடனம் திருடப்பட்ட , ஒரு சமுதாயம் இழிவு படுத்தப்பட்டு , இன்றும் இந்த கேவலத்தை சுமந்து கொண்டு வாழ்வதா ?

சிந்திப்பீர் தமிழர்களே !
நம் கலாசார உரிமைகளை மீண்டும் உயிர்ப்பிப்போம்.!






No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...