Tuesday, 6 February 2018

எல்லாம் அவன் செயல் !.

ஏழையும் பணக்காரனும் !

ஏழைகள் என்றால் மிகவும் கஷ்டத்தில் இருப்பவர்கள் .
பணக்காரர்கள் என்றால் மிகவும் சந்தோஷத்தில் இருப்பவர்கள் .

ஏழைகள் என்றால் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் 
பணக்காரர்கள் என்றால் எல்லா போராட்டத்தியும் வேடிக்கை பார்ப்பவர்கள் .

ஏழைகள் என்றால் அடிவாங்கி துன்பப்பட்டு , துயரப்பட்டு , மிதிபட்டு வாழ்வார்கள் 
பணக்காரர்கள் என்போர் வேடிக்கை பார்ப்பவர்கள் .

உண்மை என்ன தெரியுமா ?

ஏழை என்பவன் தான் சம்பாதித்தை அன்றே செலவு செய்து , ஒவ்வொரு நாளையும் ஆனந்தமாக கழிப்பவன் .
பணக்காரன் என்பவன் , அன்றாடம் தன் தேவைகளை சுருக்கி கொண்டு , சேமித்து வைப்பவன்.



ஏழைகள் இருப்பதால் தான் டாஸ்மாக் இயங்குகிறது.
இந்த வருமானத்தை சேமிக்க எந்த ஏழையும் யோசிப்பதே இல்லையே !
மனக்கவலை மறக்க , உடல் வலி குறைய என்று காரணங்கள் பல இருக்க ,
ஒரு நாள் வருமானம் மட்டும் 70 கோடி ரூபாய் . மதத்திற்கு 2100 கோடி ரூபாய் . ஆண்டுக்கு 25200 கோடி ரூபாய் .
இவை எல்லாம் , எதிரில் நின்று சிந்தியுங்கள் , அது ஏழைகளின் சேமிப்பு பணம் . மற்றொருவரின் வருமானமாக மாறுகிறது.
யாரேனும் கட்டாயப்படுத்தினார்களா , நீயே டாஸ்மாக் போய் தான் ஆகவேண்டும் என்று !

நான் ஏழையாக இருக்கிறேன் என்று நாமே , நம் கையிருப்பை எவரிடமோ ஒப்படைத்தால் அதன் பெயர் விதியா ?

பணக்காரன் என்பவன் தான் உண்மையிலேயே ஏழை . அவன் தன வருமானத்தை , தன சுகதிற்காக கூட அனுபவிக்காமல் ,யாரோ முன்னேற , வங்கியில் சேமித்து வைக்கிறான் . தன சுகங்களை கட்டுப்படுத்தி அவன் சேமித்த பணத்திற்கு கூட வரி செலுத்துகிறான் .
அவர்கள் தான் வட்டி வாங்குகிறார்கள் என்று கேட்காதீர்கள் . அது வட்டி அல்ல . இவனை ஏமாற்ற கண்டுபிடிக்க பட்ட திட்டம் \

என்றேனும் , ஏழைகள் தன்னுடைய வருமானத்திற்கு வரி செலுத்தியது உண்டா ? அப்படி என்றால் என்ன என்றே தெரியாது. 

விற்பனை செய்யப்படும் பொருள்களில் மறைமுக வரி எல்லோராலும் செலுத்த படுகிறது. 
 உண்மையில் இங்கு ஏழையும் , பணக்காரனுக்கு ஒன்று தான் .
இவன் ஏழை என்றும் இவன் பணக்காரன் என்றும் , எங்கோ ஒருவரால் தீர்மானிக்கப்படுகிறது.

அந்த ஒருவன் , ஏழை என்பவனிடம் அன்றாடம் எப்படி மகிழ்வாய் வாழ்வது என்று சொல்லி தருகிறான் .
பணக்காரன் என்பவனிடம் , எப்படி சுகத்தை சுருக்கி கொள்வது என்று சொல்லி தருகிறான் .
இருவராலும் அந்த ஒருவனுக்கே ஆதாயம் !

இவன் டாஸ்மாக் கில் கொடுத்தாலும் அவனுக்கு லாபம்தான் !
அவன் வங்கியில் சேமித்தாலும் அவனுக்கு லாபம்தான் !

இந்த ஏழை என்ற வர்க்கம் , எப்போதுமே அந்த ஒருவனுக்கு வேண்டும் .
அப்போது தான் திட்டங்கள் என்ற பெயரில் , சலுகைகள் என்ற பெயரில் ,
இலவசம் என்ற பெயரில் கொள்ளை அடிக்க முடியும் .
எனில் அவன் எப்போதுமே ஏழையாக இருக்க வேண்டும் . அதற்காக தான் , அரசு மதுக்கடைகளை வைத்து , மருத்துவத்தையும் வைத்து , 
தன வாழ்நாளை நீடிக்க வகை செய்து கொள்கிறது.



அதே போல் , பணக்காரன் வரையறை செய்யப்பட்டவன் , வாழ்நாள் முழுக்க ஓடி கொண்டே இருக்கிறான் . சேமிப்பு. இன்சூரன்ஸ் , முதலீடு , பங்குகள் என்று ஓடி ஓடி வாழ்க்கையை தொலைகிறான். 
இவனை இப்படியே வைத்திருந்தால்தான் , அரசுக்கு  மேலும் மேலும் வரி வருமானமும் , இதரப்பிர வகையிலும் வருமானம் கிடைக்கும் .

இந்த அரசு என்பது ஏன் ஏழைகளையும் , பணக்காரனையும் வைத்து விளையாட வேண்டும் ?
ஏழை , பணக்காரன் என்ற இரட்டை மாட்டுவண்டியில் , வண்டி ஓட்டுவது தான் அரசு . பயணிப்பவன் யார் ?

கார்ப்பரேட் எனும் வணிகம் !
இப்போ யோசித்து பாருங்கள் !
ஏழையும் , பணகாரனும் அந்த மாட்டு வண்டியில் சமமாக தானே கட்டப்பட்டு இருக்கிறார்கள் .
இருவரும் ஒன்று தானே !

ஏழைகளை இழிவுபடுத்தும் பணக்காரனும் , 
பணக்காரனை சபிக்கும் ஏழையும் 
ஒன்றுதான் !

இந்த இருவரும் இப்படி இருக்கும் வரைதான் வணிகம் என்னும் பயனாளி 
ஆண்டவனாகவே இருக்க முடியும் !

எல்லாம் அவன் செயல் !.


No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...