Monday, 5 February 2018

பக்தி இயற்கையை அழிக்குமா ?


சபரி மலை , பழனி மலை , மேல்மருவத்தூர், வேலூர் அம்மா , வேளாங்கண்ணி ,என்று நம் சுயலாபத்திற்காக , பெரிய பணக்காரன் ஆகணும் என்ற உயர்ந்த லட்சியத்தோடு இறைவனை தேடி செல்லும் பக்த கேடிகளே ,
தயவு செய்து , பிளாஸ்டிக் பொருள்களை மலைகளிலோ , கடலிலோ கொட்டாதீர்கள் .
உங்களால் அங்கு வாழும் உயிர்கள் அழிகின்றன .

2004 சுனாமி யில் அதிக நஷ்டம் ஏற்பட மூலகாரணம் , வேளாங்கண்ணி விரிவாக்கப்பட்டதுதான் . சுற்றிலும் பாதுகாப்பிற்காக இருந்த மரங்களை அழித்து தான் , பக்தர்களுக்காக வேளாங்கண்ணி விரிவாக்கப்பட்டது. 

இன்று திருவண்ணாமலை , சுற்றிலும் கிரிவலத்திற்க்காக , பல்வேறு வகையான மரங்கள் அழிக்கப்படுகின்றன .

சமயபுரத்தில் , ஒரு ஆறே மூடப்பட்டு பக்தகோடிகளுக்காக ஏதோதோ வேலை நடக்கிறது.

தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் வழி நெடுகிலும் எவ்வளவு புண்ணை மரங்கள் இருக்கும் தெரியுமா ? சமுத்திரக்கரை நிறைய நீரோடும் தெரியுமா ? அத்தனையும் பக்தகோடிகளுக்காக சாலைகள் விரிவாக்கம் என்ற பெயரில் அழிக்கப்படுகிறது.


இயற்கையை அழித்து பக்தகோடிகளுக்காக வேலை நடக்கிறது என்றால் தெரிந்து கொள்ளுங்கள் , 
அங்கு நடப்பது வழிபாடு அல்ல . 
வியாபாரம் !
ஆம் பக்தி என்பது வியாபாரம் .
போக்குவரத்து தொழில் வளர்கிறது . தேவை இல்லாமல் உயோகிக்கப்படும் பெட்ரோல் கூட , இயற்கை அழிவே !
ஹோட்டல்கள் பணம் பார்க்கிறது . அந்த கட்டுமானம் கூட மரங்களை அழித்து தான் !
கோவில்களில் , வழிபாடும் நேரத்தை விட அதிக நேரம் , ஷாப்பிங் நேரம் .
அதன் பெயர் , சொல்லி தெரியவேண்டியதில்லை .

நீங்கள் இறைவனை வணங்கும்  நுகர்வோராக இருக்க ,
இயற்கை அழிக்கப்பட்டால் ,
எந்த இறைவனும் உங்களுக்கு ஆசி வழங்கமாட்டான் . 
சாபம் தான் கொடுப்பான் .

எந்த ரிஷி முனிவராவது இறைவனை தேடி கோவில்களில் தவம் செய்த கதையை எங்காவது நீங்கள் கேட்டது  உண்டா ? 
காடுகளுக்குள் , நீருக்குள் , நெருப்பிற்குள் தான் தவம் செய்வார்கள் .

ஆனால் நவீன கால பக்தர்கள்தான் , காட்டையும் , நீரையும் அழித்து விட்டு இறைவனை தேடுகிறார்கள் .

முதலில் எப்போப்பார்த்தாலும் , கோவிலுக்கு போகணும்னு அவசியம் இல்லை .
அப்படி நீங்க அடிக்கடி கோவிலுக்கு போவது உங்கள் வழக்கம் எனில் , உங்களுக்கு 
கோவில் என்றால் என்ன என்று தெரியவில்லை என்றே பொருள் !

கோவில் பிரசாரம் , 
இயற்கையை அழிக்கும் எனில் அப்படி ஒரு வழக்கம் தேவை இல்லை .



No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...