Thursday, 24 May 2018

தற்சார்பை நோக்கி நட !

தூத்துக்குடி மட்டும் அல்ல ,
தமிழகத்தையே காப்பாற்ற வேண்டும் என்று முடிவு எடுத்தால் ,
நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான் .

தமிழகத்தில் இருந்து , இனி வருமானம் வரக்கூடாது .
எனில்
வரி செலுத்துவதை நிறுத்த வேண்டும் .
வரி என்றவுடன் எல்லோரும் வருமான வரியை பற்றி மட்டுமே பேசுகிறோம் .
அது ஒரு பெரிய விஷயமே இல்லை .
ஏனெனில் , இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் வருமான வரி செலுத்துவோர் மொத்தம் 5 % கூட கிடையாது .
மறைமுகமாக , நாம் செலுத்தும் GST தான் முக்கிய வருவாய் !



பாக்கெட்டில் , பாட்டிலில் , டியூபுகளில் அடைக்கப்பட்டுள்ள எந்த ஒரு பொருளையும் வாங்காதீர்கள் .
ஏனெனில் அந்த பொருள்களில் தான் வரி சேர்த்து வாங்கப்படுகிறது .
வரி விதித்து அரசுக்கு சேவை செய்வதாக கூறும் உணவகங்களில் உண்ணாதீர்கள் !
அவசர சிகிச்சை அல்லாத , வேறு எந்த ஒரு விஷயத்திற்கும் மருத்துவமனை தேடாதீர்கள் . ஒவ்வொரு மருந்து பொருளொடும் , நம் பணம் , முதலாளிகளின் திமிரை அதிகரிக்கிறது .
கட்டாயம் அல்லாத எந்த ஒரு காப்பீடும் போடாதீர்கள் !
கட்டாயம் அல்லாத சேமிப்பு என்ற பெயரில் , உங்கள் பணத்தை கொண்டு முதலாளிகளை வளர்க்காதீர்கள் !
அந்த வரி பணமும் , விற்பனை விலையும்தான்  திட்டமும் தீட்டப்
உதவுகிறது .

உள்ளூரில் உள்ள விற்பனையாளர்களை தேடுங்கள் !
உங்கள் அருகாமையில் மாடு வைத்து இருப்பவரிடம் பால் வாங்குங்கள் !
( பாக்கெட் பால் கூட வேண்டாம் )
உங்கள் வீட்டில் , காய்கறி , பழம் தரும் மரங்களை வளருங்கள் !

ஏனெனில் ,
நாளை நாமும் 144 க்கு கீழ் வரலாம் .
கற்பக விருட்சமும் ( பனை மரம் ), காம தேனுவும் ( எருமை மாடுகள் ) இருந்த , கொற்கை
தூத்துக்குடி யாக மாறி ,
இன்று 144 எதிர்கொண்டு நிற்கிறது .
நாளை நாமும் ,
ஏன் என்ற கேள்வி இல்லாமல் , சட்டத்திற்குள் அடைக்கப்படலாம் .அல்லது சூழ்நிலைகள் உருவாக்கப்படலாம் .

தற்சார்பு என்று பலபேர் கத்தியத்தின் அர்த்தம் ,
இன்று தூத்துக்குடியில் !
நாளை நம்ம ஊரிலும் !


No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...