Saturday, 26 May 2018

வளர்ச்சி தேவை இல்லை

தூத்துக்குடி ஸ்டெர்லிட் ஆலையை மூடி விட்டால் , காப்பருக்கு என்ன செய்வீர்களாம் ? உங்கள் வீட்டில் உள்ள அணைத்து மின்சாதன பொருள்களும் இதனை கொண்டுதான் இயங்குகிறது தெரியுமா ? காப்பர் உடம்புக்கு நல்லது என்று சொன்னால் ஏற்று கொள்கிறீர்கள் ! ஆனால் ஆலை மட்டும் வெண்டோமோ என்று
அறிவாளி தனமாக கேள்வி கேட்கப்பர்வர்களை காணும் போதும் ,

மீத்தேன் இல்லாமல் எப்படி , சமையல் செய்வீர்களாம் என்று கேள்வி கேட்பவர்களை காணும் போது ,

வளர்ச்சி இன்றி போனால் தமிழகம் அழிந்து விடும் என்று கூறும் போதும் ,

இத்தனை பெரிய முட்டாள்களோடு , இந்த தமிழகம் வாழ்கிறதே என்று அருவருப்பாக உள்ளது .

20 ஆண்டுக்கு முன்பு வந்தது தான் இந்த ஆலைகள் , காஸ் , வளர்ச்சி எல்லாம் !

பல ஆயிரம் ஆண்டுகளாக ,
இதே மீத்தேன் , இதே தாமிரம் எல்லாம் பயன்படுத்திய இனம் இது !
அவை எல்லாம் இயற்கை வழி !

அதன் பயன் வணிகம் அல்ல ! எங்கோ உள்ள லண்டனில் , உள்ள பணக்காரன் வாழ அல்ல !
பின்விளைவு தராத அறிவியலை பயன்படுத்திய இனத்திற்கு ,
நோய்களோடு வரும் வளர்ச்சி தேவை இல்லை !



No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...