அலையாத்தி காடுகள் - சதுப்பு நில காடுகள் - சுந்தரவன காடுகள்
பொக்கிஷங்கள்
சதுப்பு நில காடுகள் என்று வழங்கப்படும் காடுகளுக்கு, புராண இதிகாச காலங்களில் வழங்கப்பட்ட பெயர் சுந்தரவன காடுகள் .
இன்றைய தலைமுறைக்கு புரிய வேண்டுமானால் இதன் பெயர் Mangrove Forest .
இதில் என்ன சிறப்பு ?
நதிகளை இணைத்து விடலாம் , விவசாயம் செழிக்கும் என்போர் கண்டிப்பாக இந்த காடுகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் .
நாம ஏரிகளை , குளங்களை அழித்து , அதன் மீது வீடு கட்டி விட்டு , கடலுக்கு செல்ல வேண்டிய நீரை தடுப்போம் என்பது எத்தனை மடத்தனம் என்பதை விளக்கும் அழகிய காடுகள் தான் இந்த சதுப்பு நில காடுகள் .
இந்த அலையாத்தி காடுகளை பற்றி முனைவர்.கு.இளங்கோவன் அவர்கள் கூறியதை உயிர் இதழ் பதிவிட்டு இருக்கிறது .
அதில் இருந்து சில வரிகள் :
நன்னீரும் , கடல் நீரும் சேரும் இடங்களில் , கடலின் அலைகளை தாங்கி கொண்டு , நல்ல திடமாக நிற்க கூடிய மரம் தான் இந்த சுந்தர வனக்காடுகள் .
இந்த நன்னீரும் , கடல் நீரும் இணையும் இடத்தில உள்ள இந்த நீருக்கு உவர் நீர் என்று பெயர் . இந்த உவர் நீரில் 69 வகையான அலையாத்தி மரங்கள் வளர்கின்றன .
இதில் தமிழகத்தில் 17 வகையான மரங்கள் உள்ளன .
இதன் சிறப்பு என்னவென்றால் , உப்பு நீரை விடுத்து நல்ல நீரை மட்டும் உறிந்து வாழக்கூடியது .
அதேபோல் கூவம் போன்ற இடங்களில் கூட கழிவு நீரை விடுத்து , நல்ல நீரை உறிந்து வளர கூடியது .
மேலும் இந்த மரங்கள் பற்றி பல அரிய தகவல்களை தருகிறது உயிர் இதழ் .
தமிழகத்தின் தற்போதைய மாசு பிரச்னை , மண் வள குறைபாடு மற்றும் காற்று , நீர் மாசுபாடு களை களைய நல்ல திடமான காடுகளை உருவாக்க வேண்டும் .
அப்படி உருவாகும் பட்சத்தில் தான் தமிழக பிரச்சனைகள் தீரும் .
அப்படி எல்லா சூழ்நிலையும் வளரக்கூடிய காடுகள் இந்த அலையாத்திக்காடுகள் மட்டுமே !
தமிழக நீர் வளங்களை காக்க நதிகளை இணைத்தால் , அது இந்த சுந்தரவன காடுகளை அழித்து விடும் . அங்கு தான் முற்றிலும் பிரச்னை பெரிதாக ஆரம்பிக்கிறது .
எனவே நதிகளை இணைத்து கடலுக்கு நீர் செல்வதை தடுப்பது மிக தவறு !
அலையாத்திக்காடுகளை உருவாக்குவதே சிறந்த வழி !
இது தொடர்பாக மேலும் விவரம் அறிய உயிர் இதழ் படியுங்கள் !
அலையாத்தி காடுகள் ஆய்வாளர்களை தொடர்பு கொள்ளுங்கள் !
இந்த இதழ் பெற தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 72992 92364
20.2.2018

No comments:
Post a Comment